Sunday, 9 December 2018

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

தில்லி சென்று இருக்கும் திமுக தலைவர ஸ்டாலின்  பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றினைத்து ஒரு.அணியை ஏற்படுத்த ராஜதந்திரியாக.இருந்து செயல்படுவது மகிழ்ச்சியே.ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த.ஒரு அணியை ஏற்படுத்துவது நன்றே. அதே நேரத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்யும்.அழுமூஞ்சி குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதம் பிடிக்காமல் கைவிட வைத்து தமிழ் நாட்டிற்கு  ஸ்டாலின். உதவிட அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான. நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் உள்ளது. ஆகவே குமாரசாமி. அரசு மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.அல்லது காங்கிரஸ் கட்சியும் திமுக கட்சியும். குமாரசாமி அரசை நீக்க மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை காத்திட.வேண்டும். கச்சத்தீவு மற்றும் கபிணி போன்ற விவகாரங்களில் மெத்தணம் காட்டியது போல் காட்டக்கூடாது. தில்லியில் இருந்து திரும்புகின்ற போது மேகதாது. அணை திட்டத்தை எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதன் கூட்டணிஅரசின் முதல்வர் குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தை கைவிட வைத்துவிட்டது என்று மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே அறிவித்திட

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...