இயேசு எப்போது பிறந்தார்.....? கிருஸ்தவர்கள் கிருஸ்மஸ் கொண்டாடுவது சரிதானா......?
பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்கள் டிசம்பர் 25 ஆம் தேதியை கிறிஸ்து பிறந்த தினமாக கிறிஸ்துமஸாக கொண்டாடி வருகின்றனர். உண்மையில் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 ல் பிறக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். இதனை பற்றி சில கிறிஸ்தவ அறிஞர்களின் கருத்துகளை கீழே காணலாம்.
டிசம்பர் 25 ல் தான் இயேசு கிறிஸ்து பிறந்த தினம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை…. நம்முடைய கிறிஸ்துமஸ் தினம் கி.பி 300 ஆம் வருடம் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப்பார்ன்ஸ் “ ரைஸ் ஆஃப் கிறிஸ்டியானிடி “ எனும் நூலில் “ இயேசு பிறந்த மாதம் , தேதி குறித்த சரியான தகவல்கள் இல்லை. வருடம் பற்றிய குழப்பம் கூட இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் இயேசு பிறந்திருக்கலாம் என்று கூறும் கணிப்புகளை அலெக்ஸாண்ட்ரியாவை சார்ந்த புனிதர் கிலமன்ஸ் சுட்டி காட்டுகிறார். (”சேம்பர்ஸ் கலைக்களஞ்சியம்”)
“கிறிஸ்மஸ் ஆரம்பகால கிறிஸ்துவர்களின் பண்டிகையாக இருந்ததில்லை. கிறிஸ்மஸ் எந்த தினம்? என்பதில் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை ஒருமைப்பாடு ஏற்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினமும், வருடமும் திருப்திகரமாக தீர்மானிக்கப் படவில்லை. “
(பிரிட்டானியா கலைக்களஞ்சியம்)
திருக் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
திருக் குர்ஆனின் கூற்றுப்படி பேரீத்தப்பழங்கள் கனிந்திருக்கும் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறந்தார் அவர் பிறந்த உடன் ஒரு மலக்கு (வானவர்) அவருடைய தாயார் மரியாளை அழைத்து இவ்வாரு கூறினார்.
“ஈச்ச மரத்தின் கிளைகளை உம்பக்கம் இழுப்பீராக, அது உன்மீது கனிந்த பேரீத்தப்பழங்களை உதிர்க்கும். (திருக் குர்ஆன் 19:26)
பிரசவ வேதனையினால், பலவீனமான, ஒரு பெண்ணின் அசைத்தலின் கூட விழுந்து விடக்கூடிய, கனிந்த நிலையில் அந்த கனிகள் இருந்துள்ளன. இது நிச்சயமாக குளிர் காலமாக இருக்க முடியாது என்பது நிருபணமாகிறது.
மேலும் இடையர்கள் தங்கள் ஆடுகளை, திறந்தவெளியில் மேய்த்துக் கொண்டிருந்த காலத்தில், இயேசு பிறந்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுங்குளிர் யூதேயாவின் வாட்டியடுக்கும், டிசம்பர் மாதத்தில், இந்நிகழ்ச்சி கண்டிப்பாக நிகழ்ந்திருக்க முடியாது.
யூதேயா நாட்டில் பேரீச்சம்பழம் கோடைக்காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே கிடைக்கும். டாக்டர் டி, டேவிஸ் என்பவர் தம்து “டிக்ஷனரி ஆஃப் தி பைபிள்” என்னும் நூலில் ‘ஆண்டு’ என்ற தலைப்பின் கீழ் பேரீச்சம்பழம் யூத மாதமான ‘எலுல்’ மாதத்திலேயே கிடைக்கும். எனக் கூறியுள்ளார். பீக் என்பவரின் ”கமெண்டரி ஆன் தி பைபிள்” என்ற நூலில் 117 ஆம் பக்கத்தில் யூத மாதமான எலுல் ஆகஸ்ட், செப்டம்பரில் தான் வரும் எனக் கூறியுள்ளார். இவற்றிலிருந்து திருக் குர்ஆன் கூறுவது போன்று பேரீச்சம்பழம் கிடைக்கும் கோடைக்காலமான ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
ஆக கிருத்தவர்கள் இயேசு பிறந்த மாதமாக டிசம்பர் மாதம் என்று கருதி கிருஸ்மஸ் கொண்டாடுவது தவறே என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது
No comments:
Post a Comment