Wednesday, 26 December 2018

புதிய தொழில்நுட்பத்துடன் ₹250 கோடி செலவில் பாம்பனில் வருகிறது புதிய பாலம் : சாட்டையை சுழற்றும் ரயில்வே துறை


புதிய தொழில்நுட்பத்துடன் ₹250 கோடி செலவில் பாம்பனில் வருகிறது புதிய பாலம் : சாட்டையை சுழற்றும் ரயில்வே துறை

 

 -

 

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்று வரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அன்று, தனுஷ்கோடியை கடுமையான புயல் ஒன்று தாக்கியது. ரயில் நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சூறாவளிக் காற்றினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தனுஷ்கோடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த போர்ட் மெயில் ரயிலும் புயல் காற்றுக்கு இரையானது. அதில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்த தனுஷ்கோடி நகரம் ஒரோ நாள் இரவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டடங்கள், பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் தரை மட்டமாயின. பெரிய வர்த்தக ஸ்தலமாக இருந்த தனுஷ்கோடி, அதன்பிறகு தனித்து விடப்பட்டது.

 

ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இனி கப்பல் போக்குவரத்தினை இயக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கப்பல் பயன்பாட்டிற்கு உதவிய துறைமுக பாலம் புயலுக்கு பின் அப்பகுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவி வந்தது. ஆனால், உருக்கி ஊத்தப்பட்ட உலோகங்களால் உருவான இந்த பாலம் அதிகார அரசியல் வர்கத்தின் கண்களை உறுத்தியது. இதனால், கடந்த 90களின் துவக்கத்தில் இந்த பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் பாலத்தினை துகள் துகளாக பெயர்த்தெடுத்து சென்றனர். இப்போது, அந்த பாலத்தை கட்ட வேண்டும் எனில் பலகோடி தேவைப்படும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாயோ சொற்பமான தொகைதான். பாலத்தினை ஏலம் எடுத்தவர்களுக்கும் அதற்கு உதவிய மக்கள் பிரதிநிகள் சிலரும் அடைந்ததோ கொள்ளை லாபம்.இந்த பாலத்தினை தொடர்ந்து பராமரித்து இருந்தால் சேதுசமுத்திர திட்டதிற்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்சிக்கு பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நாட்டினால் நம் நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க நமது கடற்படை கப்பல்களுக்கு இந்த பாலம் இன்றியமையாததாக இருந்திருக்கும்.

 

இந்த கவலையை போக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் 65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை காரணமாக அப்பகுதி மக்கள் பயன் பெறத்தவங்கியுள்ளனர். புதிய சாலை திறந்த பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்கு அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் தங்களுடைய வாகனங்களில் அரிச்சல் முனை வரை  செல்ல முடிகிறது. ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட தனுஷ்கோடி பகுதி இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. தனுஷ்கோடி அருகே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் அது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் எனவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ள  நிலையில், புதிய பாலம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. பாம்பன் தூக்கு பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம்  அறிவித்து உள்ளது. தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம்,  104 ஆண்டுகள் பழையது என்பதால், ₹250 கோடி செலவில் இந்த பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து புதிய ரயில்வே பாலம் அமைக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போதைய பாலத்தின் அருகே,  ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்லும் வகையில், பழைய பாலத்தை விட  3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இரட்டை ரயில் பாதையுடன் அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரயில் பாலம், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமும், இதில் 63 மீட்டர் நீளத்துக்கு தூக்குப்பாலமும் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும் என்றும், இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும், பாலம் கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathirnews.com/2018/12/25/new-bridge-at-pamban/

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...