http://www.kathirnews.com/2018/12/26/to-which-party-raguram-rajan-belong-to/
.
காங்கிரஸ் ஆட்சியில் வாயை மூடிக்கொண்டிருந்த ரகுராம் ராஜன், பிரதமர் மோடி சர்க்காரை மட்டும் விமரிசிப்பதேன்? பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையில் விளாசல்.
காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற தவறுகள் எதையும் கண்டுகொள்ளாமல், ஒரு அரசியல்வாதி போல மோடி அரசின் நடவடிக்கைகளை திட்டமிட்டு குறைகூறும் ரகுராம் ராஜன் குறித்து நடுநிலையாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து வருவதாகவும், முதலில் தான் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை அவர் விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். அதன் பின்பு மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றதும் தலைமை பொருளாதார ஆலோசகராக திடீரென பதவி உயர்த்தப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் சிபாரிசின் படி ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி ஏற்றார். இவர் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் போதும், ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி ஏற்ற பிறகும் அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு வெற்றியை தக்கவைத்துக் கொள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பலவித கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மோடி அலை வீசியபோது எங்கே நாம் தோற்றுவிடுமோ என அஞ்சிய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளில் சில நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன்களை கூட தள்ளுபடி செய்வோம் என அறிவித்தன. ஏற்கனவே ₹5 லட்சம் கோடியளவுக்கு விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் பெருத்த நட்டத்தை வங்கிகள் சந்தித்தன.
Advertisement
இதனால் விவசாயிகளுக்கு புதிய கடன் தரவும் வங்கிகள் தயங்கின. இதனால் வங்கிகள் முடங்கியது மட்டுமல்லாமல் விவசாயமும் முடங்கியது. இந்த நிலையில் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்தால் நாட்டின் நிதி நிலைமை என்னாகுமோ என வங்கிகள் அச்சத்துடன் இருந்தன. ஆனால் அன்றைய கால கட்டத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2013 ல் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பொறுப்பு வகித்த ரகுராம் ராஜன் அரசுக்கு ஏன் தனது அதிருப்தியை தெரிவிக்கவில்லை ? என நடுநிலையாளர்கள் பலர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். அவர் பதவி வகித்த கால கட்டத்தில்தான் உலக அளவிலான பொருளாதார சுணக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போதெல்லாம் தனக்கு பதவி சுகங்களை அளித்த சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் பயந்து வாய் திறக்காமல் இருந்தவர் தான் ரகுராம்ராஜன் எனவும் பலர் அவரை குறை கூறி வருகின்றனர்.
இவருடைய காங்கிரஸ் சார்பிலான நடவடிக்கைகளை கவனித்து தான் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூட இவருக்கு 2 ம் முறையாக பதவி நீட்டிப்பு தரக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தினார். ஆனாலும் பிரதமர் மோடி இவரை அரவணைத்துதான் செல்ல முயன்றார். ஆனாலும் காங்கிரஸ் மீதான தனது விசுவாசத்தை காட்ட தன் பதவியின் கண்ணியத்தை மறந்து பத்திரிக்கையாளர் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை மறைமுகமாக சாடிப் பேசி வந்தார். கடைசியில் பதவி நீட்டிப்பு தரப்படவில்லை.
இந்த நிலையில், அப்போது எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் பிரபல பொருளாதார விமர்சகரும், பத்திரிக்கையின் ஆலோசனை ஆசிரியருமான சுவாமிநாதன் ஐயர் கூட தனது கட்டுரையில் குறிப்பிடுகையில் “மத்திய அரசு ரகுராம் ராஜனுக்கு 2 வது முறையாக பதவி நீட்டிப்பு அளித்திருக்க வேண்டும். அளிக்கப்படாததால் இனி வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் குறைந்து விடும். 100 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியே சென்று விடும். பங்குசந்தைகள் சரியும், கரன்சி மதிப்பு அபாயகரமாக வீழ்ந்து விடும், மொத்தத்தில் இந்திய பொருளாதாரமே நசுங்கி விடும் என்றெல்லாம் உரக்க கத்தினார். ஆனால் அவருக்குப் பின் ஒருவர் ரிசர்வ் வங்கியாக பணியேற்று முடித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனாலும் சுவாமி நாதன் ஐயர் கூறியதுபோல எந்த ஒன்றும் நடைபெறவில்லை. பங்கு சந்தை ராஜன் சென்ற பிறகுதான் பங்கு சந்தை கம்பீரமாக எழுந்தது. பொருளாதாரமும் ஐயர் சொன்னவாறு படுபாதாளத்தில் வீழ்ந்து விடவில்லை. இன்றைக்கு வங்கிகளின் நிதி நிலையும் மேம்பட்டிருக்கிறது என ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரகுராம் ராஜன், இந்து பிசினஸ் லைன் நிழ்ச்சியில் பேசும்போது, முரண்பாடான கருத்துக்களைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத சகிப்புத்தன்மை இல்லாத சூழல் நாட்டில் நிலவுகிறது. சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம்தான் புதிய சிந்தனைகள் உருவாகும். இந்த பலம் தான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும். அப்போது தான் மிகப்பெரிய கல்வியாளர்கள் எந்த விதமான அச்சமில்லாமல் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் எனக் கூறி மத்திய அரசுடன் தனது மோதலை மீண்டும் தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் யாரையோ காக்காய் பிடிக்கும் எண்ணத்துடன் அவர் பேசி வருவதாக கூறப்படும் இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சமீபத்தில் ரகுராம் ராஜன் குறித்து அளித்த பேட்டியில் “இந்த ஜென்டில்மென் ஒரு அரசியல்வாதியை போல பேசுகிறார். உண்மையில் தான் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment