மோடிஜிபற்றி பிரபல அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்சில் வந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் !
****************************************
இதை முடிந்தவரை தமிழாக்கம் செய்ய பட்டு உளளது.
நேற்றைய தேர்தல் முடிவுகள்
இந்திய வாக்காளர்களின் வாக்களிக்கும் முறை பற்றி கற்க வேண்டிய பாடங்கள்
இந்தியர்களுக்கு பற்றாக்குறை நிதி என்றால் என்ன என்பது தெரியாது
அது 2% அல்லது 3 % என்பது பற்றி கவலையில்லை
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மானியங்களும் தள்ளுபடிகளும்
மட்டுமே
இவை கடன் சுமையை அதிகரிக்கும் என்றாவது ஒருநாள் யார் தலையிலாவது விழும் என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை
அவர்களுக்கு உள்நாட்டு உற்பத்தி திறன் 3.8 லிருந்து 7.4 உயர்ந்திருப்பதோ இது கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்கா இங்கிலாந்து ஜப்பானை காட்டிலும் அதிகம் என்பது பற்றி அக்கறையில்லை
யாரையேனும் எதற்காகவாவது குற்றம் சொல்லாமல் இருக்கமுடியாது
வெங்காயம் துவரம் பருப்பு விலை பற்றி குற்றம் சொல்ல முடியாவிட்டால் பெட்ரோல் டீசல் பற்றி பேசுவார்கள்
எல்லாமே குறைந்த விலையில் கேட்பார்கள் ஆனால் விவசாயிகளுக்கு நல்ல விலையில்லை என
பேசுவார்கள்
இந்தியர்களை அவர்களின் எண்ணங்களையும் பழக்கவழக்களையும் மாற்றி கொள்ள கேட்கமுடியாது அவர்களை பொறுத்தவரை அரசு தான் மாறவேண்டும்
தொலைநோக்கு சிந்தனை அதை எப்படி செயல்படுத்துவது என்பதெல்லாம் பற்றி அக்கறையில்லை
அவர்களுக்கு எல்லாம் இன்றே வேண்டும்
இப்போதே வேண்டும்
இந்தியர்களுடைய ஞாபகதிறன் மிக மிக குறைவு
குறுகிய மனப்பான்மை
கடந்த காலத்தை மறப்பார்கள் மன்னிப்பார்கள்
இன்று எனக்கு எனக்கு மட்டுமே என்ற எண்ண ஒட்டம்
ஜாதிரீதியான மனப்பான்மை
வளர்ச்சியில் இருந்து இளைஞர்களை திசை திருப்பும் சாதி அரசியல்
பாகிஸ்தானும் சீனாவும் தங்கள் பொருட்களின் இந்திய சந்தைக்காக தங்கள் இந்திய அடிமைகள் மூலம் இவற்றை தூண்டுகிறார்கள்
இந்திய பாதுகாப்பு துறை கடந்த ஐந்து வருடங்களில் மிக பலம் வாய்ந்ததாக மாறிவிட்டது
இன்றைக்கு பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளால் இந்திய இறையாண்மையை ஒன்றும் செய்ய முடியவில்லை
மோடி என்ற தனிமனிதனின் போர் திறன் பற்றியே அவர்களின் கவலை
ஆனால் ஒரு இந்தியனுக்கு இது தெரியவில்லை
தொலைநோக்கு பார்வையுடன் வரும் 5 மாதங்களிலும் மோடி செயல்பட்டால் அவர் 2019 ல் தோல்வியுறுவார்
காயம்பட்ட ஒரு வீரன் நாட்டிற்கு ஏதும் செய்யமுடியாது
அந்த வீரன் திரும்பி முழுபலத்துடன் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளும் தொடர வேண்டும்
அதற்கு என்ன செய்யவேண்டும்
வரும் 5 மாதங்களுக்கு
மக்கள் விரும்பும் பெட்ரோல் டீசலை அவர்கள் கேட்கும் விலையில் அள்ளி வீசவேண்டும் முடிந்தால்
இலவசமாக கூட
விவசாயிகள் கேட்கும் தள்ளுபடியை வாரி வழங்கவேண்டும்
ஒன்று சேர்ந்து அனைவரும் முன்னேறுவோம் என்பதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு
நாங்கள் மோடிக்கு கூறும் அறிவுரை
அடுத்த 5 மாதங்களுக்கு நீங்கள் எதிர்கால சிந்தனையுடைய அரசியல் ஞானியாக இருக்க வேண்டாம்
உடனடியாக ஒரு அரசியல்வாதியாக மாறுங்கள்
மேலே சொன்ன அறிவுரை படி கொடுங்கள்
2019 வெற்றிக்கு பிறகு மீண்டும் பழைய தொலை நோக்கு ஞானியாக வாருங்கள்
அப்போது தான் இந்தியா முன்னேறும்
இது தான் வேண்டும் ...
செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்காது என்ற நம்பிக்கையில்.
வாழிய வாழியவே
No comments:
Post a Comment