Sunday, 9 December 2018

# ஸ்டாலின் - கடைசி வரை காத்திருப்பு...!
# வெற்றிகளைத்தான் உலகம் கொண்டாடும்... அது எப்படி வந்திருந்தாலும்...!
தோல்விகளை வரலாறு பதிவு கூட செய்வதில்லை...
# முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 05/12/2018 ல் இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.
# அரசியல் பயணத்தில் ஸ்டாலின் முழுமையாக தோல்வியடைந்த இரண்டு வருடங்கள் முடிந்திருக்கின்றன...
# ஜெயலலிதா மறைந்தவுடன், கொஞ்சம் அதிரடியாக களத்தில் இறங்கி செயலாற்றியிருந்தால், ஸ்டாலின் தமிழக முதல்வராகி முழுமையாக இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்.
# அல்லது அவர்கள் கூவத்தூரில் கூத்தடித்துக்கொண்டிருந்த பொழுது, அதிரடியாய் மக்களைத்திரட்டி போராடியிருந்தால் இன்று தமிழகத்தின் முதல்வர் நீங்களாக இருந்திருப்பீர்கள்...
# அதுவும் போகட்டும்... ஒருவர் தர்மயுத்தம் நடத்தியபோது, கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அரசியல் விளையாட்டு விளையாடி இருந்தால், வெற்றி உங்கள் சட்டைப்பையில் இருந்திருக்கும்...
# தலைமை இல்லாத இன்றைய ஆளுங்கட்சி துண்டு, துண்டாகி சின்னாபின்னமாகி இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும்....
# கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டு விட்டு நின்றால், கடைசிவரை கனவிலேயே கரைய வேண்டியது தான்...
# எத்தனை, எத்தனை இமாலய ஊழல்கள்...! அத்தனையும் ஆதாரபூர்வமாக...! ஆனால், ஒரு கடைநிலை அரசியல்வாதியைக்கூட, உங்களால் பதவி விலக செய்யமுடியவில்லை... ரொம்ப கஷ்டம்..!
# தொடர் போராட்டம், தொடர்ந்த தாக்குதல், இலக்கினை அடையும் வரை முயற்சி என்பதெல்லாம் உங்கள் வார்த்தைகளில் கூட வரவில்லையே.. மிகுந்த வருத்தம் தான்...!
# வாழ்க்கையில் முன்னேறாமல் போனவர்களையெல்லாம் கவனித்தால், இணையத்தில் வாழ்க்கையை இழந்தவர்களாய் இருப்பார்கள். அதேபோல், ஓர் அறிக்கை, ட்விட்டர், முரசொலி என முடங்கிப்போய், உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே பெரும் முட்டுக்கட்டைப் போட்டுக்கொண்டுள்ளீர்கள்...! பெரும் சோகம்..!
# தமிழகத்தில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், அராஜகங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் தெருமுனைப்பிரச்சாரம் தேய்ந்ததால், அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் முடங்கிப்போயுள்ளீர்கள்...
# அழிந்து இருக்க வேண்டிய ஒரு கட்சி இன்று வலுவான கட்சியாக தன்னை தயார்படுத்திக்கொண்டுள்ளது..
# கோடிகளில் சமாதி...
# கட்சி நாளிதழ்
# கட்சி தொலைக்காட்சி
# வானளாவிய அதிகாரம்
# கோடி, கோடியாய் பணம் என தன்னை வலுவாக்கிக்கொண்டுள்ளது.
# இன்னும் மூன்று வருடங்கள் இந்த ஆட்சி நீடித்தால், அடுத்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நீங்கள் ஜெயிக்க முடியாது..
காரணம்... கோடி, கோடியாய் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில், ஓட்டுக்கு 5000/- கூட கொடுக்குமளவுக்கு தயாராகிவிடுவார்கள்...
# அடுத்த தேர்தல் வரை என்ன, நாளையே தேர்தல் வந்தாலும் இது தான் நிலைமை.. உதாரணம்... ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்...
# கனவில் கூட நினைத்து விடாதீர்கள்... மனசாட்சிப்படி, நேர்மையாக ஓட்டுப்போடுவார்கள் என்று... 5000/- வெல்லுமா? மனசாட்சி வெல்லுமா? - உங்கள் மனசாட்சியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்...
# குட்கா ஊழல், சிலைக்கடத்தல், மணல் கொள்ளை, கல்வித்துறை ஊழல், பணி நியமன ஊழல், பல்கலைக்கழக ஊழல்... இன்னும்... இன்னும்...
ஆனால்.. இதில் நீங்கள் செய்தது என்ன? என்பதை நீங்களே கொஞ்சம் உங்கள் உடன்பிறப்புகளைக்கேட்டுப்பாருங்கள்...
# நீட் தேர்வு மூலம் தமிழக ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கிய மத்திய அரசு...
# தமிழகத்தை சுடுகாடாக்கும் மேகதாது அணைக்கட்டு ப்ரச்னை... இது ஒன்று போதாதா? தமிழகத்தில் 40 க்கு 40 வெல்ல...
இந்நேரம் மத்திய அரசின் கடுந்துரோகத்தையும், மாநில அரசின் இயலாமையையும், ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் விதைத்திருக்க வேண்டாமா? தமிழனின் பதைபதைப்பை உலகறியச் செய்திருக்க வேண்டாமா?
ஆனால், இதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்...!
# கஜா புயல் பாதிப்பில் மத்திய அரசின் வஞ்சகம்... ஆனால், அதில் உங்களின் வேகம் புயல் போல இருப்பதற்கு பதில், தென்றலாய் இருப்பது மிகத்துயரம்...
# கடைசியாக ஒரு வார்த்தை...
கடைகோடி தொண்டனிடமும் உங்கள் குரலும், முழக்கமும், போராட்டங்களும் சென்று சேர வேண்டும்.. அதற்கான முயற்சிகளை உங்கள் உடன்பிறப்புகள் உருவாக்க வேண்டும்...
# தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்...ஏன், ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கான வாய்ப்புகளைக்கரைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உணருங்கள்...
# நீங்கள் ஏதாவது செய்து,  தமிழகத்தை மீட்பீர்கள்  என தமிழக மக்கள் காத்திருந்தார்கள்... காத்திருக்கிறார்கள்... ஆனால்... எப்போதும் இப்படியே காத்திருப்பார்கள் என சொல்லமுடியாது...
# ஆனால் நீங்கள்... காத்திருக்கிறேன்... காலம் கனியட்டும்... பழம் நழுவி தானாக பாலில் விழும் என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால்....
கடைசி வரை கனவுகள் மட்டுமே மிஞ்சும்...
# வெளியே வாருங்கள்...
# கலைஞரைப் படியுங்கள்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...