விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ள சேமிப்பு, மோடிஜியின் நல்லாட்சியில், அவ்வப்போது நிலவும் பெட்ரோல் விலையைத் தந்த பிறகு, என்பதை கருத்தில் கொள்ள மறவாதீர்.
.
CPI எனும் “நுகர்வோர் விலை குறியீடு” வேகம் குறையும்போது, ஒட்டு மொத்த மக்களும் பயன் பெறுகிறார்கள். கீழ்த்தட்டு/நடுத்தட்டு மக்களின் பயன் விகிதம் அதிகம்.
.
.
ஊழல் செய்தும், மோசடி செய்தும் 60 ஆண்டுகளுக்கும் மேல் கொழுத்துத் திரிந்து, தற்போது அடி வாங்கி ஒடுங்கியிருக்கும் ஓநாய்கள், “மோடியே! பெட்ரோல் விலையை குறை”, என்று கூச்சலிட்டால், புள்ளி விவரத்துடன், தக்க பதில் சொல்லுங்கள்.
.
1. தற்போதைய ஐந்தாண்டுகளில், ஒரு சில மாதங்கள் தவிர(22 மே – 18 நவ), மோசடி திருடர்களின் காலத்து உச்சவிலையைவிட (செப்,2013 ரூ.79.55), பெட்ரோல் விலை உயரவில்லை.
.
2. 6 மாத காலம் பெட்ரோல் விலை உயர்ந்த போது, அதன் வேகம் முந்தைய உயர்வு வேகத்தைவிட குறைவு. (2004-2014 ஆண்டு சராசரி உயர்வு 10.27%. அக்டோபர்2018 உச்சபட்ச விலையில், ஆண்டு சராசரி உயர்வு 3.79%)
.
3. பெட்ரோல் விலை உயர்ந்த 6 மாத காலத்திலும் கூட, பிற பொருளின் விலை உயர்வு வேகம், அதை விட அதிகமாக, சரிந்துள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், “மொத்த” விலை உயர்வு வேகம் குறைந்துள்ளது. (மொத்த விலை உயர்வு CPI:: 2013-14 10.78%; 2018-19 3.27%)
.
4. a) 24 டிசம்பர், 2018 விலை ரூ.67.38. மே, 2014 ரூ.74.60; மே, 2014 விலையைவிட ரூ.7.22 குறைவு.
b) செப், 2013-- ரூ.79.55 விலையை காரணம் காட்டி, கட்டணம் உயர்த்திய யோக்கியர்கள், எவரெல்லாம் கட்டணத்தைக் குறைத்தார்கள்?
c) 04.10.2018-- ரூ.87.33; 22 மே-- 18 நவ, 2018 விலையை காரணம் காட்டி, கட்டணம் உயர்த்திய யோக்கியர்கள், எவரெல்லாம் கட்டணத்தைக் குறைத்தார்கள்?
.
.
ஓராண்டு முழுமைக்குமான செலவை சேமிப்பதென்பது, அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் மாபெரும் கொடை.
“2013-14ம் ஆண்டு முழுதும் செய்த செலவுக்கீடான தொகையை, ஐந்தாண்டுகளில் சேமித்திருக்கிறோம்”, எனும் பிரக்ஞையே இல்லாது வாழும் மக்களிடம், உண்மையை எடுத்துரைப்போம்.
.
.
“நல்லது எது, கெட்டது எது, நல்லவன் யார் கெட்டவன் யார்?” என்பதை பகுத்தறிய இயலாமல் மக்களை மூடர்களாக வைத்திருந்ததே, காங்கிரஸும், தீராவிஷங்களும் நாட்டுக்கு செய்த துரோகங்களில், மாபெரும் துரோகம்.
.
.
“ “CPI” என்பது வெறும் எண் அல்ல; வாழ்க்கைத்தர நிலையையும், சேமிப்பையும் பிரதிபலிக்கும் அளவீடு”, என்பதைக்கூட அறியாது, பெரும்பாலான மக்களை, இன்றளவும், மாயையில் ஆழ்த்தி வைத்திருப்பது, பப்பு & கோவின் திட்டமிட்ட அயோக்கியத்தனத்திற்கு சான்று.
.
மக்களின் வீட்டு வரவேற்பறைக்கே சென்று, கெட்டதை நல்லதாகவும், நல்லதை கெட்டதாகவும், 24*7 எடுத்துச் சொல்லி, அப்பாவி மக்களின் வாழ்க்கையை, மனசாட்சியின்றி, அழிக்கும் ஊடகசாரிகளின் அயோக்கியத்தனத்துக்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது நல்லோர் அனைவரின் கடமை.
.
.
வரும் 5 மாதங்களுக்கு, உண்மையை, அப்பாவி மக்களிடம் எடுத்துச் சொல்வதை தலையாய கடமையாக ஏற்போம்; உண்மையை தயங்காது பேசுவோம்; காண்போரிடமெல்லாம் பேசுவோம்.
.
“அயோக்கியனை நல்லவன் என்று நம்பி, தங்களின் அழிவுக்குத் தாங்களே காரணமாயிருக்கிறோம்”, என்பதை உணராமல் உலவும் மக்களுக்கு, நல்லதை எடுத்துச் சொல்லி வாழ வைப்பதே, காவிகளின் முதற் கடமை.
மக்கள் அறியாமையிலிருந்து மீண்டால், மோடிஜி 2019ல், மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. பாரதம் மேலும் பொலிவு பெறுவது உறுதி.
.
.
2004 முதலான மாதாந்திர செலவு கணக்குகளை, பொறுமையாக, மீண்டும் எடுத்து பார்த்தால், மக்களுக்கு உண்மை விளங்கும்.
.
“விலை உயரவில்லை என்று CPI சொல்லவில்லை. உயர்வின் வேகம் குறைந்திருக்கிறது என்று சொல்கிறது”, என்பதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டு, மாதாந்திர கணக்கை பார்க்கலாம்; உண்மை விளங்கும்.
.
.
மோடிஜியை பார்த்து, “அதை செய்; இதை செய்”, என்று அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, குறுகிய காலத்தில், அவர் செய்துள்ள நன்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதே, அவருக்கு, காவிகள் பாராட்டும் நன்றி.
.
.
மக்களை அறியாமையிலிருந்து மீட்டு, நல்லதை உணரச் செய்வோம்; பாரதத்தை நலம் பெறச் செய்வோம்.
ஜெய் ஹிந்த்!
.
.
பி.கு:
.
மோசடி சக்ரவத்தி பப்பு போன்று, பொய் எதுவும் சொல்வது நம் வழக்கமில்லை.
பொத்தாம் பொதுவாக, சேற்றை அள்ளிவீசிவிட்டுப் போகும் பப்புவின் அயோக்கியத்தனத்துக்கு, ஆதாரத்துடன் பதில் சொலும் முயற்சிகளில், இதுவும் ஒன்று.
அதிகாரபூர்வ வலைத்தளங்களில் தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
.
CPI புள்ளிகள்::
2012=100; 2012-13 சராசரி 101.28 2013-14 சராசரி 112.20
2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19(P) ஆண்டுகளுக்கான சராசரி புள்ளிகள் முறையே, 118.85, 124.68, 130.33, 135.00, 139.41
.
சென்னை பெட்ரோல் விலை/லி ரூபாயில்::
மே,2004 ரூ.36.80; செப்டம்பர், 2013 ரூ79.55; மே 2014 ரூ.74.60;
பப்புவின் உச்சபட்ச விலையான ரூ.79.55ஐவிட விலை உயர்ந்திருந்த காலம்:
22.05.2018 (ரூ79.79) முதல் 18.11.2018 (ரூ79.66)
மோடிஜி ஆட்சியில் உச்சபட்ச விலை ரூ.87.33 (04 அக்டோபர், 2018)
24 டிசம்பர், 2018 விலை ரூ.67.38. மே, 2014 விலையைவிட ரூ.7.22 குறைவு.
No comments:
Post a Comment