Wednesday, 26 December 2018

தமிழகத்திற்கு ₹1,996 கோடி ஒதுக்கிய மோடி சர்க்கார் :

http://www.kathirnews.com/2018/12/20/india-buys-crude-oil-in-rupees/
.

தமிழகத்திற்கு ₹1,996 கோடி ஒதுக்கிய மோடி சர்க்கார் :

நெடுஞ்சாலைகள் விரிவாகத்திற்கும் புதிய பாலங்கள் அமைக்கவும் நெடுஞ்சாலை துறை ஒப்புதல்
.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டை செய்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை அகலப்படுத்தவும், புதிய பாலங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து அதிகம் செல்லும் இரண்டு வழித்தட சாலைகளை நான்கு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தவும், புதிதாக பாலங்கள் அமைப்பதும் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை அலகு சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக ஆயிரத்து ₹1,996 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை மத்திய நெடுஞ்சாலை துறை அளித்துள்ளது. இதில், சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற முக்கிய நகரில் 10 இடங்களில் பெரிய மேம்பாலம் மற்றும் இரண்டு வழித்தடசாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இந்த பணிகள் மேற்கொள்ள வசதியாக ஒவ்வொன்றிற்கும் தலா ₹50 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் 2018-19ல் 71 சாலை மற்றும் பால பணிகளுக்கு ₹1996.40 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலை, காரைக்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் சாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் -சிவகாசி – விருதுநகர்-அருப்புக்கோட்டை – திருச்சுழி -பார்த்திபனூர் சாலை உட்பட 10 முக்கிய சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலபடுத்தப்படுகிறது. தற்போது, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் விடப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணிகள் தொடங்கப்படும்’ என்று கூறியதாக தினகரன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...