Wednesday, 26 December 2018

2019 பொதுத்தேர்தலில் மோடியின் கரங்களை வலுபடுத்த பா.ஜ.க வேட்பாளர்களாக களம் இறங்கும் தோனியும் கம்பீரும்!

2019 பொதுத்தேர்தலில் மோடியின் கரங்களை வலுபடுத்த பா.ஜ.க வேட்பாளர்களாக களம் இறங்கும் தோனியும் கம்பீரும்!

 -

 

2019 பாராளமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனியும், கவுதம் கம்பீரும் பா.ஜ.க சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இந்தியா.காம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி கவுதம் கம்பீர் புது டெல்லி தொகுதியில் எம்.பி வேட்பாளராகவும், தோனி ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வகுத்துள்ள பிரபலமானவர்களை பா.ஜ.க-வில் இணைப்பது, தேர்தல்களில் களமிறக்குவது போன்ற யுக்தியின் படி தோனியின் செல்வாக்கு நாடு முழுவதும் பா.ஜ.க-விற்கும், பிரதமர் மோடிக்கும் வலு சேர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் ஐ.பி.எல் அணியின் கேப்டான தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் தோனிக்கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்திரளான விசிறி கூட்டம் இருப்பதாகவும், இவற்றையெல்லாம் அறுவடை செய்ய தோனியை பா.ஜ.க பயன்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

http://www.kathirnews.com/2018/10/22/dhoni-gambhir-on-bjp/

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...