இந்திய பாதுகாப்பு விஷயங்களை மன்மோகன் - சோனியா - ஏகே அந்தோணி கையாண்ட விதம் கேலிக்குறியது. காசுக்காக நாட்டையே விற்கும் கூட்டம், பாதுகாப்பு விவரங்களை ஒரு இடைத்தரகரிடம் பகிர்ந்துள்ளது! பத்திரிக்கை செய்தி விவரங்கள் கீழே:
“பிரதமர் மன்மோகனிடம் ஹிலரி நம் ஹெலிகாப்டரை வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். பிரதமருக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி கையாலாகாதவர். ஆனால், 100% நம்மை ஆதரிக்கிறார்” - அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் - கிறிஸ்ட்டியன் மிஷல் கடிதத்திலிருந்து…
“நிதி அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கோப்புக்கள் நகர்வது பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி அறியுமுன் மிஷல் அறிந்திருந்தார்”.
“ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் விவகாரங்களை அறிய உளவு பார்த்தது.”
1) டிசம்பர் 20 டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் மிஷலின் ஃபேக்ஸ் பரிமாற்றங்களை வெளியிட்டுள்ளது: மொத்த யுபிஏ அமைச்சரவையையும் தன் ஹெலிகாப்டர் பேரத்துக்கு சாதகமாகவும், அமெரிக்க (சிகோர்ஸ்கி), ரஷ்ய (Mi-172) ஹெலிகாப்டர்களுக்கு எதிராகவும் மிஷல் திருப்பியதாக அந்த ஃபேக்ஸ் பரிமாற்றம் தெரிவிக்கிறது. நிதி அமைச்சக செயலர் ரஷ்ய ஹெலிகாப்டர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதும், அதை சமாளித்ததையும் பகிர்ந்திருக்கிறார் ஃபேக்ஸில்.
2) டிசம்பர் 24 எகனாமிக் டைம்ஸ்: ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் தயாரிக்கும் இலகு பயன்பாடு ஹெலிகாப்டர் (Light Utility Helicopter) விவரங்களை அறிய ஓய்வு பெற்ற இராணுவ குரூப் கேப்டனை உபயோகித்துள்ளார். அவருக்கு மாதம் யூரோ 19,600 (ரூ 15.72 லட்சம்) கொடுத்துள்ளார் (சட்டவிரோதம்). இது தவிர, பலருக்கும் லஞ்சம் கொடுத்துள்ளார். இதற்கான பணத்தை வங்கிகள் மூலமாகவும், ஹவாலா மூலமாகவும் கொண்டு வந்துள்ளார்.
3) டிசம்பர் 25 எகனாமிக் டைம்ஸ் - மிஷல் 2009இல் எழுதிய கடித விவரங்கள்: “யுபிஏ அரசின் பிரத்தியேக கூட்டங்களின் விவரங்கள், பாதுகாப்பு அமைச்சரவை குழு (Cabinet Committee on Security) விவாதங்களடங்கிய விவரங்கள், கேபினட் கூட்ட விவரங்கள் என அனைத்தும் மிஷலுக்கு கிடைத்தன. (உபயம்: ‘மேலிடம்’). “
“ஜூலை 2009இல் ஹிலரி கிளிண்டனுடன் மன்மோகன் சந்தித்ததில் அஜண்டாவில் இல்லாத ஹெலிகாப்டர் விவகாரம் பற்றி பேசியிருக்கிறார். ஏன் அந்த ஹெலிகாப்டரை வாங்குகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் மன்மோகனை. அவரும் அதை சரிபார்க்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார்”
“பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி கையாலாகாதவர். ஆனால், 100% நம்மை ஆதரிக்கிறார்”
1) Michel had knowledge of files that even Antony didn’t? CBI thinks so
2) Had Access to Internal UPA Meetings, says Michel’s Letter
3) Christian Michel paid 19,600 euro for special HAL project
https://epaper.timesgroup.com/Olive/ODN/TheEconomicTimes/shared/ShowArticle.aspx?doc=ETM%2F2018%2F12%2F25&entity=Ar00300&sk=E7A620AC&mode=text
https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/shared/ShowArticle.aspx?doc=TOICH%2F2018%2F12%2F20&entity=Ar01300&sk=18C19819&mode=text
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/christian-michel-paid-19600-euro-for-special-hal-project/articleshow/67224834.cms
No comments:
Post a Comment