3 அந்தமான் தீவுகளுக்கு நேதாஜி நினைவாக பெயர் மாற்றம் : வரும் 30 ந்தேதி #பிரதமர்_மோடிஜி போர்ட் பிளேர் பயணம்
#நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ் அவர்களின் 75 வது நினைவு தினத்தையொட்டி அந்தமானில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி தலைநகர் போர்ட் ப்ளேர் செல்கிறார். அங்கு மறைந்த நேதாஜி அவர்களின் நினைவைக் கொண்டாடும் வகையில் 150 மீட்டர் தேசியக் கொடியை அவர் பறக்க விடுகிறார். மேலும் நேதாஜியின் சுதந்திர போராட்ட வரலாற்றை நினைவுகளை சிறப்பிக்கும் வகையில் அங்குள்ள முக்கிய 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்படவுள்ளது. அதன்படி ரோஸ் தீவு நேதாஜி தீவு என மாறுகிறது. நீல் தீவின் பெயர் ஷாஹித் என மாறுகிறது, ஹேவ்லாக் தீவின் பெயர் ஸ்வராஜ் என மாற்றப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின்போது இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய தேசிய இராணுவப்படையை அமைத்த நேதாஜி, தனது ஆதரவை இங்கிலாந்துக்கு எதிரி நாடுகளாகிய ஜப்பான், ஜெர்மனிக்கு வழங்கினார்.
போரின்போது ஜப்பான் அந்தமான் தீவுகளைக் கைப்பற்றியது. அப்போது அந்தமான் சென்ற நேதாஜி 1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ந் தேதி அந்தமான் தீவுகளை சுதந்திர இந்தியா பகுதிகள் என பிரகடனம் செய்தார். போர்ட் பிளேரில் 150 மீட்டர் கொண்ட தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் சாஹித் மற்றும் சுவராஜ் என தீவிற்கு பெயர் சூட்டினார். இந்த வீரம் மிக்க வரலாற்றை கொண்டாடும் விதத்தில்தான், நேதாஜி கொடி ஏற்றிய டிசம்பர் 30 ஆம் நாளில் பிரதமர் மோடி அந்தமான் தீவுகளுக்கு சென்று நிகழ்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு, காங்கிரசால் மறக்கப்பட்ட தலைவர்களான வல்லபாய் படேல், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வரலாறு மீண்டும் பெருமைபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment