பிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் பேராபத்தில் இருந்து காப்பாற்றப்படும் இந்தியா : பேசப்படாத பக்கங்கள்
நாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகளும், ஒப்பந்தங்களும் ஒவ்வொரு மாதமும் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் மிக ஆழமாக பரவிக் கொண்டு இருக்கிறது.
பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென் பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் நேரு யாணுடி தளவாடம் சம்பந்தமான ஆலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடகிழக்கு, வடமேற்கு இந்தியாவில் பாதுகாப்பு அற்ற நிலை. இந்தியாவின் தென்பகுதிகள் குறிப்பாக தமிழகம் எனக் கருதியதால்தான் ராணுவம் தொடர்பான தொழிற்சாலைகள் அனைத்துமே தென்னகத்தில் அமைக்கப்பட்டன. இதனை மனதில் கொண்டுதான் சீனா இலங்கையைத் தனது தளமாக அமைக்கிறது. இலங்கையிலிருந்து தென்னகத்தில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளையும், விண்வெளி சோதனை நிலையங்களையும், அணு உலைகளையும் தாக்கவோ தகர்க்கவோ முடியும் என்பதே கூட சீனாவுக்கு இலங்கை மீதான கரிசனத்திற்கு காரணமாக இருக்கலாம்.
சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்ககையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சீனா அவற்றை விட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயங்கள்.
தென் சீனக் கடலிலும் பசிபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப் போரே நடத்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க சீனா பெரும் வியூகத்தை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானத் தாங்கி கப்பல் கூட இந்தியப் பெருங்கடலில்தான் நிலைகொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாட்டவரும் தங்கள் யுத்த தளங்களை பார்வையிடவும் அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ள இந்திய கடற்படைத் தளங்களை பயன்படுத்தவும் வாய்ப்பு உருவாகும். பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள நிலையில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் கடற்படைகள் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்தியா-ஜப்பான் இடையே பரஸ்பர நம்பிக்கையும் நட்பும் வளர்ந்து வரும் நிலையில் சீனாவின் கடல் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
No comments:
Post a Comment