Monday, 26 November 2018

தற்போழுது தொடர்ந்து சரிந்து வரும் பெட்ரோல் விலைக்கு காரணம்

தற்போழுது தொடர்ந்து சரிந்து வரும் பெட்ரோல் விலைக்கு காரணம்

வரப்போகும் தேர்தல்கள்தான் என சில முட்டாள்களும் , சில அயோக்கியர்களை கதறுவதை கண்டேன்.. ஒன்று மட்டும் புரிகிறது.. இவர்களுக்கு மோடிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடப்போகிறதே என்கிற பதற்றம்தான் தெரிகிறது

சரி.. விஷயத்துக்கு வருவோம்.. இப்பொழுது பெட்ரோல் விலை படிப்படியாக குறைவடகிற்கு காரணம் தேர்தல் அல்ல.. தேர்தல்தான் இலக்கு என்றால் அரசால் இவ்வளவு விலையை குறைக்க இயலாது.. ஒரு மாதத்தில் சுமார் 7 ரூபாய்க்கு மேல் குறைந்திருக்கிறது.. அதற்க்கு காரணம் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதுதான்.. கச்சா எண்ணெய்  விலை ஏதோ தானாக குறையவில்லை.. இந்திய அரசின் பெரும் பங்களிப்பும் அதில் உள்ளது.. ஈரானிடம் உலக நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது என அமேரிக்கா கட்டுப்பாடு விதித்தபொழுது, நாங்கள் அப்படிதான் வாங்குவோம் என தைரியமாக முடிவெடுத்தது, ஈரானிடம் டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் வைத்துக்கொண்டது, ஜப்பானுடன் ரூபாய்க்கு பதிலாக 75 பில்லியன் டாலர் வரை அமெரிக்க டாலராக மாற்றிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டது, எண்ணெய்வளம் உள்ள நாடுகளுக்கு அமேரிக்கா மூலம் கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்க அழுத்தம் கொடுத்து (மற்ற சில நாடுகளுடன் இணைந்துதான்) அதில் வெற்றியும் பெற்றது என சொல்லிக்கொண்டே போகலாம்.. தேர்தல் பயமென்றால் ஒரு சிறு நாட்கள் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த முடியும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஆனால் இவ்வளவு குறைக்க முடியாது..

ஒரு நல்ல நிர்வாகம் என்பது பிரச்சனையே வராமல் தடுப்பதில்லை, பிரச்சனை வந்தால் அதை தைரியமாகா எதிர்க்கொண்டு, அதை சரி செய்பவன்தான் நல்ல நிர்வாகம்.. இந்த ஒரு விஷயமே மோடியின் நிர்வாக திறனுக்கு பெரும் சான்று ..அதனால் இந்த அயோக்கியத்தனமான பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு வேண்டும்..

ஜெயஸ்ரீ ராஜன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...