Monday, 26 November 2018

டீமானிட்டைசேஷன் வெற்றியா? இல்லை தோல்வியா?...

டீமானிட்டைசேஷன் வெற்றியா?
இல்லை தோல்வியா?...

வெற்றி என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.தோல்வி என்று சொல்வதற்கும் சில கோமாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதனால்தான் வெற்றியா தோல்வியா என்று பட்டி மன்ற ஸ்டைலில் தலைப்பு.

வெற்றி என்று நான் சொல்கிறேன். எப்படிஎன்கிறீர்களா?..

டீமானிட்டைசேஷன் மூலம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மோடி செல்லாதாக்கினார்.
அடுத்து 50 நாட்கள் வரையிலும் இந்த பழைய ரூபாயை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

மோடி சொன்னது மாதிரியே 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டு செல்லாத ரூபாயாக மாறி விட்டது.ஆக மோடி அறிவித்தது பிளாப் இல்லை.
இடையில் தடைபட்டிருந்தால் பிளாப்தான்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் முதற்கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று மிரட்டியது.மசியவில்லை மோடிஜி.

அடுத்து இந்த எதிர்க்கட்சி அப்ரண்டிஸ்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற வாசலில் நின்று தினம்தோறும் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.எப்படியும் மோடி பயந்து  மறுபடியும்  1000 மற்றும்500 ரூபாய் நோட் டுக்களுக்கு உயிர் கொடுத்து விடுவார் என்று கனவு கண்டு இருந்தார்கள் கருப்புப்பணவாதிகள்.

ஒரு வேளை மோடி அப்படி செய்திருந்தால் தான் இந்த திட்டம் தோல்வி என்று சொல்லலாம்.

அது நடக்கவில்லை என்பதால் டீமானிட்டைசேஷன் 100% வெற்றி என்று சொல்லி விட்டு அடுத்து இதனால் உருவான விளைவுகளும் வெற்றிதான் என்று சொல்கிறேன்.

டீமானிட்டைசேஷன் கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் என்ன வென்றால்  கறுப்பு பணத்தினை ஒழிக்கவே என்று சொல்லப்பட்டது.இன்றைக்கும் படித்தவன் படிக்காதவன் என்று அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு விஷ யம் என்ன வென்றால் கறுப்பு பணத்தினை ஒழிக்க வேண்டுமென்றால் 1000 மற்றும் 500 ரூபாய் போன்ற அதிக மதிப்புள்ள நோட்டுக்களை  செல்லாதாக்க வேண் டும் என்பதே.. ஆக மோடி அனைவரின் எண்ணப்படியே செயல்பட்டுள்ளார்.
எனவே இதுவும் அவருக்கு வெற்றிதான்.

அடுத்து ஒரு குரூப் இப்படிதான் மொரார்ஜி தேசாய் காலத்திலேயே டீமானிட்டைசேஷன் நடந்ததே!. அப்புறம் இப்ப எப்படி கறுப்புபணம் வந்தது.இதெல்லாம் வேஸ்டுங்க.எப்படியும் கொஞ்ச நாளில் திரும்பவும் கறுப்பு பணம் வரத்தான் செய்யும்.அதற்கு எதற்கு அப்பாவி மக்களை பாடாய் படுத்துகிறார் மோடி என்று நீலிக்கண்ணீர் வடித்தார்கள்.

இந்த இடத்தில் தான் மோடி என்கிற அறிவாளி நிற்கிறார்.

மொரார்ஜி தேசாய் காலத்தில் ஆரம்பித்தது ஏன் தோல்வியடைந்தது என்று யோசிக்கிறார்.மக்களை தூண்டி விட்டு காங்கிரஸ் திருட்டுக் கூட்டம் போராடியதால் அப்போது இருந்த மிக்சர் கவர்ன்மெண்டினால்  இதை தாக்குப் பிடிக்க முடியாததால் டீமானிட்டைசேஷன் வெற்றி பெற வில்லை.

ஆனால் தோல்வியில் இருந்து உண்மையாக பாடம்
படிக்கும் மோடி, மொரார்ஜி காலத்தில் நடந்தது இப்பொழுதும் நடக்கக் கூடாது என்பதற்காகதான் மக்களுக்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தார்..

ஒருவர் தன்னுடைய வருமானத்தை தவறாக காண்பித்து  வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி சேர்த்து வைப்பதே கறுப்பு பணம் என்று சொல்கிறோம்.

இன்றைக்கும் அரசு அலுவலகங்களுக்கோ வங்கிகளுக்கோ நிறைய பேர் தங்களின் இடத்தையோ இல்லை கட்டிடத்தையோ விற்க மாட்டார்கள்.ஏனென்றால் இங்கே எல்லாமே வங்கியின் வழியாக செக் மூலமாகத் தான் செட்டில் ஆகும் என்பதால் ஒரு அரசாங்கத்தின் ஆபிஸ் வருவதற்கு கூட நம்முடைய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.காரணம் கேஷ் பேமண்டுதான் வேண்டும் என்பார்கள்

அப்பொழுது தான் இடத்தின் மதிப்பை குறைந்த விலைக்கு பத்திரம் பதிய வைத்து பெரிய அமவுண்டா கேஷ் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.இங்கேதான் ஒயிட்டில் எவ்வளவு பிளாக்கில் எவ்வளவு என்று பேரமே ஆரம்பிக்கும்.
.
ஒரு அரசு ஊழியர் விரும்பும் இடத்திற்கு டிரான்ஸ்பர் ஆக மேலதிகாரிகள் அமைச்சர்கள் என்று 5 லட்சம் 10 லட்சம் பணமாகக்கொடுத்து தான் டிரான்ஸ்பர் ஆக முடியும் என்பதால் இந்த கேஷ் டீலிங் இல்லா விட்டால்  அங்கே ஊழல் நடக்குமா?.நியாயப்படி யாருக்கு டிரான்ஸ்பர் கிடைக்க வேண்டுமோ அவருக்குத்தான் கிடை க்கும்.

அதனால் இந்த நாட்டில் ஊழலுக்கு முக்கிய காரணம் பண பரிவர்த் தனை என்று பாமரனுக்கு கூட தெரியும் பொழுது மறுபடியும் மொரார்ர்ஜி செய்த தவறை மோடியும் செய்திருந்தால்தான் மோடி தோல்வியடை ந்து விட்டார் என்று அர்த்தம்.

ஆனால் பாருங்கள் மக்களிடம் இருந்து அரசுக்கு வந்தது 15 லட்சம் கோடி என்றால் அரசு மக்களு க்கு கொடுத்தது வெறும் 5 லட்சம் கோடி மட்டுமே.

15 லட்சம் கோடி ரூபாய் புழங்கிய நம் நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே கொடுத்து மக்களால் வாழ முடியும் என்று பாடம் எடுத்தார் பாருங்கள் அது மோடிக்கு அபார  வெற்றிதான்.

அடுத்து வங்கி பக்கமே வராமல் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுதந்திர இந்தியாவில் 69 ஆண்டுகள் கண்டு கொள்ளாமல் இருந்த பிரதமர் மாதிரி இல்லாமல் அனைவரையும் வங்கிக்கு வர வைத்து பணத்தை வங்கிக் கணக்குகளில் பேர்,ஊர்,போன் என அனைத்து விவரங்களுடன் அரசுக்கு  கொண்டு வந்தாரே!!. 
இது மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையா?.

அப்பாவி ஊழியர்களை ஏமாற்றி 5,000 சம்பளம் கொடுத்து விட்டு 10000,15,000 சம்பளம் கொடுத்ததாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி கொள்ளையடித்த முதலாளிகளை இனி ஊழியர்களுக்கு சம்பளம் செக்குகளில்தான் கொடுக்க வேண்டும்  இனி ரொக்கமாக இருக்க கூடாது என்று கூறி உழைக்கும் வர்க்கத்திற்கு நியாயமான கூலியை கிடைக்க வழி செய்தாரே மோடி.இது மோடி க்கு மட்டுமல்ல எத்தனையோ அப்பாவி மக்களுக்கும் சேர்த்து கிடைத்த அபார வெற்றி.

ஏனென்றால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை  செய்யும் தொழிலாளி வங்கி வழியாக சம்பளம் வாங்கும் பொழுதுதான் அவருடைய உண்மையான சம்பளம் வெளி வர ஆரம்பிக்கும்.இதனால் அவருக்கு பிஎப் மற்றும் லோன்கள் கிடைக்க வழி பிறக்கும்.ஆக ரொக்கப் பண த்தை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான அமைப்பு சாரா ஊழியர்களின் வாழ்வில் மோடி ஒளி ஏற்றியுள்ளார்

இதற்கு மேல் வேறென்ன வேண்டும்  சொல்லுங்கள்.
நாம் உழைக்கிற உழைப்பிற்கு நியாயமான சம்பளம்  கிடைத்தால் அது  நமக்கு வெற்றிதானே!.

இன்னும் சில முற்போக்கு லூசுகள் மோடி 50 நாட்கள் டைம் கேட்டாரே என்னாச்சு?. ஏடிஎம்மில்  இன்னும் பணம் வரவிலை. மோடி தோற்று விட்டார் என்று சந்தோசத்தில் உளறி வருகிறார்கள்.நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.மோடி ஜி,எனக்கு 50 நாட்கள் டைம் கொடுங்கள் நாட்டை மாற்றிக் காண்பிக்கிறேன் என்றார்,அவ்வளவே.ஏடிஎம்மில் 50 நாட்களுக்குள் மறுபடியும் நான் அவ்வளவு பணத்தையு ம் கொண்டு வைத்து விடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் அதுவும் 2017 மாற தொடங்கி விட்டது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு நம்மை படிப்படியாக கையில் ரொக்கம் இல்லாமல் வாழ பழக டிரெய்னிங் கொடுத்தார் பாருங்கள்.
இது தான் மாற்றம்.
இந்த மாற்றத்திற்கேற்ப திட்டியோ,வாழ்த்தியோ மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிக் கொண்டு வருகிறார்கள் அல்லவா..இது  மாற்றம்தானே!.அப்படி என்றால் டீமானிட்டைசேஷன் மோடிக்கு எப்படி தோல்வியாக இருக்க முடியும்?.

களையெடுக்கும் முன் நம் காலில் சில நல்ல பயிர்கள் மிதிபட்டு அழியத்தான் செய்யும்.அதற்காக களை எடுக்காமல் விட்டால் ஒட்டு மொத்த பயிரும் அல்லவா வேஸ்டாகி விடும்.அதனால் இந்த ரொக்கப்பணத்தை குறைத்து ஊழல் ஒழிப்பில் நம் அனைவரையும் பங்கு பெற வைத்ததால் போர்க்களத்தில் தலைமை ஏற்ற மோடிக்கு மட்டுமல்ல.துணை நின்ற நம் அனைவருக்குமே வெற்றிதான்..ஆக டீமானிட்டைசேஷன் இந்தியாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான்.

நமக்கு ஏடிஎம்மில் பணம் கிடைக்கவில்லை என்பதற்காக டீமானிட்டைசேஷன் தோல்வி என்று நாம் சொன்னால் நம்மை மாதிரி உலக மகா கோமாளி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் டீமானிட்டைசேஷன் கொண்டு வந்ததின் உண்மையான நோக்கம்
நிறைவேறிக் கொண்டுதான் வருகிறது.

இன்னும் வருமானவரி சோதனை தொங்கியது நிறுத்தப் படுமா?.

ஒன்றும் முடியாது. தொடரும் மோடிஜியின் கலகலப்பு.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...