Wednesday, 26 December 2018

இராணுவ தளவாட உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக மாறுகிறது தமிழகம்:

http://www.kathirnews.com/2018/12/22/defence-corridor-opportunity-for-tn-msme/
.
இராணுவ தளவாட உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக மாறுகிறது தமிழகம்:

அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை அடுத்து ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளுக்கு அமோக வாய்ப்பு.

சக்திவாய்ந்த இராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்களை அமைக்க தகுதியான இடங்களாக தமிழகத்திலுள்ள சென்னை, ஓசூர், திருச்சி, கோவை, சேலம் ஆகிய 5 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொழில்நுட்ப பேச்சு வார்த்தைகள் மேற்கண்ட இடங்களில் தொழில் அமைப்புகளிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கான திட்ட விவர அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஏற்கனவே 2018-2019 வரவு செலவு பட்ஜெட்டில் புதிய 2 இராணுவ கேந்திரங்கள் அமைக்க அறிவிக்கப்பட்டபடி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் எர்னஸ்ட் அண்ட் யங் என்கிற தனியார் தொழில் ஆலோசனை நிறுவனத்திடம்  திட்ட விவர அறிக்கை தயாரிக்கும் பணி ஒப்படைத்துள்ளதாகவும், அந்த நிறுவனம் சென்ற மார்ச் மாதம் 5-ஆம் தேதி கோவையிலும்

, 16-ஆம் தேதி திருச்சியிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் உற்பத்தி தொடர்பான ஆலோசனைகளை நடத்தியது. இந்த சந்திப்பின்போது, இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடன் இருந்ததாகவும், அப்போது அதிக அளவிலான நிறுவனங்கள் இராணுவத்துடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட ஆர்வம் காட்டியதாகவும் இராணுவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக இராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நிறுவன முன்னாள் இயக்குனரும், விண்வெளி தொழில் முன்னேற்ற கழகத்தின் ஆலோசகருமான பி.சிவகுமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் “தமிழகத்தில் ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்கான துல்லியமான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், பொருத்தமான மாநிலமாக தமிழம் உள்ளதாகவும்” கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் கூறுகையில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பை அடுத்து இராணுவத்துடன் இணைந்து தொழில்களை மேற்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், ஏற்கனவே பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்சுக்கு(பெல்) தேவையான துணை பாகங்களை 2500-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் தயாரித்து சப்ளை செய்து வருவதால் இவர்களுக்கு நல்ல அனுபவமுள்ளது. மேலும் கோவையிலுள்ள முருகப்பா தொழில் குடும்பத்தை சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனம் ஆவடி கனரக ஆயுதங்கள் தயாரிப்புக்கான கியர் பாக்ஸ்களை சிறப்புடன் தயாரிப்பதாகவும், எனவே தமிழகத்திலுள்ள தொழில்கள் மேலும் வளமைடைவதற்கு நிர்மலா சீத்தாராமன் அவர்களின் இந்த அறிவிப்பு மிகுந்த பயனை அளிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் இராணுவ தளவாட ஆராய்ச்சிக்கு கடந்த பட்ஜெட்டில் ₹152.37 கோடியே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த நிதி ஆண்டில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ₹267.76 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...