Monday, 26 November 2018

திருமுருகன் காந்தி என்ற நபர் திடீர் போராளியாக உருவாக்கி -

பொது விசயங்களுக்கு உணர்ச்சிவசப்படும் மாணவர்கள் , இளைஞர்கள் அனைவருக்கும் சின்ன வேண்டுகோள்:

தயவு கூர்ந்து Emotional idiot ஆக இருக்காதீர். அதுவும் முக்கியமாகச் செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள்களில் வரும் செய்தியை நம்பி தயவு கூர்ந்து உணர்ச்சிவசப்படாதீர். ஒரு சின்ன விசயத்தை மட்டும் விரிவாக கூறுகிறேன் ஏன் செய்திகளை படித்ததும் உணர்ச்சிவச படக்கூடாது என்பதற்கு

திருமுருகன் காந்தி என்ற நபர் திடீர் போராளியாக உருவாக்கி -

ஐ நா புகழ் திருமுருகனாக உருவகம் செய்து இப்போது செண்டிமெண்ட் வீடியோ வெளியிட்டு ஒரு கூட்டம் கொஞ்சம் கூட கூசாமல் மக்களை உணர்வுப் பூர்வமாக தூண்டி ஏமாற்றம் செய்கிறது என்பது என் குற்றச்சாட்டு. ஏன் கூறுகிறேன் என்றால் என்றாவது நீங்கள் கேட்டது உண்டா இரண்டு கேள்வி 1.யார் அழைப்பின் பெயரில் திருமுருகன் போன்றவர் ஐ நா சென்று பேசுகிறார்கள்? 2.அப்படிப் பேசி என்ன இதுவரை நடந்துள்ளது என்று???

இது தான் சிக்கல்... மிக எளிமையாக இதன் பின்னணியை கூறுகிறேன் கேளுங்கள்.

ஐ நா - அதன் கீழ் இருக்கும் UN General Assembly , UN Secretariat , International Court of Justice (நாடுகளின் அனுமதியோடு உலக அளவில் நீதி விசாரணை நடத்தும் அமைப்பு), UN Security Council (நாடுகள் மத்தியில் எல்லை பிரச்சனை தொட்டு அனைத்திலும் ஒரு அமைதியை நிலை நிறுத்துவது), UN Economic and Social Council (நாடுகளிடையே வர்த்தக பொருளாதார பிரச்சனைகள் தீர்ப்பது)மற்றும் UN Trusteeship Council இந்த 6 மட்டுமே கொஞ்சம் வழுவான அமைப்புகள். ஆனால் இதற்கே கூட பெரிய அதிகாரம் எல்லாம் கிடையாது. ஓர் அளவிற்கு அதிகாரம் உள்ளது ஏன் என்றால் உலக நாடுகள் 193 சேர்ந்து கொஞ்சம் ஒத்துழைப்போடு நகர்வதால்.

இதற்கு யார் நிதி கொடுப்பது ???

இதற்கு மொத்த நிதியில் Gross national product (GNP)- 27% நிதி ஒதுக்குவதே அமெரிக்கா தான். அடுத்து ஜப்பான் , ரஷ்யா , சீனா , ஜெர்மனி , இந்தியா என்று நிதி அனைத்து நாடுகளும் தரும். ஏழை நாடுகள் மிக மிகக் குறைவான நிதி பகிர்வு. ஏறக்குறைய அமேரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் நிதியிலும் இயங்கும் ஐ நாவில் போய் குரல் கொடுப்பது என்ன சொல்ல!

இப்போது திருமுருகன் காந்தி விவகாரத்தில் இது எதற்கு????

இருக்கிறது , இந்த முக்கியமான ஐ நாவின் 6 பிரிவுகளுக்கே பெரிய அதிகாரம் இல்லாத நிலையில். இதில் ஐ நாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒரு பகுதியாக உள்ள United Nations Human Rights Council(UNHRC ) என்ன மரியாதை இருக்கும்???? {அதை விடக் கொடுமை என்ன தெரியுமா UNHRC கூட இவனுக போய் பேசுவது இல்லை என்பது தான்.}

ஏன் என்றால் இவர்கள் என்றுமே சீனா , ரஷ்யா , கியூபா என்று நாடுகளில் நடக்கும் மனித உரிமை குற்றங்கள் பற்றியோ இல்லை அங்கே உள்ளக் கருத்து சுதந்திரம் பற்றியோ பெரிய அளவில் பேசுவது இல்லை. ஆனால் என் நேரமும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவிப்பதும் - இந்தியா பெண்கள் பாதுகாப்பு இல்லை என்று அறிக்கை விடுவது, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொடுக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை பயன்படுத்தி ஆய்வுகள் அந்த அந்த நாடுகளில் நடத்தி அந்த நாடுகளையே அவமானம் செய்வது கேள்வி கேட்பது என்று ஒரு மட்டமான கூட்டமாக மாறி வருகிறது. இது தான் எதார்த்தம். இதனால் தான் அமெரிக்கா சமீபத்தில் வெளியேறியது. ஐ நாவின் மொத்த செலவினத்தில் 4ல் 1 பகுதியை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவே இதைக் கண்டுகொள்வது செய்வது இல்லை. அதே போல் ரஷ்யா , சீனா எல்லாம் இதை ஒரு அமைப்பாகக் கூட மதிக்காது.

{உலக அளவில் அகதிகள் சார்ந்த விசயத்தில் மட்டும் தான் எனக்கு தெரிந்து இந்த அமைப்புக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. அதுவும் ஐ நாவின் தார்மீக கடமை என்பதால் தவிர வேறு இல்லை.}

இதை ஏன் கூறுகிறேன்?

இங்கே விசயம் என்னவென்றால் இந்த UNHRC அமைப்பில் கூட திருமுருகன் பேசவில்லை. பின் எங்கே பேசினார்????

UNHRC எந்த ஒரு மாத , ஆண்டு அறிக்கையிலும் திருமுருகன் போன்றவர் பேசிய பேச்சின் பதிவு செய்யப்பட்டதாக ஒரு வரி கூட கிடையாது. பின் எங்கே பேசினார் என்றால் அங்கே தான் மொத்த திரைக்கதையும் இருக்கு. இது ஒரு பக்கா ஏமாற்று தந்திரம். இவர்கள் போய் பேசி வருவது தொண்டு நிறுவனங்கள் கூட்டும் கூட்டத்தில். அதாவது மிக எளிமையாகக் கூறினால்

இந்த UNHRC கீழ் மொத்தம் அங்கிகரிக்கபட்ட தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 5039 அமைப்புகள் பல காரணங்களுக்காகப் பதிவு செய்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு முதல் வர்த்தக குரங்குகள் பாதுகாப்பு வரை. நீங்கள் வேண்டும் என்றால் கூட தாராளமாக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி - அதை முறையாகப் பதிவு செய்து ஐநாவின் இந்த UNHRCல் விண்ணப்பிக்கலாம் - நிச்சயம் படிமுறையாக அனுமதி கிடைக்கும். Special consultative status கிடைப்பது எனக்குத் தெரிந்து அவ்வளவு பெரிய கடினம் அல்ல. (General consultative status என்பது இன்னும் சில அங்கிகாரம் என்பது பெரிய அளவில் உலக நாடுகள் முழுவதும் இயங்கும் NGOகள் பெரும். உங்களுக்கு அந்த முழு NGO லிஸ்ட் வேண்டும் என்றால் அதன் விவரம் ஐ நாவின் NGO பிரிவில் கிடைக்கும், தேடி படிக்கவும்.}

அப்படி நீங்கள் NGO வாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தேவையான போது ஜெனிவாவில் உள்ள கட்டிடத்தில் முன்பே விண்ணப்பம் செய்து நான் கூட்டம் நடத்தி விவாதம் செய்ய போகிறேன் என்று பதிவு செய்து கொள்ளலாம். இப்படி கூட்டங்கள் தினமும் கூட நடைபெறும். எனவே இங்கே எவன் வேண்டுமானாலும் போய் பேசலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்கு வழி தெரிந்தால். எனவே திருமுருகனை போன்றவர்களை என்னவோ ஐநா கூப்பிட்டு சிறப்பு தகுதியுடன் பேச வைத்தது போல படம் இங்கே காட்டப்படுவது மக்களை முட்டாள் ஆக்கும் வேலை இல்லையா ???? இதற்கு ஐ நா என்று பொத்தாம் பொதுவாகப் பெயரை வைத்துப் புகழ் தேடுவது நயவஞ்சக நாடகம் இல்லையா?

ஒருவேலை உங்களிடம் NGO இல்லை என்றால் - வேறு எவனாது நடத்துவான் இல்லையா - அதில் நானும் வந்து இந்த விவகாரம் பேச விரும்புகிறேன் என்றால் அதற்கும் வழி உண்டு.மிக முக்கியம் "இந்தியாவிற்கு எதிராக நீங்கள் பிரிவினை பேசத் தயார் என்றால் உங்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்து - ஐ நாவின் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளா நிதியும் வழங்க ஒரு கூட்டமே இருக்கு என்னும் போது இது மிக மிக சாதாரணமான பிரிவினைவாதியின் நாடகம். அவ்வளவு தான்.'

எனவே தான் நான் முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன் "பேசி என்ன நடந்தது ??? என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்????".

மே 17 என்று சொல்லி கொண்டு இலங்கைப் படுகொலைக்கு நீதி கேட்க போகிறேன் என்று இவனுகளும் இன்னும் ஒரு 10,11 இயக்கங்களும் சில ஆண்டுகள் முன்பு என்னா குதி குதித்தார்கள். ஐ நாவில் வோட்டேடுப்பு இந்தியா இலங்கைக்கு ஆதரவு வாங்கப் போராடலாம் நம் தமிழ் சொந்தங்கள் என்று... என்ன சாதித்தனர் என்று கேளுங்கள்??? ஒண்ணும் இல்லை. இங்கே 3 நாள் வியாபாரம் கெட்டது தான் மிச்சம் சிலர் சிறைக்கும் அனுப்பியது இவனுக சாதனை. {நீதிவிசாரனை நடந்து விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் செய்துள்ளனர் , இலங்கை அரசும் செய்துள்ளது என்று தான் கூறியதே தவிர விடுதலைப் புலிகள் உத்தமர்கள் என்று எவரும் கூறவில்லை அங்கே. இது இன்னொரு நாடகம் இங்கே அதை மறைத்துவிடுவது இலங்கை ராணுவ போர் குற்றம் மட்டும் பேசுவது.}

ஆக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்:

இவர்கள் போய் பேசிவிட்டு வந்தது ஒரு தொண்டு நிறுவனங்கள் கூட்டும் side-events ஆகும். இதை UNHRC கூட காதில் கூட வாங்க மாட்டார்கள். இதில் எப்படி ஐ நாவின் Principal organsக்கு போகும்? எனவே இது ஒரு குப்பை முயற்சி. இதில் எந்த பலனும் கிடையாது.

அப்போ இது தெரியாமல் தான் மே17 , நாம் தமிழர் இயக்கத்தினர் போன்றவர் இருக்கிறார்களா???

இல்லை. இவர்களுக்கும் அது தெரியும். ஆனால் மக்களிடம் விளம்பரம் கிடைக்கும் இதன் மூலம். நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒருத்தன் திடீர் என்று போய் ஜெனிவா போயு பேசிவிட்டு - நான் ஐ நாவில் பேசிவிட்டேன் என்று தூத்துக்குடியில் வந்து "அதிரவிட்ட சீமான் , கதறவிட்டோம் உலக நாடுகளை , உலகமே நம்மை வியப்பாகப் பார்க்கிறது" என்று அவன் இஷ்டத்துக்கு வாய் கிழிய வசனம் பேசுகிறான். பேசிவிட்டு வந்த சரி - என்னடா நடந்துச்சு என்ன நடக்கும் கேளுங்கள் எந்த ஒருத்தனும் வாய் திறக்க மாட்டான். மே17 எதற்கு ஆரம்பித்த இப்போது என்ன பண்ணிட்டு இருக்கா? நீங்கள் ஆரம்பித்த அந்த நோக்கம் நடந்ததா???? என்று கேளுங்கள் வாய் திறப்பது இல்லை.

நாடகம் போடுவது தான் இவனுக வேலை.... முழுக்க நாடகம்... அதன் உச்சக்கட்டமாக என்ன பொய் வேண்டுமானாலும் பேசுவது :

'ஊபா' சட்டத்தில் திருமுருகன் கைது செய்ய காரணம் தூத்துக்குடி விவகாரம் என்று அழகா விசயத்தை அப்படியே செண்டிமெண்டா தூண்டிவிட பார்க்கிறார்கள். இவனைக் கைது செய்தது காரணம் "பாலஸ்தீனம் போல நாங்களும் போராடுவோம் என்று பேசியது. அதாவது தனி நாடு அங்கிகாரம் கேட்டு ஆயுதம் ஏந்துவோம் என்று அர்த்தத்தில் இவன் பேசியது தான் இவனைக் கைது செய்யக் காரணம். ஆனால் எதோ தூத்துக்குடிக்கு ஐ நாவில் பேசியதால் தான் கைது என்று அப்பட்டமாக ஏன் இங்கே செய்தியை திரித்துப் பரப்புகிறார்கள்????? இவனுகளை விட ஒரு கேவலமான பிறவி உண்டோ?

அதில் இவர் ஐ நாவில் பேசிவிட்டு திரும்பும் போது கைதாம். ஜெர்மனியில் பதுங்கி இருந்தார் அங்கே இருந்து நாடுகடத்தி கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வர- இதை மறைத்து அப்படியே செய்தியை ஏன் திருப்பவேண்டும்????

இதில் திருமுருகன் குழந்தை அப்பா அப்பா எப்போது வருவீர்கள் என்று கேட்டதாம் சிறைக்கு போகிறார் பிரிந்து என்று அடுத்த செண்டிமெண்ட் வீடியோ. ஆமா கொலை செய்கிறவன் தொட்டு கற்பழிக்கிறவன் வரை குடும்பம் இருக்கு. இப்போது என்னத்துக்கு செண்டிமெண்ட் தூண்டல் ????இங்கே அப்பட்டமாக மாணவர்களை உணர்வுப் பூர்வமாக தூண்டிவிட இப்படியான நாடகங்கள் தேவை. இங்கே பிரிவினையை விதைக்கவேண்டும் என்பது தான் திருமுருகன் & அவரகூட்டத்தின் வேலைத் தவிர எந்த உருப்படியான வேலையும் இவர்களுக்கு இல்லை.

திருமுருகன் முன்பு முதலில் இருந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் இவர் ஜாதி ஒழிப்பு போராளி???. எனக்குத் தெரிந்து இவருக்கு வக்காலத்து வாங்கி எழுதுவது திக , விசி கட்சி ஆட்கள் தான். இதை ஒரு குழுவாக எப்போதும் எழுந்து வா தமிழா , நிமிர்ந்து நில் தமிழா என்று மொழி பின்னால் ஒழிந்து கொண்டு தந்திரமாக வேலை செய்வது. ஆனால் விசி கட்சி ஆட்கள் தான் எனக்குத் தெரிந்து இங்கே அதிகம். {இலங்கைத் தமிழர் என்று அவன் அவன் இயக்கம் ஆரம்பித்து முடிவில் இந்தியா ஒழிக பிரிவினை இது தான் பேச்சாக உள்ளது.}

இறுதியாக :

திருமுருகன் விவகாரம் மட்டும் அல்ல இங்கே பலவும் உண்மைக்கு வேறு வடிவம் இருக்கிறது. இங்கே அனைவருமே அரசியல்வாதிகள் தான் - தந்திரமான அரசியல் இது. உன் நல்ல மனதை எப்படி வசபடுத்துவது என்ற அரசியல். இது போல் நிறைய விவகாரம் உண்மை நீங்கள் நினைப்பது போல் அல்ல.

எவனையும் நம்பாதே ஓட்டு போட்டமா அத்தோட அரசியல் பேசுவதை நிறுத்து. உன் வீட்டிற்கு ஆகவேண்டியதைப் பார்க்கவும். இங்கே போராளி வாங்க மக்கள் குடும்பத்துடன் போராடலாம் வாங்க என்று அழைப்பான் சீமான் , திருமுருகன் எல்லாம் அவன் மனைவி வசதியாக வீட்டில் இருப்பர். இவனுக்க குடும்பம் வந்து ஏன் நேரமும் போராட்டமா நடத்துகிறது??? இல்லை இவர்களைப் போராளிகளாகவும் - நாட்டினை இரட்சிக்க வந்த பிதா மகனாகவும் காட்டி பத்திரிக்கை வியாபாரம் செய்யும் தி இந்து , விகடன் குடும்பம் போராட்ட வீதிக்கு வந்தார்களா??? அனைவருமே உன்னைத் தூண்டிவிட்டு நீ போராட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். விகடன் வீட்டுப் பிள்ளைகள் வியாபாரம் செய்யும் - தி இந்து குழுமத்தின் தலைவர் ராம் மகள் லண்டனில் பிசினஸ் மூமண்ட் செய்திகள் நிபுணராக இருக்க நீ எதற்கு இங்கே உணச்சிவர படுகிறாய்????

ரெம்ப பொங்க வேண்டாம் - எப்போதுமே இப்படி செய்திகளையே படிப்பது பார்ப்பதுமாக இருக்காதே இது உன் மன அமைதியைக் கெடுத்து வாழ்வின் ஆரோக்கியமான தேடலை சிதைக்கும். நீ மன அமைதியை இழந்து நிற்பாய் இவனுகளை என் நேரமும் பின்தொடர்ந்தால். அதுவே அவர்கள் தேவை. எனவே நான் கேட்டு கொள்வது தயவு கூர்ந்து மதம் , ஜாதி , மொழி என்று எதிலும் உணர்ச்சிவசப்பட்டவனாய் இருக்க வேண்டாம். வீட்டைக் கொஞ்சம் பொருளாதார நிலையில் உயர்த்தவும் உன் அம்மா அப்பா வாழ்வில் கொஞ்சம் நிம்மதியான இறுதிக்காலத்திற்கு தேவையான வசதியைக் கொடுக்கவும் நாம் என்ன செய்வது என்று சிந்திக்கவும். {தாய் , தந்தையருக்கு 10லட்சம் ரூபாயிக்கு ஒரு மருத்துவ செலவு வந்தால் நடுதெருவுக்கு வரும் நிலையில் குடும்பத்தை வைத்து கொண்டு நாட்டி நலன் பேசி திரிவது என்னை கேட்டால் வேண்டாத வேலை. }

உணர்ச்சிவசப்படாதே - உணர்சிவத படுத்தும் விதமாகப் பதிவுகளையும் பரப்பாதே... நிதானம் தேவை - ஆய்வு செய்யாது எவரையும் நம்பாதே - என் இந்தப் பதிவையும் நம்பாதே - என்னையும் நம்பாதே. கொஞ்சம் நிதானமா யோசி. தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

"ஒருபடமும் உருபடியா எடுக்காத இயக்குனர் கௌதமன் ஐ நாவில் சென்று பேசினார் செய்தி". அடுத்த ஐ நா புகழ் போரளி தயார்.

-மாரிதாஸ்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...