முடியாது என சொன்னதை மோடி சாதித்துகாட்டுகிறார்
என்பதால் நாட்டிலே பலரும் பையித்தியம் முற்றும் நிலையிலே திரிகிறார்கள் போல. இதிலே ஒரு காலத்திலே ஆதரித்தேன் என சொல்லிக்கொள்ளும் சாதிவெறி பிடித்த மொரட்டு இந்த்துத்துவாக்களிலே இருந்து முழு மூடர்களாக திரியும் கபோதிகள் வரை அடக்கம்.
சிபிஐயும் இந்திய உளவுத்துறையும் இணைந்து வேலை செய்தால் குற்றவாளிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது எப்போதுமே சாத்தியமாக இருந்தது. என்ன அதுக்கு இரண்டு அமைப்புகளிடையும் வேலை வாங்கனும். அதைவிட முதல்ல சிபிஐ விசாரணையிலே சிக்காம இருக்கனும்.
வாஜ்பாய் காலத்திலே குவட்டரோச்சியை கோட்டை விட்டாங்க ஞாபகம் இருக்கா. அழகா கொள்ளுபருப்பு மாதிரி வைச்சு அரைச்சிருக்கலாம். இந்த ஜெட்மலானி பேச்சை கேட்டு மலேசியா இருந்த ஆளை தப்பிக்கவிட்டாங்க. அப்புறம் வழக்கையே இழுத்து மூடவேண்டியிருந்தது.
அதே மாதிரி இந்த அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழலையும் இழுத்து மூடிடலாம் என நினைச்சுதான் சிபிஐ இயக்குனர்களிடம் சண்டை மூட்டி விட்டு சந்தி சிரிக்கவைச்சது. ஆனா மோடி அரசும் அஜித் தோவலும் ஒழுங்கா அதை சரிகட்டிட்டாங்க. சிபிஐ இயக்குனராக இருந்து நீக்கப்பட்ட அலோக்வர்மா மீது இருக்கும் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? இப்ப தூக்கினாங்களே இந்த மைக்கல் அந்த மைக்கலை தூக்க தப்பிச்சு போகாம இருக்க கண்கானிக்க துபாய்க்கு அனுப்பி உளவுத்துறையினரை துபாய் அரசிடம் போட்டுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு. ரா உளவுத்துறையின் தலைவர் நேராக மோடியிடமே புகார் அளித்து சிபிஐ இயக்குநரை தூக்கவேண்டும் என கேட்டிருக்கிறார்.
இதை எல்லாம் பத்திரிக்கைகளிலே படிக்கலையேன்னு கேக்காதீங்க. கான்கிரஸ் களவாணிகள் கையிலே இருக்கும் பத்திரிக்கைகள் எப்படி எழுதும்?
இதே போல விஜய் மல்லையாவும் கொண்டு வரப்படும் நாள் தொலைவில் இல்லை. நாலே நாளிலே தீர்ப்பு. அப்படியே அலாக்கா தூக்கிட்டு வந்து மும்பையிலே போட்டு கும்மி அடிக்க போறாங்க.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மோடி சவூதியிடம் பேசியது இன்னோர் பெரும் சாதனை. நீ சரியா விலைக்கு விற்கிறாயா இல்லை நான் அமெரிக்க ஷேல் ஆயில் அல்லது ஈரானிடம் வாங்கட்டுமா என பேரம் பேசி விலையை குறைத்திருக்கீறார். ஜி20 மாநாட்டிலே சவூதி பட்டத்து இளவரசர் சல்மானிடம் பேசியிருக்கிறார். இதுவே வேறு யாராவது ஆக இருந்திருந்தால் இந்த மானங்கெட்ட ஊடகங்களின் பேச்சை கேட்டுக்கொண்டு சவூதி ஒரு பத்திரிக்கையளரை கொன்றதை பத்தி பேசியிருப்பார்கள் சோலி சுத்தமாயிருக்கும்.
அந்த பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது உள்நாட்டுவிவகாரம். அமெரிக்க பத்திரிக்கையிலே வேலை செய்யப்பட்டது போல கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்காவே கவலைப்படல. இந்தியா எதுக்கு அதிலே மூக்கை நுழைக்கனும்? அதிலே நமக்கு என்ன பலன்? யாருக்கு என்ன பலன்?
நேற்றைக்கு அமீரகத்தோடு பணமாற்று ஒப்பந்தம் போல சவூதியிடம் பெருமளவுக்கு பணமாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலே கையெழுத்தாகலாம். சவூதி 40 பில்லியன் டாலர்கள் அதாவது 2 லட்சத்து 80 ஆயிரம் கோடிகள் இந்தியாவிலே முதலீடு செய்கிறது. அதற்கான ஒப்பந்தங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களை போட்டு அதை முழு மூச்சாக முன்னெடுக்கீறது. அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் பேச்சுவார்த்தை ஒருபக்கம் ரஷ்யா-இந்தியா-சீனா பேச்சுவார்த்தை ஒருபக்கம் என மோடி இரண்டு தரப்பிடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து பொங்குகிறார்கள் பொறுமுகிறார்கள். சட்டைய கிழித்துக்கொண்டு அலைவது தான் பாக்கி.
என்ன தான் மூடி மறைச்சாலும் என்ன தான் சேறை அள்ளி தெளிச்சாலும் மக்களுக்கு தெரிஞ்சிடுதே புரிஞ்சிடுதே திரியுதுக.
இந்தியாவிலே சவுதி பெட்ரோலிய அமைச்சர் மோடியை மூன்று முறை சந்தித்து இருக்கார் அதுவும் ஒரு வருசத்திலே. இது எந்த பத்திரிக்கையிலாவது வந்ததா?
சவூதி அமைச்சரின் அந்த பேட்டியிலே பல எரிசக்தி மாநாடுகளிலேயும் கலந்து கொண்டிருக்கேன் என சொல்றார். ஆமாம் மோடி வந்ததற்கு பிறகு இந்தியா பலதரப்பட்ட சக்தி மாநாடுகளை நடத்துகிறது. எரிசக்தி, சூரியஒளி உற்பத்தி என. அதிலே எல்லா தரப்பையும் கூட்டி பேசி அமைச்சர்களூம் அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆலோசனைகள் கேட்டு அதை செயல்படுத்தறாங்க. இதெல்லாம் பேசப்படவே படாது.
சரி இந்த மானங்கெட்ட கேடு கெட்ட ஊடகங்களுக்குத்தான் பிரச்சினை.
மொரட்டு இந்துத்துத்துவாக்களுக்கு என்ன பிரச்சினை? பெட்ரோல் விலை ஏறினா மட்டும் ஏ பாயாச மோடியேன்னு பாயாசம் காய்ச்சவேண்டும். அந்த விமர்சனத்தை விமர்சனமா ஆதங்கமா வைச்சாக்கூடா ஏத்துக்கலாம். அதைவிட்டுட்டு உடனே கிளம்பிடவேண்டியது பாயாசம் காய்ச்ச.
ராஜஸ்தானிலே பிஜேபி அடித்து பிடித்து வெற்றீ பெறும் எனவே வாக்குஎந்திரம் மோசம் என ஆரம்பிச்சாச்சு. மபி, சத்தீஸ்கர் பத்தி மூச்சே விடறது இல்லை. தெலுங்கானாவிலே கணிசமான இடங்களை பெற்றால் அப்புறம் இருக்கு விளையாட்டு.
ஆலம்பானா நான் உங்கள் அடிமை என்றே இந்த மொரட்டு இந்த்துத்துவாக்களுக்கு இருந்து பழகிவிட்டது. எனவே தான் சுண்டல் போல் இந்தா ஆளுக்கு நாலு என ஜாமீன் கொடுக்கும் பஞ்சாயத்துக்களை கண்டிக்க இடமே இல்லை ஆனா யோகி மகராஜ் அதை பண்ணிட்டார் இதை பண்ணிடார் என பொங்க வேண்டியது.
போங்கப்பு என்னா அழுதாலும் புரண்டாலும் சட்டைய கிழிச்சுட்டே திரிஞ்சாலும் மோடி தான் இன்னும் 15 வருசம் பிரதமரா இருக்க போறார்.
No comments:
Post a Comment