*ஏன் மோடி மீண்டும் வேண்டும்?-4*
உலகில் நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும், அசிங்கமாக, பிறர் பார்க்கும்படி , சுகாதாரமற்ற வகையில், காலைக் கடன்களைக் கழிக்க மாட்டார்கள்.
ரயிலில் போகும் போதோ, அல்லது சாலைகளில் பயணிக்கும் போதோ, இரு மருங்கிலும், வெட்கமின்றி மல-ஜலம் கழிப்போரை நாம் பார்த்து அருவருப்பு அடைந்துள்ளோம்.
கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், பெண்களும், குழந்தைகளும், மிகவும் சிரமப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள இவ்வளவு காலம் பிடித்துள்ளது.
மோடி அரசு வந்த பிறகு, ‘சுத்தமான இந்தியா’ என்னும் பணியில் ( ஸ்வாஷ் பாரத் அபியான்) , மஹாத்மாவின் 150-வது பிறந்த நாளான 2-10-2019 க்குள் , 1.96 லட்சம் கோடி செலவில், நாடெங்கும், பட்டி, தொட்டிகளில் கூட, 9 கோடி கழிப்பறைகளை அமைத்து , கழிப்பறை இல்லாத வீடே இந்தியாவில் இல்லை என்னும் நிலையை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இப்போது 93905674 கழிப்பறைகள் கட்டப் பட்டு விட்டன.
இதோடு, சாலைகள் கட்டமைப்புகள் ஆகியவையும் இந்தத் திட்டத்தின் கீழ் பொலிவு பெற்று வருகின்றன.
இவ்வளவு பணிகள் நடைபெற்றும், ஊழல் ஏதும் நடக்க வில்லை என்பது தான் மோடியின் நேர்மையைக் காட்டுகிறது.
மோடியைத் தவிர வேறு யாரும் இத்தகைய முன்னேற்றங்களை செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
பின் ஏன் தயக்கம்? மோடி கரங்களைப் பலப் படுத்துங்கள்.
No comments:
Post a Comment