Monday, 10 December 2018

DMK AND BJP. JUST COMPARISON

"பிரதமர் மோடி, இந்தியாவை காவி மயமாக்க முயற்சி செய்கிறார்.…
அவரது மத்திய அரசை விரட்டியடிக்க வேண்டும் "
என்று திமுகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு அறைகூவல் விடுத்துள்ள இசுடாலின் அவர்களே,

ஒருவர் சவால் விடுக்கின்றார் எனில்,
அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும்.
யாருக்கு சவால் விடுக்கின்றோம் என்று
எண்ணிப் பார்க்கவேண்டும்.

அண்ணாத்துரை ஆரம்பித்த கட்சியை…
உங்கள் தந்தை அபகரித்துக் கொண்டு,
அதன் தலைவராக ஐம்பது ஆண்டுகள்
இருந்த போதும் -
இரண்டு வருடங்களாக கோமாவில் இருந்தபோதும் - அவரும் விரும்பவில்லை...
உங்களை அடுத்த தலைவராக ஏற்க மக்கள்  முன்வரவில்லை..

தந்தை மறைந்து போனதால் மட்டுமே
திமுகவின் புதிய தலைவராகிவிட்ட
உங்களுக்கு,
காவியைப் பற்றியும் மோடியைப் பற்றியும்  பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.…

முதலில் #காவி எனப்படும் RSS..பாஜகவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------------------
* 1980ல் ஆரம்பிக்கப்பட்ட பா.ஜ.க.வின்
கடந்த 38 ஆண்டுகால வரலாற்றில்
10 ஜாம்பவான்கள், தலைவர்களாக
இருந்துள்ளனர்.
ஆனால் 70 வருட திமுகவின் இரண்டாவது தலைவராக இப்போதுதான் உங்களுக்கு நீங்களே முடி சூடிக் கொண்டீர்கள்.

எது ஜனநாயகக் கட்சி?
------------------------------------------------------------------------------
*திமுக ஆரம்பித்த 30 வருடங்களுக்கு
பின்னரே உருவான கட்சி பாஜகவில்
இன்றைக்கு அந்தக் கட்சியின் -

ஒரு அடிமட்டத் தொண்டன்
பிரதமராக இருக்கிறார்.…

ஒரு அடிமட்டத் தொண்டன்
ஜனாதிபதியாக இருக்கிறார்.…

ஓரு அடி மட்டத் தொண்டன்
துணை ஜனாதிபதியாக இருக்கிறார்.…

அந்த பாஜக கட்சிதான்,
இந்தியாவை கம்பீரமாக ஆள்கிறது.
அந்த பாஜக கட்சிதான்,
இந்தியாவில் 15 மாநிலங்களை
தனியாகவே ஆள்கிறது.…
அந்த பாஜக கட்சிதான்,
இந்தியாவின் 4 மாநிலங்களை
கூட்டணி கட்சிகள் உதவியுடன்
ஆள்கிறது.

அது மட்டுமல்ல, அந்த பாஜகதான்
உலகத்திலேயே பெரிய கட்சியாக
கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

அந்த பாஜக கட்சிதான், இன்றைக்கு
345 MPக்களையும் (272 + 73)
1500 MLAக்களையும் கொண்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------
14 வருடங்கள்முதல்வராக இருந்த…
41/2 வருடங்களாக
பிரதமராக இருக்கின்ற
#மாமனிதன் மோடியின் இன்றைய சொத்து விபரம் என்ன என்று தெரியுமா?

இந்த இந்திய நாடு மட்டும்தான்.…

அவருடைய குடும்பம் எப்படி இருக்கிறது
என்று நாட்டுக்கே தெரியும்?

மைனாரிட்டியாகவே தமிழ்நாட்டை
ஆண்ட உங்கள் குடும்பம் இன்றைக்கு
எப்படி இருக்கிறது?

முரசொலி மாறன், தயாநிதி, அழகிரி
கனிமொழி என்று  குடும்பத்தினருக்கே
பதவிகளை பங்கு போட்டுக்கொடுத்த
குடும்பக்கட்சிதான் உங்களுடைய திமுக.…

அது மட்டுமா?

உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி
கயல்விழி என்று அடுத்தடுத்து நண்டு சிண்டுகளெல்லாம் பதவிக்கு வர
வரிசை கட்டி நிற்கிறது…

ஐந்து முறை முதலமைச்சராக இருந்து,
500 தலைமுறை உட்காந்து சாப்பிடும்
அளவுக்கு சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.…

டிவி சேனல்கள் மட்டும் 45 இருக்கின்றன.…

அதுமட்டுமின்றி,  Sun Direct, SCV என்று ஒவ்வொரு குடிமகனும் மாதா மாதம் உங்கள் குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அனைவரையும் கொண்டு வந்தாகிவிட்டது.

அசையா சொத்துக்கள் பற்றி கணக்கே
இல்லை.
அசையும் சொத்துக்கள் எனில்
லம்போகினி முதல்  இருந்து ஹம்மர் வரை
உங்களிடம்  இல்லாத கார்களே இல்லை.…???
--------------------------------------------------------------------------
இப்படி,
கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை
வாழும் நீங்கள்தான் -

மோடிஜியை எதிர்க்கப் போகிறீர்களா?
அவர் பெயரைச் சொல்லும் தகுதி கூட உங்களுக்கு கிடையாது.
பேசுவதற்கு மைக் கிடைத்துவிட்டால்,
எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா?

இன்றைக்கு ஒரு தெருமுனைக் கூட்டம்
போட வேண்டும் என்றால் கூட,
காசு கொடுத்து கூட்டத்தை கூட்டும்
கேவலமான நிலைமையில்தான் 
தி.மு.க இருக்கிறது.…

ஆனால்,
மோடிஜிக்காக உயிரையும்
கொடுக்க கோடிக்கணக்கான
இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.…

அந்த நம்பிக்கைதான் அவருடைய சொத்து…
------------------------------------------------------------------------------
70% காவிமயமாகியுள்ள இந்தியாவின்
எஞ்சியிருக்கும் பகுதிகளும் விரைவில்
காவிமயமாகும்.…
அதை தடுக்க உங்களால் முடியாது.…

2019 மட்டுமல்ல 2024ம் மோடிஜியே
வெல்வார்.
அவர் தான் பிரதமர்.…
அவரை விரட்டி அடிக்க திமுகவினால் முடியாது.…

பாஜக - நேர்மையாக வளர்ந்து கொண்டேவருகிறது.…

திமுக - வேகமாக அழிவை நோக்கி
ஓடிக் கொண்டேயிருக்கிறது…

அறைகூவல் விடுப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்…
அது உங்களுக்கு இல்லை...

பாரத் மாதா கீ ஜே...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...