Wednesday, 26 December 2018

இந்தியாவில் குடும்ப அரசியலால் ஆண்டுக்கு 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி குறைகிறது – உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல்.


http://www.kathirnews.com/2018/12/22/dynasty-poltiics-impacts-indian-economy/
.

இந்தியாவில் குடும்ப அரசியலால் ஆண்டுக்கு 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி குறைகிறது – உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல்.

இந்தியாவில் 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குடும்ப அரசியல் நிலவி வருவதாகவும், இது வளரும் நாட்டுக்கு சவாலான பிரச்சினையாக உருவாகி வருவதாகவும், குறிப்பாக மாநிலங்களின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.5 சதவீதம் குறைந்து வருவதாகவும் உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பிரபல ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் குடும்ப ஆட்சியை முதன் முதலாக தேசிய அளவில் தொடக்கி வைத்தது காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் தொடங்கிய இந்த குடும்ப வாரிசு அரசியல் நோய் இன்று 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் பரவி மிகப்பெரிய நோயாக வளர்ந்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் சேவையை முன் நிறுத்தும் எவர் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற நிலைமையை ஒழித்து பண பலத்தை பெருக்கிக் கொண்டு எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், கட்சியையும், ஆட்சியையும் குடும்ப நலனுக்கு ஆதரவாக, ஒரு நிறுவனம் போல நடத்தலாம் என்ற தைரியம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நினைக்கும் தலைவர்கள் துணிந்து ஊழலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் சிறைக்கு சென்று வருவதையும் ஒரு அசிங்கமாக நினைப்பதில்லை. ஜாமீன் எடுத்துக் கொண்டு அரசியலில் ஈடுபடுவதும், தேர்தல்களில் வெற்றி பெறுவதுமாகவும், மறுபடியும் கொள்ளை அடிப்பதுமாக இருக்கிறார்கள்.

Advertisement

ஊழல் செய்வது, சிறைக்கு செல்வது, ஜாமீனில் வெளியே வருவது, பிறகு மீண்டும் வெற்றி பெற்று தங்கள் மீதான வழக்குகளின் சாட்சிகளை கலைத்து விடுவது, தங்களுக்கு வசதியான திட்டங்களை தீட்டி மீண்டும் கொள்ளை அடிப்பது, அடுத்து மத்தியில் ஆட்சி மாறும்போது தங்களை காப்பாற்றிக் கொள்வது, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே மத்தியில் நடைபெற்று வரும் நல்லாட்சியினை கவிழ்க்க கூட்டு சேர்வது  இப்படி மக்களையும், நாட்டையும் ஏமாற்றும் குறுக்குவழி ஜனநாயகத்தின் தாக்கம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த குடும்ப அரசியல் நோய் நேரு குடும்பத்திலிருந்து தோன்றி, வளர்ந்து முதன் முதலாக தமிழகத்திலிலுள்ள கருணாநிதி குடும்பத்து பரவியதாகவும் அடுத்து ஒவ்வொரு மாநிலமாக பரவி இன்றைக்கு 12 மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்த குடும்பங்கள் சவாலாக உள்ளதாகவும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

உலக வங்கி நடத்திய ஆய்வொன்றில் குடும்ப ஆட்சி இல்லாத மாநிலங்களின் வளர்ச்சியைவிட குடும்ப ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் குறைவாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாக வாரிசு அரசியல் தொடங்கிய உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் கட்சிதான் மாநிலம் முழுக்க அனைத்து பதவிகளையும் பிடித்துக் கொண்டு பணம், இனம், குடும்பம் என்ற குட்டைக்குள் மூழ்கி அந்த மாநிலத்தின் வளர்ச்சியை பாதித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடும்ப அரசியல் நோய் பரவியுள்ள மாநிலங்களின் பட்டியலையும் மாநிலங்கள், கட்சி வாரியாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

·         தமிழ்நாடு – கருணாநிதி குடும்பம்

·         ஒடிசா – பட்நாயக் குடும்பம்

·         ஜம்மு & காஷ்மீர் – அப்துல்லா குடும்பம்

·         உத்தர பிரதேசம் – முலாயம் குடும்பம்

·         ஹரியானா – சவுதாலா குடும்பம்

·         பீகார் – லாலு குடும்பம்

·         தெலுங்கானா – கே.சி.ஆர் குடும்பம்

·         மகாராஷ்டிரா – பவார் குடும்பம்

·         ராஜஸ்தான் – பைலட் குடும்பம்

·         மத்தியப் பிரதேசம் – சிந்தியா குடும்பம்

·         கர்நாடகா – தேவேகவுடா  குடும்பம்

·         அசாம் – கோகோய் குடும்பம்

இந்த பட்டியல் உதாரணம்தான். இன்னும் பல மாநிலங்களிலும் வாரிசு அரசியலுக்கான விதைகள் தூவப்பட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாமல் மேற்கண்ட குடும்பங்களில் உள்ள எல்லா தலைவர்களுமே, அவர்களின் குடும்பங்களுமே ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உள்ளன. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தேசிய ஹெரால்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்களது மருமகன் ராபர்ட் வதேரா மீது ஏராளமான மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. இது தவிர, காங்கிரஸ் கட்சியின் வம்ச ஆட்சியின் போது, பல மோசடிகளும் வெளிச்சத்திற்கு வந்தன. பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஊழல் வழக்கில் தீர்ப்பு பெற்ற குற்றவாளி. ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் பணியமர்த்தல் ஊழலில் ஈடுபடுத்தப்பட்டதற்காக 10 ஆண்டு கால சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அஜித் பவார் எந்த நேரத்திலும் ₹72,000 கோடி நீர்பாசன திட்ட ஊழலில் குற்றவாளி என தீர்மானிக்கப்படலாம். இப்படி வம்சாவழி ஆட்சி காரணமாக இந்தியா நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பிரதமர் நரேந்திர மோடியின் 2014-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி வம்ச அரசியலை நிராகரித்தது.

அதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில், இந்தியா ஒரு நீண்ட வழியிலிருந்து வெளியே வந்திருக்கிறது, ஆனால் இன்னும் வம்ச அரசியலில் இருந்து முற்றிலும் வெளியேறவில்லை. அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பீகாரில் காணப்படும் ‘அண்மைய போக்குகள்’ ‘வம்சத்தின்’ மீது ‘அபிவிருத்தி’ என்பதை காட்டும் வகையில்தான் உள்ளது. இது ‘புதிய இந்தியா’ கட்டமைப்பதில் ஒரு சாதகமில்லாத போக்கு ஆகும் என வருணித்துள்ள அந்த பத்திரிகை உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங்கின் குடும்ப ஆட்சியின் பரவலை வெளிக்காட்டும் வகையில் ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகள் ஊழல் ஆட்சியின் துவக்கத்துக்கு சாதகமாக எதிர்காலத்தில் ஆகிவிடுமோ எனவும் அந்த பத்திரிகை கவலை தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...