Tuesday, 4 December 2018

அரசியல் கட்சிகள் அயோக்கியத்தனம்

“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தந்த மத்திய அரசை கண்டித்து போராட்டம்.”
-அயோக்கியத்தனங்கள் 9.

அயோக்கியத்தனம் 1:

அணை கட்ட அனுமதி தரப்படவில்லை. ஆய்வு செய்யவே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதை மறைப்பது.

.

அயோக்கியத்தனம் 2:

அணை கட்ட அனுமதி தருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் ஒப்புதலில்லாமல், ஆணையத்தின் அனுமதியில்லாமல், அணை கட்ட முடியாது, என்பதை மறைப்பது.

.

அயோக்கியத்தனம் 3:

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு குந்தகமில்லை, எனும் வரையில்தான் மத்திய அரசு அனுமதி தர முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் சார்ந்திருக்கும் நதியின் குறுக்கே, அதுவும் கீழ் மடை மாநிலமல்லாத மாநிலத்தில், அணை கட்டுவதற்கு, சுற்றுச் சூழல் அனுமதி மட்டும் போதாது. சுருக்கமாக சொன்னால், மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி தந்தாலும், அதை மட்டும் வைத்துக் கொண்டு, நாக்கு வழிக்கத்தான் முடியும். பிற மாநில அரசுகளும், ஆணையமும் ஒப்புதல் தந்தால்தான் அணை கட்ட இயலும், என்பதை மறைப்பது
.
.

அயோக்கியத்தனம் 4:

கர்நாடகத்தில், ஆட்சியில் கூட்டணியில் இருந்து கொண்டு, ஆய்வு செய்ய அனுமதி கோரிய காங்கிரஸ் கட்சியையும் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்வது.

.

அயோக்கியத்தனம் 5:

கர்நாடகத்தில், ஆட்சியில் கூட்டணி அரசுக்கு தலைமையேற்று நடத்தும் தேவே கௌடா கட்சியுடன், லோக் சபா தேர்தலில், மஹா மெகா கூட்டணி அமைத்து போட்டியிட வெட்கம், கூச்சம், மானம் சற்றுமேதுமில்லாமல், முதுகு சொறிவது.

.

அயோக்கியத்தனம் 6:

முல்லை பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் அனுமதித்த தமிழகத்துக்கான உரிமையை அனுபவிக்க இயலாமல் தொல்லைகள் கொடுத்து, தமிழக பொதுப்பணித்துறை எஞ்சினியர்களை அவமதித்தும், அனுமதி மறுத்தும் அயோக்கியத்தனம் செய்யும் கம்யூனிஸ்டுகளை, மேடையில் அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு, “தமிழகத்தின் உரிமையை காக்கப்போகிறேன்”, என்று சொல்வது.

.

அயோக்கியத்தனம் 7:

மக்களை ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும் நினைத்து, ஊடக பலத்துடன், அவர்களை முட்டாள்களாகவும் தேச விரோதிகளாகவும் ஆக்கும் முயற்சிகளைக் கைவிடாமல், தலைமுறை, தலைமுறையாய் தொடர்வது.

.

அயோக்கியத்தனம் 8:

அணையே கட்டினாலும், தமிழகத்துக்கான பங்கீடு குறையாத வரையில், தமிழனுக்கு பாதிப்பில்லை. தீர்ப்பாயத்தின் முடிவை முறையாக அமலாக்கம் செய்து, தமிழக நலனை உறுதி செய்வதே, முதன்மை நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவனின் செயலுக்கெல்லாம் தடை கோரும் வெறுப்பு மனநிலையை வளர்க்க முயல்வது, அயோக்கியத்தனம் 8.

.

அயோக்கியத்தனம் 9:

இந்த உண்மைகளை மக்களிடம் மறைத்து, அவர்களை பொதுக்கூட்டத்துக்கு வரவழைத்து, அவர்களுடைய நேரத்தையும், பொருளையும் வீணடித்து, ஏழைகளின் பிழைப்பை கெடுப்பதும் அயோக்கியத்தனம்தான்.

மேடையேறி, மோடிஜி மீது வெறுப்பை உமிழ்ந்து, தங்களுடைய சுய இன்ப அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காக, மக்களை பகடைக்காயாக்குவது, அயோக்கியத்தனங்களிலேயே, மஹா பெரிய அயோக்கியத்தனம்..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...