பொன்மணிக்கவேலை வெளியேற்ற பக்கா ஸ்கெட்ச் போட்டு இணைந்த திராவிட கட்சிகள்… துணை நிற்குமா தமிழகம்.
On 19/12/2018 By newstn24
Home
பொன்மணிக்கவேலை வெளியேற்ற பக்கா ஸ்கெட்ச் போட்டு இணைந்த திராவிட கட்சிகள்… துணை நிற்குமா தமிழகம்.
பொன்மாணிக்கவேல் அவர்களின் பதவி காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் அன்மையில் உத்தரவிட்டது. இது தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை தடை செய்ய மறுத்து உத்தரவிட்டது.
திராவிட கட்சிகள் கலக்கம் :
இந்த தீர்ப்பானது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சிலை கடத்தல் கும்பல்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது,
50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் மட்டும் இதுவரை தமிழகத்தில் 756 சாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதை பொன்மாணிக்கவேல் 3 ஆண்டுகளில் கண்டறிந்தார் அதில் 120 சிலைகளை காப்பாற்றி தமிழகம் கொண்டுவந்துள்ளார்.
அதில் முக்கியமானது தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழன் சிலையாகும்.
இதுவரை அவர்கண்டறிந்த சிலைகளின் மதிப்பு மட்டும் உலகச்சந்தையில் 2400 கோடிகளுக்கு மேல்…
திட்டம் தீட்டிய திராவிட கட்சிகள் :
பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு நீதிமன்றம் பதவி நீட்டித்து உத்தரவிட்ட போது அவர் சொன்ன ஒருவார்த்தை சிலை திருட்டில் ஈடுபட்ட ஒருத்தனையும் விடமாட்டேன் ஒருவருடத்தில் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவேன் என்று கூறினார் இந்த வார்த்தைதான் சிலை கடத்தல் கும்பலிடையே பெரும் பயத்தை உண்டுபண்ணியது.
எப்படியாவது வெளியேற்ற நெருக்கடி :
இந்நிலையில் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்த தொடங்கிய சிலை கடத்தல் காரர்கள் அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகள் மூலம் பொன்மணிக்கவேலை வெளியேற்ற திமுக மற்றும் அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தன அவற்றின் வெளிப்பாடுதான் இன்று பொன்மாணிக்கவேல் அணியில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து டிஜிபி அலுவலகத்தில் பொன்மாணிக்கவேல் தங்களை தவறாக வழிநடத்துவதாக புகார் அளித்துள்ளனர் இந்த புகாரின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மிரட்டிய திமுக :
சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சருக்கு முக்கிய பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று திமுக கருதியது அதன் காரணமாகவே பணியில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பதவி உயர்வு போன்ற எந்த நல்லதும் தங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டவே அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
பொன்மாணிக்கவேல் உருக்கம் :
என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும் இளைஞர்களையும் நம்பியே விட்டு செல்கிறேன் என்றார் பொன்மாணிக்கவேல் இன்று அவருக்கு ஒரு பிரச்சனை எனும்போது தமிழகம் அவர் பின்னால் இருந்து அவரை காக்குமா என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்.
No comments:
Post a Comment