https://www.facebook.com/406949393113736/posts/562867964188544/
ஸ்கெட்ச் போட்டு சீனா பாக்கிஸ்தான் இரண்டையும் ஒரே நேரத்தில் வென்ற மோடி!
.
http://tnnews24.com/?p=1091
..
இந்தியா தற்போது ஈரானின் சபகர் துறைமுகத்தினை தன்வசம் கொண்டுவந்துள்ளது இதன் மூலம் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று பார்க்கலாம்….
முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்:
இந்தியாவிற்கு…பூகோள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் !
”பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு”..ஆப்கானிஸ்தான், ஈரான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக போக்குவரத்து கொள்வதற்கு இந்தியாவிற்கு ஏதுவாக அமைந்திருக்கும் துறைமுகம்.
நேரடி வர்த்தக உறவு:
இந்தியாவால்….பாகிஸ்தானின் தடுத்தலும், இடைஞ்சல்களும் இன்றி… போரினாலும், பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கும்
ஆப்கானிஸ்தானிற்கு உதவ முடியும்.
ஈரானுடன் நேரடியான வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
பலுசிஸ்தான் மீதான இந்தியாவின் பிடிப்பையும் மேலும் உறுதி செய்து கொள்ள முடியும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்து:
இத்தகைய சபஹார் துறைமுகத்தின் கட்டுமானங்களை இந்தியா உருவாக்குவதற்கு 2015-ல் இரு நாடுகளுக்கு இடையே ‘சபஹார் ஒப்பந்தம்’ கையெழுத்தானது.
2016-ல் ஈரானின் பாதுகாப்பு கவுன்சில்
அதை ஏற்றுக் கொண்டு உறுதி செய்தது.
2018-ல், இந்தியா, துறைமுக கட்டுமான வேலைகளை விரைந்து முடித்த நிலையில்.. இரான்…நேற்று…அத் துறைமுகத்தின் செயல்பாட்டு மேலாண்மை அனைத்தையும் இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது.
இந்தியாவிற்கு மட்டும் விலக்கு:
இதற்கிடையில்..ஈரானுடன் வர்த்தக உறவு கொள்ளும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா..இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளித்தது !
சீனா-பாகிஸ்தான் கூட்டு இடைஞ்சல்களை மீறி..அமெரிக்காவையும் ஏற்றுக் கொள்ள வைத்து ..ஈரானுடன் வர்த்தக உறவை உறுதி செய்து கொண்டிருப்பது சாதாரண காரியம் அல்ல !
இந்திய மத்திய அரசின் லாவகமான சாமர்த்தியமான அயலுறவுக் கொள்கை செயல்பாடே …இவை அனைத்தும் சாத்தியமானதற்கு காரணம்.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு காரணம் இந்திய பிரதமர் வெளிநாடுகளுடன் கொண்டுள்ள நட்புணர்வும் அவரது ஆளுமையுமே காரணம் என்று சீன பத்திரிகைகள் தலைப்புச்செய்தியாக எழுதிவருகின்றன
No comments:
Post a Comment