500,1000 ஒழிப்பின்போது,
நாட்டில் புழக்கத்தில் இருந்த பணம் 15.41 இலட்சம் கோடி.
வங்கிகளுக்குத் திரும்ப வந்த பணத்தை எண்ணும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது.
15.31 இலட்சம் கோடி திரும்ப வந்துள்ளது.
10,720 கோடி பணம் மட்டும் வரவில்லை.
99.3 விழுக்காடு.
நோட்டுகள் எண்ணப்பட்டபோது,
போலி 500 ரூபாய் நோட்டுகள் 59.7 விழுக்காடு,
1000 ரூபாய் நோட்டுகள் 59.6 விழுக்காடு இருந்தன.
புதிய நோட்டுகளை அச்சிட 7965 கோடி செலவிடப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு செலவு.
இதனால் நாட்டுக்குக் கிடைத்த நன்மை என்ன?
என்று சிலர் கேட்கிறார்கள்.
முதலாவது நன்மை,
23 கோடி ஜன்தன் கணக்குகளில்
65000 கோடி ரூபாய் கணக்குக்கு வந்தது.
அது, அதற்கு முன்பு கணக்கில் வராத கருப்புப் பணம்.
மேலும், அந்த 99.3 விழுக்காடு பணத்தில் எத்தனை பேர் வருமானவரிதுறைக்குக் கணக்குக் காட்டி இருந்தார்கள்?
இப்போது அந்தத் தொகை முழுவதும் வங்கிக்கு வந்து விட்டது. இனி அவர்கள் அதற்குக் கணக்குக் காட்டியாக வேண்டும்.
இரண்டாவது நன்மை
கருப்புப் பணம் வேறு...கள்ளநோட்டு வேறு.
பழைய கள்ள நோட்டுகள் முற்றாக ஒழிக்கப்பட்டன.
மூன்றாவது நன்மை..
தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதைக் கணக்குப் பார்க்காத 130 கோடி இந்தியர்களும்,
தங்களது கை இருப்பைச் சரிபார்த்துக் கொண்டனர்.
நான்காவது நன்மை
20000 ரூபாய்க்கு மேல் இனி ரொக்கப் பரிமாற்றம் கிடையாது என அறிவிப்பு.
ஐந்தாவது நன்மை...
புதிய நிலம், வீடு போன்ற சொத்துகளை வாங்க வேண்டும் என்றால்,
வங்கிகள் மூலமாகத்தான் பணப் பரிமாற்றம் என்ற நடைமுறை வந்தது.
இதன் மூலம்,
அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் வாங்குகின்ற லஞ்சப் பணத்தில், மனைவி, மக்கள் பெயரில் சொத்துகளை வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது.
சொத்துகளை வாங்கினால்,அதற்கான வருவாய் ஆதாரம் காண்பித்தாக வேண்டும்.
ஆறாவது நன்மை,
காகிதப் பணம் படிப்படியாக ஒழிந்து வருகின்றது.
ஏழாவது நன்மை...
கூலித் தொழிலாளர்களுக்குக் கொடுக்கின்ற ஊதியம்கூட முறையாகக் கணக்கு வைத்தாக வேண்டிய சூழ்நிலை.
எனவே, எதிர்காலத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் நிலைமை உருவாகிறது.
எட்டாவது நன்மை..
1.25 கோடி பேர் புதிதாக வருமான வரி கட்டத் தொடங்கி உள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் பல கோடியாக உயரும்.
வரி கட்டாமல் ஒருவரும் ஏமாற்ற முடியாது.
இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.
No comments:
Post a Comment