*மத்திய பா.ஜ.க. அரசு நேருவின் புகழை சிறுமைப்படுத்தி வருகிறது* - என்று சோனியா குற்றம் சாட்டி உள்ளாரே
என்று எஸ். ராஜகணேஷ் என்ற வாசகர் தலைஞாயிறிலிருந்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
============
சோனியா காந்தி இப்படிக் கூறுகிறார். ஆனால் சோனியா காந்தி குடும்பம், மகாத்மா காந்தி, படேல், நேதாஜி, போன்ற மற்ற எல்லோரையும் சிறுமைப்படுத்தி, தங்கள் குடும்பத்தை மட்டுமே பெருமைப்படுத்தியது என்கிறார் மோடி. மோடி கூறுவதில் பல உண்மைகள் இருக்கின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற விவரங்களின்படி, மத்திய - மாநில அரசுகளின் பெரும் செலவில் நடக்கும் பிரம்மாண்டமான 12 மத்திய, 52 மாநில திட்டங்கள்; 28 விளையாட்டுப் போட்டிகள்; 19 விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு கோப்பைகள்; டெல்லி உள்பட நாட்டிலேயே 5 பெரிய விமான நிலையங்கள்; நாட்டிலேயே புகழ்பெற்ற 98 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள்; உலக அளவில் பிரபலமான விருதுகள் உள்பட 51 விருதுகள்; உலக, நாட்டு அளவிலான 15 உயர் கல்வி உதவித் தொகைகள்; உலக அளவில் புகழ்பெற்ற 15 தேசிய சரணாலயங்கள்; நாடு முழுவதும் பிரபலமான 39 உயர் மருத்துவ நிலையங்கள்; 37 மற்ற உயர் கல்வி அமைப்புகள், விழாக்கள்; 74 பிரபல சாலைகள் ஆகியவை நேரு - இந்திரா - ராஜிவ் காந்தி பெயர்களைத் தாங்கியிருக்கின்றன.
*All in the Name of The Nehru & Gandhis என்கிற பெயரில், டாக்டர் ஏ.சூர்யபிரகாஷ் என்கிற பத்திரிகையாளர்* நேரு குடும்பத்தின் பெயர் தாங்கிய திட்டங்கள், அமைப்புகள், சாலைகள், மற்ற விஷயங்கள் பற்றி பெரிய புத்தகமே எழுதியிருக்கிறார். அந்தத் திட்டங்கள், அமைப்புகளுக்கு அரசு செலவிடும் தொகை ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்றும் கூறுகிறார் சூர்யப்ரகாஷ். காந்தி என்றாலே சோனியா காந்தி குடும்பம் என்கிற அளவுக்கு மகாத்மா காந்தி பெயர் கரைந்து, மறைந்து போயிருக்கிறது. படேல், நேதாஜி பெயர்களைத் தேட வேண்டியிருக்கிறது. எனவே மோடி கூறுவது உண்மை. சோனியா கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
Source-Thuglak
No comments:
Post a Comment