Tuesday, 25 December 2018

வெட்கப்படு தமிழா...

நன்றிகெட்ட கூட்டமெங்கள் தமிழர் கூட்டம்!
நல்லவர்களை அரசியலில் ஒழித்து கட்டும் மூடர் கூட்டம்!
நம் தமிழர் கூட்டம்!

ரூபாய்க்கு மூணுபடி அரிசியை நம்பி காமராசரை ஓரம்கட்டிய மூடர் கூட்டம்!

பொய்அறிஞர் பேசிய அடுக்குமொழி சொல் கேட்டு
மக்கள்அறிஞர் காமராசரை ஒழித்து கட்டிய மூடர்கூட்டம் எம் தமிழர்கூட்டம்!

உணர்ச்சிக்கு அடிமையாவோம்! பொய்பேச்சுக்கு மயங்கி நிற்போம்!
புத்திசாலிகளின் பேச்சை ஒருபோதும் கேட்கமாட்டோம்!

நல்லது செய்யும் யோக்கியர்களை தூசிபோல் துடைத்தெறிவோம்!
கெட்டது செய்யும் அயோக்கியர்களிடம் காசு வாங்கி ஆட்சியில் அமர்த்துவோம்!

காவிரிஉரிமையை தாரை வார்த்த முதல்வரை முத்தமிழறிஞர் என்போம்!
முடவராய் அரசியலில் வீழ்ந்துபோன காமராசரை கயவரென்போம்!!

அனைவரையும் கற்க செய்த காமராசரை பொய்யரென்போம்!
அனைவரையும் சாராயம் குடிக்க செய்த திமுகவை தலைவரென்போம்!!

ஏகபத்தினி விரதனை எகத்தாளமிடுவோம்!
எட்டுதிசை படுத்துஎழுபவனை பல்லக்கில் சுமந்திடுவோம்!!

இலங்கைதமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் திமுக கூட்டணியை பாராட்டுவோம்!
இலங்கைதமிழர்களுக்கு மறுவாழ்வு வீடு தந்த மாமனிதர் நரேந்திரமோதி நாசம் செய்திடுவோம்!

பிரபாகரன் தாயார் பார்வதிஅம்மாளுக்கு மருத்துவம் தராமல் விரட்டிய திமுகவை தமிழின தலைவரென்போம்!
இலங்கையில் ஐந்து தமிழர்களின் தூக்குதண்டனையை ரத்துசெய்த நரேந்திரமோடியை தமிழினதுரோகி என்போம்!!

தமிழர்களை ஒழித்துகட்டிய சோனியாவே வருக என்போம்!
தமிழே உலகின் முதல்மொழி என்றுரைத்த மோடியே திரும்ப போ என்போம்!!

நல்லவர்களை ஆதரிக்கமாட்டோம்!
நயவஞ்சகர்களை வாழ்த்தாமல் விடமாட்டோம்!!

காமராசரை ஒழித்துகட்டினோம்!
கயவர்களை ஆட்சிகட்டிலில் அமர்த்தினோம்!!

மீத்தேன் கையெழுத்து போட்ட ஸ்டாலினை தலைவரென்போம்!
மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த நரேந்திரமோடியை நாதாரி என்போம்!!

ஜல்லிகட்டை தடைசெய்த காங்கிரஸ் திமுக வை பாராட்டுவோம்!
3மணிநேரத்தில் 5அமைச்சர்கள் கையெழுத்து போட்டு ஜல்லிகட்டு தடை உடைத்த பாஜக வை பாசிசம் என்போம்!!

காங்கிரஸ் ஆட்சியில் 768மீனவர்கள் கொன்றபோது வாய்மூடி நின்றோம்!
பாஜக ஆட்சியில் ஒருமீனவனும் கொல்லாதபோது பாஜகவை பாசிசம் என்போம்!

அப்துல்கலாம் இறுதிசடங்கிற்கு திராவிடதலைவர்கள் போகாததை பாராட்டி நின்றோம்!
இறுதிசடங்கிற்கு வந்து மணிமண்டபம் கட்டி தந்த மோடியை சாடிஸ்ட் என்று சாடி நிற்போம்!!

நல்லவர்களை சாடுவதில் தமிழர்கள் வல்லவர்கள்!
கெடுதி செய்த கெட்டவர்களை தூக்கி பிடிப்பதில் தமிழர்கள் வல்லவர்கள்!
மண்ணின் மைந்தர் காமராசரை ஒழித்து கட்டிய தமிழர்கள் வல்லவர்கள்!
நரேந்திரமோடியையும் அதேவழியில் ஒழித்து கட்டுவோம்!

வெட்கப்படு தமிழா...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...