Tuesday, 4 December 2018

ஊடகங்கள் பேச மறுக்கும் #பிரதமர்_மோடிஜி_சர்க்காரின்_சாதனைகள்

ஊடகங்கள் பேச மறுக்கும் #பிரதமர்_மோடிஜி_சர்க்காரின்_சாதனைகள்

சுதந்திரம் பெற்றப் பின் கடந்த 70 ஆண்டுகளாக செய்யப்படாத, குறிப்பிடத் தகுந்த 15 செயல்பாடுகள் சென்ற சில வாரங்களில் #பிரதமர்_மோடிஜி_அரசால் செய்யப்பட்டுள்ளன.  அவை ஊடகங்களால் சரிவர கண்டு கொள்ளப்படவில்லை என்பதால் அவற்றை மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டியது கடமையாகின்றது. அவை கீழே வரிசை எண்களுடன் தரப்பட்டுள்ளன.

1) அமெரிக்கா ஈரானின் மீது ஏற்கனவே பொருளாதார தடை விதித்திருந்தது. ஆனால்  இந்தியா அதை கண்டு கொள்ளாமல் தனது எண்ணெய் கொள்முதலை புதிய ஒப்பந்தத்துடன், சபஹார் துறைமுகத்தை பயன்படுத்தி கடந்த 3 வாரங்களாக மேற்கொள்கிறது. இந்த விவகாரத்தைக் கண்டு அமெரிக்கா இந்தியா மீது கோபம் கொள்ளும் என்று உலக நாடுகள் நினைத்திருந்த நிலையில் அமெரிக்கா இந்த விஷயத்தை மிகவும் மென்மையாகவே அணுகத் தொடங்கியுள்ளது. அதே சமயம் சபாஹார் துறைமுக பயன்பாட்டிற்கு விலக்கும் வழங்கப்படுகிறது. #பிரதமர்_மோடிஜி தலைமையிலான இந்த ராஜ தந்திர நடவடிக்கைகளை உலக நாடுகள் அதிசயத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளன.

2) உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் அமெரிக்க வல்லாண்மைக்கு பயந்து பொதுவாக அமெரிக்க டாலரின் மதிப்பின் அடிப்படையில் தான் சர்வதேச வாணிபங்களை மேற்கொண்டு வருகின்றன. நமது இந்தியாவும் சுதந்திரம் பெற்ற பின்பு கடந்த 70 ஆண்டுகளாக இதே வழியைத்தான் பின்பற்றி வருகிறது. ஆனால் மோடி அரசு இந்த முறையை அகற்றும் முதல் படியாக ஈரானுடன் நமது இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த சில வாரங்களாக வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.  அதனால் நமது நாட்டிற்கு பயன்கள் அதிகம் ஆகும். இதைக் கண்டு அமெரிக்கா உள்ளுக்குள் அச்சம், கோபம் கொண்டாலும் உண்மையில் பல நாடுகள் இந்தியாவை கவுரவமாக பார்க்கத் தொடங்கியுள்ளன.

3) #பிரதமர்_மோடிஜி_தலைமையில் இந்திய அரசு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்ததன் விளைவாக அசாம்-அருணாசல பிரதேசத்துக்கு இடையே மிகப்பெரிய ரயில் பாலம் அமைத்ததால் 600 கி.மீ.பயணதூரம் 40 கிலோமீட்டராக குறைந்தது. இதனால் இரு மாநிலத்துக்கும் பல நூறு கோடி ரூபாய்க்கு எரிபொருள் செலவு மிச்சம்.

4) இந்தியக் கடற்பகுதியில் இருந்து முதன்முறையாக நதி வழிப் போக்குவரத்து மற்றும் நிலம்-  நீர் இடையேயான போக்குவரத்து தொடங்கியது, வாரணாசி நதியில் முதன் முறையாக ஒரு துறைமுகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5) பெட்ரோல் விலையை ஏறும்போது எல்லோரும் சத்தமிடுவார்கள், ஆனால் குறையும் போது, யாரும் கவனிப்பதில்லை.  இன்று டெல்லியில் பெட்ரோல் ₹75 ஐ நெருங்குகிறது. காங்கிரஸ் கடைசியாக ஆட்சியிலிருந்து வெளியேறியபோது எந்த விலையில் பெட்ரோல் விற்றுக் கொண்டிருந்ததோ அந்த விலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த ஊடகமாவது இந்த நல்ல செய்தியை கண்டு கொள்கிறதா ?

6) எல்லை பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மலைப்பகுதிகள். பனி மூடிய இந்த மலை பகுதிகளை நவீன வசதிகளை ஏற்படுத்தி தற்போது இந்திய இராணுவம் தீவிரமாக தங்கள் தலைமையகத்திலிருந்தே நேரடியாக கண்காணித்து ஊடுருவும் பயங்கரவாதிகளை சுட்டுத் தள்ளும் உத்தரவை பிறப்பித்து சில வாரங்களாக  நடவடிக்கை எடுத்து வருகிறது.

7) காங்கிரஸ் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு வெளியேறிய போது இந்தியாவின் மின் பற்றாக்குறை 30 சதவீதம் வரை இருந்தது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பல மணி நேர மின்வெட்டு. ஆனால் இப்போது அது சரி செய்யப்பட்டு மின்சாரம் கையில் மிச்சமாக உள்ளது. இன்றைய இந்தியாவின் மின்சாரம் வழங்கும் தரநிலை உலகளவில் 99 வது இடத்திலிருந்து 73 இடங்கள் முன்னேறி தற்போது 26 வது இடத்தில் உள்ளது என்பது #மிகப்பெரிய_சாதனை

8) அடுத்த 6 மாதங்களில் 14 சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  அதன் மூலம் இந்தியா முழுவதும் பரவலாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

9) சென்னையில், ஹூண்டாய் கார் கம்பெனி மின்சார கார் உற்பத்திக்காக புதிய ஆலை அமைக்க உள்ளது. அதற்கான பூர்வாங்க அனுமதியை மத்திய அரசு தர முடிவு செய்ததுடன் பேட்டரி வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பை சென்னை உட்பட நாடெங்கும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. 2017-18ம் நிதியாண்டில் விற்பனையான மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 56,000ஆக உயர்ந்துள்ளது.

10) Flexi கட்டணம் உள்ள சில ரயில்களில் மார்ச் 19 முதல்  கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் இலட்சக்கணக்கான பயணிகள் பயன் பெறுவர்.

11) ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக மாதம் 85000 கோடி முதல் 95000 கோடி வரை வந்தது, கடந்த மாதம் அது 1 லட்சம் கோடியாக உயர்வை எட்டியது95 சதவீத உள்ளீட்டுவரி அடுத்த மாதம் சரியாகி  விட்டது. கடந்த மூன்று மாதங்களில் குறைவான சரிவுக்கான மாநில இழப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.

12) இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக சிக்கிம் மாநிலத்தில் பசுமை சூழல் கொண்ட விமான நிலையத்தை திறந்தது. சர்வதேச விமான குழுவினரால் மிகச்சிறந்த விமான நிலையமாக கருதப்படுகிறது.

13) சர்தார் வல்லபாய் படேல் சிலை திறந்த முதல் வாரத்தில்  சிலையை பார்ப்பதற்காக  விற்ற டிக்கெட்டுகள் மூலம்  2.1 கோடி ரூபாய் வசூலானது. இதன் மூலம் மக்கள் இந்த சிலைக்கு அகில இந்திய அளவில் உள்ள மக்களின் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்.

14) மும்பை உள்ளூர் ரயில் நெட்வொர்க் அடுத்த 5 முதல் 6ஆண்டுகளில் முற்றிலும் சீரமைக்கப்பட உள்ளது.

15) வெளிநாடுகளில் பதுங்கியுள்ள  எதிரிகளின்  சொத்து ஏலம் விடப்பட்டு விற்கப்படும்.  இதன்மூலம் இந்தியாவிற்கு 1 லட்சம் கோடி கிடைக்கும்.

இது போன்ற இன்னும் நிறைய விஷயம் உள்ளது ஆனால் ஊடகங்கள் குற்றம், அழுக்கு அரசியலைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். மக்களுக்கு தேவையான விஷயங்களை பெரும்பாலான ஊடகங்கள் தொடுவதில்லை. பொழுது போக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த கதைகள், பேட்டிகள், சாதி பிரிவினை, தேச பிரிவினை பேசும் உள்ளூர் அரசியல்வாதிகளின் சுய நலம் மிக்க பேட்டிகளையே பரப்பி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி , செய்திகளை உண்மைக்கு மாறாக ஊதி பெரிதாக்குகிறார்கள். அறிவார்ந்த மக்கள் பெருமைப்படும் மேற்கண்ட 15 நிகழ்வுகள் மூலம் நிச்சயமாக இந்தியா ஒரு சிறந்த நாடாக முன்னேறும்.

#ஜெய்மோடிசர்க்கார்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...