Sunday, 9 December 2018

திராவிடம் ஒரு காலாவதியான தத்துவம்

திராவிடம் ஒரு காலாவதியான தத்துவம்

ஐயா வைகோபால் சாமி நாயுடு அவர்கள் தந்தி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் கொடுத்த பேட்டியில் நான் புரிந்துகொண்டது..
‘திராவிட தனது இறுதி நாட்களில் நிற்கிறது'

எந்த ஒரு தத்துவமும் அரசியல் களத்தில் தனது வீழ்ச்சியை சந்திக்கும் போது எந்தவிதமான நெருக்கடிகளை எல்லாம் சந்திக்குமோ அதனை தான் இப்பொழுது திராவிடமும் அதன் தலைவர்களும் சந்தித்து வருகிறார்கள்.

பொதுவாகவே தத்துவங்கள் என்பவை தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு பல நூறு மனிதர்களால் மெருகேற்றப்பட்டு வெற்றிகளை குவித்து அதிகாரத்தை ருசித்து சில பல மாற்றங்களை முன்வைத்து ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கி விழுந்து மரண அடியை சந்தித்து மெல்ல மெல்ல செத்து போகும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் இந்த நடைமுறைபடிதான் காணாமல் போனது..
யோசித்து பாருங்கள்…
காந்தி அடிகள் என்ற தனிமனிதன் இந்திய தேசிய தத்துவத்தை பேசி அதனை பல நூறு தமிழ்நாட்டு தலைவர்கள் மெருகேற்றி அதிகாரத்தை ருசித்து இந்தி மொழித் திணிப்பில் சறுக்கி திக்கித்திணறி காமராசன் என்ற பெருந்தலைவன் கண்முன்னே காணாமல் போனது காங்கிரஸ்.

அதே வரலாறு மாறுபட்ட கதைகளோடும் மாறுபட்ட கதை மாந்தர்களோடும் இன்று திராவிட தேசிய தத்துவத்திற்கும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. பெரியார் என்ற தனிமனிதனால் தோற்றுவிக்கப்பட்டு பல நூறு தலைவர்களால் மெருகேற்றப்பட்டு மெல்ல மெல்ல அதிகாரத்திற்குள் வந்து ஊழல் மற்றும் சுயநல அரசியல் ஆழிப்பேரலையில் சிக்கி சிதையத் தொடங்கிவிட்டது.

காரணா காரியங்களும் கதை மாந்தர்களும் களமும் காலமும் மாறி இருக்கலாம். ஆனால் கட்டாயம் அழிவுப்பாதையை நோக்கி கம்பீரமாக நகரத் தொடங்கிவிட்டது திராவிடம். அதனை திராவிட தலைவர்களும் உணர்ந்துவிட்டார்கள் என்றாலும் மனிதனுக்கே உரிய அற்ப பொறாமை குணத்தின் காரணமாக குப்பற விழுந்தும் திசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக வீராப்பு பேசித்திரிகிறார்கள். அதில் மிக முகாமையானவர் ஐயா வைகோ.

எத்தேப்பெரிய திராவிட பாரம்பரியத்தின் கொள்கை போர்வாள் தம்மாந்துண்டு நெறியாளர்களின் சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியும் தெறிச்சி ஓடுவதன் காரணம் என்ன?
பெரியாரின் காப்புரிமை குத்தகைக்கார்களில் ஒருவரான ஐயா கீ.வீரமணி ஒரு பேட்டியில் இருந்து எழுந்து தலைதெறிக்க ஓடுகிறாரே என்ன காரணம்?

வெளிநாட்டு பயணம் சென்ற இடத்தில் ஈழத்தமிழர் எங்கள் அண்ணன் மயூரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தெறித்து ஓடிவந்தாரே திராவிடத்தின் ஆகச்சிறந்த அறிவாளி ஐயா சுப.வீரபாண்டி. அதற்கு என்ன காரணம்.

இவர்கள் அத்தனை பேரும் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் அல்லது ஏற்க பயப்படுகிறார்கள்… அது என்ன தெரியுமா?
‘திராவிடம் காலாவதி ஆகிவிட்டது' என்பதுதான் அவர்களால் ஏற்க முடியவில்லை.

ஒரு தத்துவம் விழுவதும் மற்றொரு தத்துவம் எழுவதும் இயற்கை. ஒரு மரம் விழும்போது வேறு ஒரு மரம் அந்த இடத்தில் முளைப்பதுதானே இயற்கையின் விதி. இதனை புரிந்துகொள்வதில் இந்த ஆகச்சிறந்த அறிவாளிகளுக்கு அப்படி என்னதான் பிரச்சனை. அதிகார ருசிகண்ட பூனைகள் எதிரில் வருவது புலி என்றுகூட புரிந்துகொள்ளாமல் பேசிப்பேசியே மீண்டும் தமிழ்நாட்டின் மக்களை ஏமாற்றமுடியுமென நம்புகிறார்கள் பாவம்…

நாங்கள் திராவிட கட்சிகளுக்கும் திராவிட தலைவர்களுக்கும் ஒன்றை சொல்கிறோம்…

‘நீங்கள் தடுமாறுவதைக் கண்டு நாங்கள் ரசிக்க தொடங்கிவிட்டோம்.. இனிமேல் விழப்போகும் அடி ஒவ்வொன்றும் இடிபோல விழும்.. காத்திருங்கள்….’

'We are going to fire you all படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...