மாறாத திமுக.
இறந்த பிறகும் கூட பணம் சம்பாதித்த கருணாநிதி.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த வருடம் ஊதியம் ரூ 55 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டபோது ஸ்டாலின் அவர்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள் இந்த ஊதிய உயர்வை பெறமாட்டார்கள் பழைய ஊதியமே பெறுவார்கள் என்று புரட்சி வசனம் பேசினார்.
ஸ்டாலினின் இந்தப் புரட்சி வெறும் புரட்டு வேலைதான் என்பது 6 மாதங்களிலேயே ஊருக்கு
தெரிந்துவிட்டது.
திமுக எம்.எல்.ஏ. க்கள் அனைவரும் இப்போது தங்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்று சபாநாயகருக்கு எழுதிக் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல கடந்த 6 மாத காலமாக பெற்றுக் கொள்ளாத உயர்த்தப்பட்ட சம்பளத்தையும் சேர்த்து அரியர்ஸாக திமுக எம்.எல்.ஏ. க்கள் ஒவ்வொருவரும் தலா 6.5 இலட்சத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதுவும் மட்டுமல்ல.. கடந்த பல வருடங்களாக சபைக்கே வராமல் உணர்வில்லாத நிலையில் வீட்டில் இருந்து வரும் கருணாநிதிக்கும் 6.5 இலட்சத்தை வாங்கி அவரது வங்கிக் கணக்கில் சேர்த்திருக்கின்றனர்.
இது போன்ற ஒரு கேவலத்தை நாம் எங்காவது பார்க்க முடியுமா..
திமுக, பொய்வேஷம் போடுதல், மக்களை ஏமாற்ற நல்லவன் போல் நாடகமாடுதல், வஞ்சகம் செய்தல் போன்ற தனது சுய இயல்புகளிலிருந்து சிறிதும் மாறவில்லை.
No comments:
Post a Comment