சின்னசாமி செந்தில் ஏழதியது
இன்று வரை ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
நான் ஒரு முறை கூட மோடிக்கு ஒட்டு போடவில்லை , கடந்த பாரளுமன்ற தேர்தலில் அம்மாவுக்கு தான் ஓட்டு போட்டேன் என்று ஊருக்கே தெரியும் ... எனக்கு தெரிந்து என்னுடைய அப்பா காலம் முதல் காங்கிரசுக்கு தான் பிரச்சாரம் செய்தோம், காங்கிரசுக்கு தான் ஓட்டு போட்டோம் ,....
மோடியை குறை கூறும் மக்களுக்கு நான் சொல்லி கொள்வது ....
அவர் சொன்னவற்றில் நெறைய செய்யபடாமல் இருப்பது உண்மையே. ஆனால் நாட்டுக்கு நன்மை தரும் பல காரியங்களை அதிகமாக செய்து உள்ளார் என்பதை யாரும் மறுக்க இயலாது . ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கி இருக்கிறார் ...
உங்கள் வாழ்கை நிலை 2014 க்கு முன் எப்படி, இப்பொழுது எப்படி இருக்கிறது ??... நாடு எப்படி போகிறது?? ...எதிராக்காலம் என்ன ? யாருக்காவது ஆராய்ந்து உண்மையை கூற முடியுமா ??
இன்றிய நிலையில் பல கோடி வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறதே ஏன் ? , இன்னும் வேலை வாய்ப்பு பெருகும் என்பதே உலகறிந்த உண்மை ...
சரி, இவருக்கு மாற்று ஆக வேறு ஒருவரை (இவரை விட நல்லலவர் , திறமையானவர் ) முன் மொழியுங்கள். அவர் இவரை விட சிறந்தவராக இருந்தால் கண்டிப்பாக நாம் ஆதரிக்கலாம்னு ஒரு கேள்வி கேட்டா, தலையை தொங்க போட்டுக்கிட்டு போறீங்க , சில பேர் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி உக்காந்திருக்கீங்க ..... ஏன் ?
எப்ப பாரு மோடி இவங்க account ல 15 லட்சம் போடலைனு கேக்குறீங்க , சரி மோடி 15 லட்சம் போடுவேன் சொன்ன வீடியோ ஆதாரம் கேட்டா , அப்பவும் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கீங்க,
அது சரி 15 லட்சம் இலவசம் ஏன் கேக்குறீங்க ? , (கவுடண்டமணி சொன்ன மாதிரி பிரியா கொடுத்தா எதை வேணும்னாலும் குடிக்கும் மட்ட புத்தி உள்ள ஜென்மங்கள் அல்லவே நாம் ! ) .
அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இலவசம் ஏழைக்கு கொடுத்தா நாடு கெட்டு போச்சு னு அழுவுறீங்க,அதுவும் ஏழைக்கு இல்லாதவனுக்கு , கொடுக்கவே கூடாதுனு படம் எடுத்து கத்துறீங்க ...
தெரியாம தான் கேக்குறேன் நீங்க வாங்குற அஞ்சு பத்து எல்லாத்துலயும் குறைய கண்டுபிடிச்சிட்டு இருந்தா எப்படி ??? .. ஒரு நிமிஷம் உங்கள் சுற்றுப்புறத்தை சுற்றி பாருங்கள் , உங்களிடம் லஞ்சம் வாங்குபவன் , உங்க பொருளை திருடுபவன் , உங்களை அடிப்பவன் , உங்க குழந்தை , குடும்பம் சீரழிப்பவன் ... மோடியா ??
ஒரு காலத்தில் ஊழலில் திளைத்து விளங்கிய இந்தியாவில் எல்லாமே சரி என்று இருந்துது , அதனால் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பை எல்லாரும் வரவேற்றோம், கணக்கில் கொண்டு வர செய்த பண மதிப்பிலப்பை, மற்றும் நேர்மையான மக்களை இளக்காரம் செய்து கொண்டு இருந்த கருப்பு உலக மக்களுக்கு பெரிய இடி யை கொண்டு வந்ததை யாரும் மறுக்க முடியாது .... ஒடனே அவருக்கு ஜால்ரா தட்டினீங்க
பணத்தை கணக்கு காமின்னு சொன்னதில் என்ன தவறு ?? உதாரணத்துக்கு நீங்களே உங்கள் பிள்ளைகளிடம் ,மனைவியிடம் , தன் வேலை ஆட்களிடம் , .. என்ன செலவு செய்தலும் கணக்கில் கொண்டுவா , எனக்கு சொல்லி விட்டு செய் , அதற்கு பில் கொடு , ஆதாரம் கொடு னு கேட்பது மட்டும் ஏன்னு என்று சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் ?
நான் சொல்லவருவது 2019 பாராளுமன்ற தேர்தலில் மோடியை தவிர நல்ல பிரதமர் வேட்பாளர் யாரும் கண்ணனுக்கு எட்டியவரை யாரையும் காணோம் ... மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று எந்த அணி சொல்கிறதோ அவர்களுக்கு தான் என்னுடைய ஓட்டு ....
இப்போது இருப்பதில் யார் பரவாயில்லை என்பது மட்டுமே நம் முன் உள்ள வாய்ப்பு. அதை விட்டுவிட்டு சும்மா குறை சொல்லி பயன் ஏதும் இல்லை ... அது தனி பட்ட மனித துவேஷத்தை தான் உமுழிகிறது....
கண்டிப்பாக இதை விட சிறந்தவர் வரும் வரை , இருப்பதில் சிறிதாகிலும் நல்லவரை ஆதரிக்கத்தான் வேண்டும்... அதுதான் தர்மம் ..,நியாயம் ! , மனசாட்சி ...
அதனால் எதிர்கால இந்திய என்பது உங்கள் வருங்கால சந்ததி பற்றியது என்று நினைவில் வைத்து கொண்டு கருத்து சொல்லுங்கள் .....
No comments:
Post a Comment