Wednesday, 26 December 2018

கடைசியில் GST 0% மற்றும் 5% ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் :

https://www.facebook.com/185115731901122/posts/601075826971775/
.

கடைசியில் 0% மற்றும் 5% ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் :

நிதியமைச்சர் விளக்கம் - கதிர் #GST #ArunJaitley

http://www.kathirnews.com/2018/12/26/arun-jaitley-about-gst/

.
http://www.kathirnews.com/2018/12/26/arun-jaitley-about-gst/
..

வரிவசூல் அதிகரிக்கும் போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜி.எஸ்.டி.யில் 1,216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளது. சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டி‌ஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

சிமெண்டு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டும் தொடர்ந்து 28 சதவீத வரிவிகிதத்தில் உள்ளன. மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் வரிவிகிதம் ஏற்கனவே 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும் முதல் வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ₹89,700 கோடியாக இருந்தது. 2–வது வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ₹97,100 கோடியாக உள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும். ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இதில் விதிவிலக்கானவை. அவைகளுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். முன்னதாக மும்பையில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர்  டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான ஜி.எஸ்.டி.யை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் வருமாறு:-

32 அங்குலம் திரை அளவு கொண்ட டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டர், டிஜிட்டல் கேமரா, ரப்பர் டயர், வீடியோ கேம்ஸ், லித்தியம் பேட்டரி பவர் பேங்க், கியர் பாக்ஸ், கப்பி உருளை (புல்லீஸ்), பரிமாற்ற தண்டு (டிரான்ஸ்மிஷன் சாப்ட்), வளைவு அச்சு (கிராங்க்) ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் பாகங்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ₹100-க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகள் மீது தற்போது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ₹100-க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. தக்கை (கார்க்) மற்றும் தக்கையில் செய்யப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஊன்று கோல், சாம்பல் செங்கல், பளிங்கு கசிவு (மார்பிள் ரப்பிள்) மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி. ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 31-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல்களை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...