Monday, 26 November 2018

பிற்படுத்தப்பட்டோர் (OBC) மக்களின் 70 ஆண்டு கால கனவு நிறைவேறி இருப்பதை தமிழக ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ;

பிற்படுத்தப்பட்டோர் (OBC) மக்களின் 70 ஆண்டு கால கனவு நிறைவேறி இருப்பதை தமிழக ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ;

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறியதையடுத்து,மாநிலங்களவையில்  (ஆகஸ்ட் 6) நிறைவேற்றப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொண்டு வரப்பட்டது. ஆனால்,இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப்படாமல்
இழுத்தடிக்குப்படடு வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும், அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.
இதனால் OBC  பிரிவு மக்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா (123-ஆவது திருத்தம்) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுக் கடந்த 2-ஆம் தேதி எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்தத் திருத்த மசோதா மாநிலங்களவையில் (ஆகஸ்ட் 6) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அவையில் இருந்த 156உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க, மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியது. அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்க வேண்டியது கட்டாயம்.மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து சாதி கணக்கெடுப்பு விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிடவும் சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

கடந்துவந்த வரலாறு:

இந்தியத் திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் 26.1.1950 அன்று அமலுக்கு வந்தபோது இந்த நாட்டில் வாழும் “இதரப் பிற்படுத்தப்படவர்கள்” யார் என்பது துவக்கப்படவில்லை. அவர்களை அடையாளம் காண ஒரு ஆணையம் அமைக்கப்படவேண்டுமென அரசியலமைப்புச் சட்டம் 340-ஆவது பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஆணையம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 27.09.1951 அன்று மத்திய அரசிலிருந்து விலகிய பின்னர் 10.10.1951 அன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் “பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலன் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லத் தவறி விட்டதற்கு வருந்துகிறேன்” (Iam very sorry that the Constitution did not embody any safeguards for the Backward Classes ) என்றார். அதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள இதரப் பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய அரசியலமைப்புச் சட்டம் 340-ஆவது பிரிவுப்படி 29.01.1953 அன்று தன் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அவ்வாணையம் 2,399 சாதியினரை பிற்படுத்தப்பட்டவர்களாகவும், அதில் 837 பிரிவினரை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகவும் அடையாளம் காட்டியிருந்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் துரதிர்ஷ்டம் பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்காமலேயே மத்திய அரசு 14.08.1961 அன்று அவ்வறிக்கையை நிராகரித்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த 11 வருடம் 2 மாதங்களும், இந்தியாவில் வாழும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து விட்டார்கள். அவர்களைக் கண்டறிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனசங்கத்தின் கூட்டணி ஆதரவோடு 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்று மொராஜி தேசாய் பிரதமரானார். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் , எல்.கே.அத்வானி அவர்களும் அங்கம் வகித்த ஜனதா அரசு 01.01.1979 அன்று திரு.பி.பி.மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களை கண்டறிய அரசியலமைப்புச் சட்டம் 340 ஆவது  பிரிவின் படி 2-ஆவது ஆணையம் அமைத்தது. அவ்வாணையம் 31.12.1980 அன்று அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. அவ்வறிக்கையில் மக்கள் தொகையில் 25.5 சதவிகிதனரை அதாவது 3743 ஜாதியினரை சமூக ரீதியாகவும் பட்டியலிட்டது. மேலும் அவர்களுக்கு 27% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் படியும் சிபாரிசு செய்தது. ஜனதா அரசு வீழ்ந்து காங்கிரஸ் வெற்றிபெற்று இந்திரா காந்தியும், அவர்க்கு பின்னர் ராஜீவ் காந்தியும் பிரதமரானார்கள். அவர்கள் ஆட்சிக்காலம் முழுவதும் மண்டல் ஆணைய அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

அன்றும் கைதூக்கி விட்ட பா.ஜ.க:

1989 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது. பா.ஜ.க 89 எம்.பி.க்கள் ஆதரவுடன் 02.12.1989 அன்று வி.பி.சிங் பிரதமரானார். பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று வி.பி.சிங் அவர்கள் மண்டல கமிஷன் அறிக்கையை 07.08.1990 அன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசுப் பணிகளிலும் 27% இடஒதுக்கீட்டை அறிவித்தார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜீவ் காந்தி 06.09.1990 அன்று சாதியின் பெயரால் வி.பி.சிங் நாட்டை துண்டாடுகிறார் எனக் குற்றம் சாட்டி இதர பிற்படுத்தத் பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து இரண்டரை மணி நேரம் பேசினார். இருப்பினும் பா.ஜ.க அங்கம் வகித்த தேசிய முன்னணி கூட்டணி அரசு இவ்விவகாரத்தில் உறுதியோடு இருந்து வெற்றி பெற்றது. சமூக நீதி பேணிகாக்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்து இந்திரா சஹானி என்பவரும் பலரும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 16.11.1992 அன்று அரசின் 27% இட ஒதிக்கீடு ஆணையை ஊர்ஜிதம் செய்தது. இந்தத் தீர்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு ஒரு தேசிய ஆணையம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதனைப் பின்பற்றி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993-ஐ மத்திய அரசு நிறைவேற்றி, அதனடிப்படையில்  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை 14.08.1993 அன்று உருவாக்கியது.

ஆணையம் தான் ஆனால் அதிகாரமில்லை:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்ட பின்பு அந்த ஆணையத்திற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவும், நீக்கவும் மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின்  உரிமைகளைக் காக்கவோ, குறைகளைப் போக்கவோ எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை.

அரசியலமைப்புச் 348(10)ன், (முன்பு 348 (3)-ன் படி இதர பிற்படுத்தப்பட்டோரின் குறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டம் அமலான காலந்தொட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமே இருந்து வந்தது. இதர ஆணையங்களான மலைவாழ் மக்களின் தேசிய ஆணையம், மகளிருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றிற்கு எல்லாவித அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மட்டும் எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை.

கடந்த காலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடமிருந்து வரப்பெற்ற பல்லாயிரக் கணக்கான புகார்களை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சிபாரிசு செய்து அனுப்பிய புகார்களில் ஒன்றின் பேரில் கூட எவ்வித நடவடிக்கையும் இதுகாறும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 ஆண்டு காலமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும்படி பலரும் வற்புறுத்தி வந்தனர். இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பொது துறை நிறுவன இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கங்கள், சமூக நீதி காக்கும் குழுக்கள் என பலரும் வற்புறுத்தி வந்தனர்.

பிரிவினைவாதிகளை உடைத்து உருப்பெற்ற மசோதா:

மாநிலங்களவையில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறையில்லாத காங்கிரஸ், தி.மு.க,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வேண்டுமென்றே எதிர்த்ததால் மசோதா மாநிலங்களவையில் இதுவரை நிறைவேறாமல் இருந்து வந்தது. ஒருவழியாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை ஆகஸ்ட் 2ல் மக்களவையில் பா.ஜ.க அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் போன்றே இதுவும் செயல்படும்” என்று தெரிவித்தார்.

மசோதாவின் மீது ஐந்து மணி நேரம் விவாதம் நடத்தப்பட்ட நிலையில், 30 எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டு பேசினர். அதில் பெரும்பாலானோர், “ஓபிசி மக்கள் தொகை குறித்துக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர். சிலர், “2014அரசிந்ஆம் ஆண்டு சமூக – பொருளாதார ஆய்வு அறிக்கையையே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். மசோதாவின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில், ஆதரவாக 406 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நிறைவேற்றம்:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று (ஆகஸ்ட் 6) நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி திருத்தங்களுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் திருத்தங்களை மீண்டும் தன்னிச்சையாக திருத்தி நிறைவேற்றியது. இந்த மசோதாவைத் தாக்கல் செய்து, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தார்வார்சந்த் கெலாட் பேசுகையில், ”பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து நீதிகளையும் இந்த மசோதா வழங்கும். இன்றைய சூழலுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பெண் உறுப்பினர் தேவை என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்த ஆணையத்துக்கும் மாநில அரசுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது மத்திய அரசுடன் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும்.

மாநில அரசுகள் தனியாக ஓபிசி பிரிவுப் பட்டியலை வைத்துள்ளன. மத்திய அரசு தனியாக வைத்துள்ளது. இந்த ஆணையம் மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் பிரிவினர் குறித்து மட்டுமே பரிந்துரை செய்யும். கடந்த 1980அரசிந்-களில் இருந்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. நிலைக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின்,விரைவாக ஆணையத்தை அரசு அமைக்கும்” எனத் தெரிவித்தார்.

இதுவரையில் நடந்தது:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால், அப்பரிந்துரைகள் குப்பையில் வீசப்படும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்கி 27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், 2015-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி 12 விழுக்காடு வேலைவாய்ப்புகள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது. மற்ற வாய்ப்புகள் அமைத்தும் இல்லாத கிரீமிலேயரை இருப்பதாகக் கூறி பறிக்கப்பட்டன என்பது தான் உண்மையாகும். அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. தனியார் துறை இட ஒதுக்கீடு, உயர்நீதித்துறை இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த முக்கிய கோரிக்கைகள் நீண்டகாலமாக மத்திய ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்தன.

இனி நடக்க போவது?

சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்க வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 338(பி) என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும். அதுமட்டுமின்றி சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கியவர்கள் யார்? என்பதை வரையறுப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 366-ஆவது பிரிவில் 26(சி) என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதியினரை சேர்ப்பதும், நீக்குவதும் இதுவரை அரசாணைகள் மூலம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

இறுதியாக, முந்தைய காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து இந்த நாட்டில் பெறும்பான்மையாக வாழும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களைப் புறக்கணித்து வந்தது. ஆனால் மக்கள் நலனில் அக்கறை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதின் மூலமாக அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு சமூகநீதி கொண்ட ஆளுமையாக உருவெடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...