கருப்பு பணத்தை மீட்பதென்றால் ஏதோ சினிமாவில் வருவதை போல குதிரையில் சென்று
இரண்டு பைகளில் கட்டி தூக்கிக்கொண்டு வந்துவிட முடியாது. அதற்க்கு நிறைய விதி முறைகள் உண்டு. பெரும் பணக்காரர்கள் பணம் முழுவதும் வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு கரண்சிகலாக பதுக்கி வைக்கபட்டுள்ளது. அவற்றையெல்லாம் நல்ல பணமாக கொண்டு வர வேண்டும் என்றால் அதன் உரிமையாளர்களுக்கு சரியான வழி முறைகள் மற்றும் நம் நாட்டின் பணவீக்கம், பணத்தின் மதிப்பு ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை அரசு எடுக்குமேயானால்... அவர்கள் அந்த பணம் அனைத்தையும் வீனாக்கவோ... அல்லது பதுக்கி வைத்திருக்கும் நாட்டுக்கு உபயோகமாகவோ செலவழித்து விடக்கூடும். அப்படி நடந்தால் நமக்கு என்ன பயன்? ஆகையால் தான் பிரதமர் முதல் கட்ட அறிவிப்பாக இந்த 1000/500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும்...2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் அறிமுக படுத்தி இருக்கின்றார் என்று நம்புகிறேன். இந்த அறிவிப்பின் மூலம் தற்பொழுது நம் நாட்டில் புற்றீசல் போல பரவிகிடக்கும் கள்ள நோட்டுக்கள், சிரிய அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணம் அனைத்தும் ஒழிக்கப்பட்டு பணபுழக்கம் கட்டுபாட்டில் வரும். இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளில் உயரும்... வேற்று கரன்சிகளில் பதுக்கி வைக்கபட்டிரும் கருப்பு பணம் நம் நாட்டு கரன்சியாக முறையாக மாற்றப்பட்டு மெல்ல புழக்கத்திற்க்கு வரும்... இவ்வாறு பரிவர்தணைகள் நடக்கும் பொழுது அரசுக்கு அன்னியசெலவானி வாயிலாக சில கோடிகள் இலாபம் கிடைக்கும்... மற்றும் பணமுதலைகளுக்கு சில கோடிகள் மட்டுமே நஷ்டம் ஏற்படும்.... நம் நாட்டு பணம்... அதாவது நம் பணம் நமக்கே வந்து சேர வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக நடக்கவேண்டும். இதன் பலன் சில வருடங்களுக்கு பின் தான் நமக்கு தெரியும்.
இந்த திட்டம் ஆரம்பித்த நோக்கம் நல்லதே.... ஆனால் இதை சரியான இலக்கை நோக்கி கொண்டு செல்வார்களா இந்த அரசியல் தலைவர்கள் என்ற கேள்வியும் அச்சமும் உங்களை போலவே எனக்கும் உள்ளது.
நான் எந்த தவரும் செய்யவில்லை நான் ஏன் சிரமபட வேண்டும் என்று யாரும் கருதேவேண்டாம். நம் உறவுகளில் யாருக்கோ ஒரு நோய் வந்தால் நாம் கலங்குவது இல்லையா. நம் தாய் நாடும் நமக்கு நெருங்கிய உறவு தான். என்னற்ற நல் இதயங்களின் சுயநலமற்ற தியாகம் தான் நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திர காற்று என்பதை மறந்து மிருகங்கள் ஆகிவிடவில்லை நாம். நம் தாய் நாட்டின் நலனுக்காக உயிரயும் துட்சமென நினைக்கும் வீர இந்நியன் எனும் நாட்டுபற்று நம் அனைவருக்குள்ளும் உயிர்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.
ஜெய்ஹிந்த்.....
No comments:
Post a Comment