Wednesday, 26 December 2018

14 மாதங்களில், சுமார் 80 லட்சம் வேலைவாய்ப்புகள்.

http://www.kathirnews.com/2018/12/22/80-lakhs-jobs-in-14-months/
.


14 மாதங்களில், சுமார் 80 லட்சம் வேலைவாய்ப்புகள்.

நாட்டில், கடந்த 14 மாதங்களில், சுமார் 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தொடங்கப்பட்ட கணக்கு விவரங்களின் அடிப்படையில் தெரியவந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், வெறும் 2 லட்சத்து 81 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், கடந்த நவம்பர் மாதம் வரையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ், இணைந்துள்ள தொழிலாளர்களின் கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிகளவாக, 8 லட்சத்து 27 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதும், அதில், 18 முதல் 25 வயது வரையிலான இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 57 ஆயிரம் பேர் என கூறப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...