Monday, 10 December 2018

இந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு விவசாயிகளுக்கு என்னென்ன செய்திருக்கிறது?

இந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு விவசாயிகளுக்கு என்னென்ன செய்திருக்கிறது?

1 13 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கியிருக்கிறது

2 விவசாய கொள்முதலுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை 2014 ஐ காட்டிலும் இரு மடங்காக உயர்த்தியிருக்கிறது

3 விவசாயிகளுக்கான வங்கிக்கடன் தொகை 2014 ல் 6 லட்சம் கோடியிலிருந்து இந்த ஆண்டு 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.. 4 ஆண்டுகளில் சுமார் 80 சதவீதம் அதிகம்

4 E - NAM எனும் இணையத்தளம் உருவாக்கி, அதன் மூலம் தேசத்தில் உள்ள அணைத்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட மண்டிகளிலும் விவசாயிகள் தங்கள் விவசாய பொருட்களை இடை தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய வழி செய்திருக்கிறது

5 பாஜக ஆளும் அணைத்து மாநிலங்களிலும் அரசே நேரடியாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்து, அதற்க்கான பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திவிடுகிறது. இதன்மூலம் இடைத்தரகர்களுக்கான கமிஷன் பெருமளவு தவிர்க்க பட்டிருக்கிறது

5 இந்தியாவில் விவசாய விளைச்சலால் பஞ்சம் பட்டினி ஏற்படுவதில்லை.. உணவு பொருட்களை சரியான நேரத்தில் தேவைப்படும் இடங்களில் கொண்டுபோய் சேர்க்க முடியாததாலேயே இந்த பிரச்சனை.. அதை கணக்கில் கொண்டுதான் மோடி அரசு 42 பெரிய உணவு பதப்படுத்தும் ஆலைகளை அமைத்துவருகிறது.. தமிழ்நாட்டில் கோவையில் கட்டிவருகிறது.. இது பெருமளவில் உணவை பதப்படுத்த உதவுவது மட்டுமில்லாமல், அதிக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்

6 இந்தியா முழுவதும் 105 நுண்ணீர் பாசன திட்டங்கள் வகுத்து, டிசம்பர் 2019 க்குள் சுமார் 60 லட்சம் Hectare நிலத்திற்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த திட்டம் வகுத்து, February 2018 வரை ஏற்கனவே 40 லட்சம் Hectare நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்திவிட்டது

7 2010 - 2014 வரை மன்மோகன் அரசு போட்ட கிராமப்புற சாலைகளின் அளவு 19000 கிலோமீட்டர்.. 2014 - 2018 வரை போட்ட கிராமப்புற ரோடுகள் 28000 கிலோமீட்டர்.. நான் முன்பே சொன்னதுபோல, கிராமங்களை நகரங்களுடன் இணைத்தால்தான் விவசாயிகள் நகரங்களை நோக்கி குடிப்பெயர்வது குறையும், விவசாய பொருட்கள் சந்தைகளுக்கு வீணாவதற்குள் சென்றடையும்

8 மோடியின் Parampragat Krisi Vikas Yojana மூலம் சுமார் 5 லட்சம் hectare ஐ இயற்க்கை விவசாய பூமியாக மாற்றி வருகிறது.. இதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 20000 , ஒரு hectare க்கு, விதைகள் வாங்கவும், பொருட்களை சந்தைக்கு கொண்டு சேர்க்கவும் வழங்கி வருகிறது..

9 இதை தவிர தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக நதிகள் இணைப்பை செய்து  வருகிறது

இதுபோல இந்த அரசின் விவசாய வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.. கடந்த 60 ஆண்டுகள் காங்கிரஸ் செய்ததை விட இந்த அரசு கடந்த  4 ஆண்டுகளில் செய்த சாதனைகள் அதிகம் .. நம் நாட்டில் கடன் தள்ளுபடி செய்தால் மட்டுமே அது விவசாயிகளுக்கான அரசு என முத்திரை குத்துகிறோம்.. ஏன் இந்த iphone அய்யாக்கண்ணு போன்ற ஆட்கள் மாநில அரசை கடன் தள்ளுபடி செய்ய இங்கே போராடவில்லை என்று யோசிக்க வேண்டும்.. இந்த விவசாயி போராட்டம் என்பது முழுக்க முழுக்க  அரசியல் காரணத்திற்க்காக செய்யப்படும் தூண்டிவிடப்பட்ட போராட்டம்.. இதை பொது மக்கள் உணரவேண்டும்.. உணர்ச்சிவசப்படாமல் நான் சொன்ன அனைத்தும் உண்மையா என்று நீங்களே தேடிப்படித்து சரி பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்

ஜெயஸ்ரீ ராஜன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...