Tuesday, 4 December 2018

சாது மிரண்டால் காடு கொள்ளாது"

#RSS ஏன் மற்ற மதத்தவர்களுக்கு பிடிப்பது இல்லை .? காரணம் இதோ...

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற பழமொழிக்கேற்ப,
இந்துக்கள் வெகுண்டெழுந்தால் சிறுபான்மை எனும் சில்லறைகள் சிதைந்து விடுவார்கள்!

ஆம், ஒரு உதாரணம் உங்களுக்காக!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி எனும் ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்து ஒற்றுமை பற்றிய பதிவு இது.

உடன்குடி : உடை மரம் (சீமை கருவேல மரம்)  அதிகம் நிறைந்த பகுதியில் உள்ள குடில், குடிசை என்ற பொருளின் பெயரே உடன்குடி. இதைப்போல இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் உடன்பிறப்பாக வாழ்ந்து வந்ததாலும் உடன்குடி எனப்பெயர் பெற்றது. இவ்வூர் கருப்பட்டிக்கு பெயர் பெற்றது.

உடன்குடியில் கிறிஸ்டியாநகரம் பகுதியில் அமைந்துள்ள TDTA மற்றும் அன் பெசன்ட் (CSI Christian) மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 வருடங்களுக்கு முன் அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் தங்களது கோவில் கொடை முடிந்து முளைப்பாரியை பூவாக தலையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை கடுமையாக திட்டி முளைப்பாரி பூவை தலையிலிருந்து பிய்த்து எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் கண்ணீருடன் வீட்டுக்கு திரும்பிய மாணவிகள் தங்களது பெற்றொர்களிடம் நிலைமையை கூறியுள்ளனர்.இதைப்போலவே மாணவர்கள் குலசை ஸ்ரீமுத்தாரம்மன்  தசரா திருவிழாவிற்கு விரதமிருந்த பள்ளி மாணவர்களையும் கடுமையாக விமர்சித்து அசிங்க படுத்தியுள்ளனர். தொடர்ந்து இப்படியே பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதால் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து RSS, இந்து அமைப்புகள் மூலம் பள்ளியை முற்றுகையிட்டு கண்டித்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகமோ இது கிறிஸ்தவ பள்ளி இங்கே பூ, பொட்டு என இந்து அடையாளத்துடன் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் இப்படி தான் செய்வோம் என கூறியதோடு நீங்கள் ஏன் இங்கே படிக்க வைக்கிறீர்கள்  எனவும் உங்களுக்கு முடிந்தால் நீங்களே ஒரு பள்ளியைக் கட்டி படிக்க வைக்க வேண்டியது தானே என ஏளனம் செய்துள்ளனர்.

இதனால் அவமானப்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி கிறிஸ்தவ பள்ளிக்கு ஒரு முடிவு கட்ட ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று இந்துப் பள்ளியை கட்ட சபதமெடுத்தனர். RSS, டாக்டர் சிவதாணு மற்றும் நடராஜ நாடார் போன்றவர்களின் தீவிர முயற்சியினால் பள்ளிக்கென்று "செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி"  கோவிலின் 10 ஏக்கர் நிலத்தை (தேரியூர்) தானமாக பெற்றனர். RSS மற்றும் இந்து அமைப்புகளின் அதிதீவிர முயற்சியால் ராமகிருஷ்ண பள்ளி திருபோவன நிர்வாகத்துடன் கைகோர்த்து இந்துக்களுக்கான முதல் பள்ளி 1986 ம் ஆண்டு  ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியாக உருவானது.

இந்துக்களுக்கான இந்த ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளி திறக்கப்பட்ட அன்றே 1350 மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் அப்பகுதி இந்துக்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த பள்ளி தான் முதன்மை பள்ளியாக ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று முண்ணனியில் நிற்கின்றது.

இந்துக்கள் சிதறி கிடக்கும் வரை தான் இவர்களின் ஆட்டம் அத்துமீறும். இந்துக்களாகிய நாம் ஒன்றினைந்தால் இவர்களின் கொட்டம் அடங்கி விடும்.

இந்துக்களாகிய நீங்களும் உங்களது உறவுகளை இந்துப் பள்ளியில் படிக்க வையுங்கள்.
                     நன்றி!

*HindhusUnity*
*Udangudi*

https://m.facebook.com/story.php?story_fbid=1523919047653764&id=100001070504914

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...