நவீனமயமாகிறது இந்திய ராணுவம் ! அதிக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கிறது !
2019 ஆம் ஆண்டு முதல், ரஃபேல் போர் விமானங்களை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 36 போர் விமானங்களின் விநியோகம் ஏப்ரல் 2022 ல் நிறைவடையும். மேலும் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட Apache AH-64E போர் ஹெலிகொப்டர்கள் மற்றும் CH-47 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு கிடைக்கும், அதேபோல் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட M-777 Howitzers என்ற ராணுவ தளவாடங்களும் கிடைக்கும், அவை அனைத்தும் இந்திய ராணுவத்திற்கு பெரும் பலத்தை கூட்டும்.
1.86 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2009 ஆம் ஆண்டு அப்போதைய அரசு குண்டு துளைக்காத ஜாக்கட்டுகளை வாங்க முயற்சி எடுத்தது. பிறகு இந்த முயற்சியை கிடப்பில் போட்டது. 2018 ஆம் ஆண்டு மோடி அரசு ரூ 639 கோடி ஒப்பந்தத்தை போட்டது. போரான் கார்பைடு செராமிக் என்ற பொருளை கொண்டு இந்த ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படும். இதனால் ஜாக்கெட்டுகளின் இடை மிகவும் குறையும். 2020 ஆம் ஆண்டு முதல், அக்டோபர் மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிற்கு கிடைக்கும். இப்படி பல நவீன தளவாடங்களை பெற்று இந்திய ராணுவம் அதிக சக்தி வாய்ததாக உருவெடுக்கும்.
தற்போது, ரூ.3000 கோடிக்கு இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் தளவாடங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய கடற்படையில் உள்ள 2 கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளும், அர்ஜூன் பீரங்கிகளுக்கான மீட்பு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும்.பிரமோஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த ஏவுகணையாகும். மேலும், இந்திய ராணுவத்திற்காக வாங்கப்பட உள்ள ராணுவ மீட்பு வாகனம் டிஆர்டிஓ வடிவமைத்தது.இவை அர்ஜூன் டாங்கிகளுக்காக வாங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment