சத்தமில்லாமல் 21 நபர்களை நியமித்த பிரதமர் மோடி:
என்ன செய்ய போறாங்க தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி மூலம் நேற்று 21 தனி நபர் கொண்ட அறிவியல், தெழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. The government on Tuesday constituted a 21-member panel to advise PM Narendra Modi on science, technology and innovations.
பிரதமர் நரேந்திர மோடி மூலம் நேற்று 21 தனி நபர் கொண்ட அறிவியல், தெழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு அரசாங்கத்தின் முக்கிய அறிவியல் ஆலோசகர் திரு.கே. விஜய் ராகவன் தலையில் செயல்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.
பிரதமரின் ஆலோசகர் குழு
இந்த புதிய ஆலோசகர் குழுவிற்கு "பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு(Prime Minister's Science, Technology & Innovation Advisory Council-PMSTIAC)" என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக-பொருளாதார பிரச்சினை
இந்த புதிய ஆலோசகர் குழு, இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் ஆலோசனைகள் வழங்குமென்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
17 முக்கிய பணிகள்
அதுமட்டுமில்லாமல் நகரம் சார்ந்த அனைத்து ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த அஆலோசகர் குழு ஆலோசனைகளை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை குழுவின் 17 முக்கிய பணிகளில் ஒன்றாக இதுவும் இருக்குமென்று மோடி தெரிவித்தார்.
முக்கிய உறுப்பினர்கள்
தலைவர் உட்பட 8 முக்கிய உறுப்பினர்கள் மற்றும் 12 சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment