Tuesday, 25 December 2018

31 சதவீத மறைமுக வரி விதித்து நாட்டை ஒடுக்கிய காங்கிரசிடமிருந்து மக்களை மீட்டது மோடி சர்க்கார்தான்


https://www.facebook.com/groups/634094756779113/permalink/966415990213653/
.

31 சதவீத மறைமுக வரி விதித்து நாட்டை ஒடுக்கிய காங்கிரசிடமிருந்து மக்களை மீட்டது மோடி சர்க்கார்தான் : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

31 சதவீத மறைமுக வரி விதித்து நாட்டு மக்களை ஒடுக்கிய காங்கிரசிடமிருந்து மக்களை மீட்டெடுத்தது மோடி சர்க்கார்தான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஆண்டு ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பதாகவும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்பு மாநிலங்களின் வரி வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருப்பதாக ஜெட்லி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் வருவாய் அதிகரித்ததால் தான் பெரும்பாலான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள அவர், முந்தைய காங்கிரஸ் அரசு 31 சதவீதம் அளவுக்கு மறைமுகமாக வரி வசூலித்ததாக கூறியுள்ளார்.

ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வரியை 28 சதவீதமாக குறைத்தது என்று ஜெட்லி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு சராசரி ஜி.எஸ்.டி வருவாய் 89 ஆயிரத்து 700 கோடியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு இது 97 ஆயிரத்து 100 கோடியாகவும் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...