Sunday, 23 December 2018

இந்தியாவில், பாரதத்தில் , ஹிந்துஸ்தானில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்களா?


https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1942715436024899/

இந்தியாவில், பாரதத்தில் , ஹிந்துஸ்தானில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்களா? யோசித்து பார்த்தேன் .. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடந்த நிகழ்வுகளை  நாம் கடந்துவந்த பாதைகளை மிகவும் கவனத்துடன் திறந்த மனதுடன் தேடியெடுத்து படித்து பார்த்தேன்.. இறுதியில் அதிர்ச்சிகரமான விடையே கிடைத்தது.

ஆம் இந்துக்கள் அதிகமுள்ள நாடு என்று சொல்லப்படும் ஹிந்துஸ்தானில் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பும் அதற்க்கு பின்பு இன்று வரையும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பது சிறுபான்மையினர் அல்ல .. பெருபான்மை என்று சொல்லி சொல்லி இந்துக்கள்தான் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ அரசுகளின் படையெடுப்பால் ஒடுக்கப்பட்ட இந்துக்களின் நிலை சுதந்திரம் அடைந்த பிறகு மாறி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை. இன்று பல்வேறு ரூபத்தில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முண்ட கலவரத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அன்று இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க எந்த மஹாத்மாவும் வரவில்லை. எல்லோருடைய குரலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே ஒலித்தது.

அதற்கு பிறகு  நிலைமை மாறியதா இல்லையே .. 1956ல் இந்து மதத்தை சீரமைக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதில் இந்து திருமண சட்டம் உட்பட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக குரல் எழாமல் ஒடுக்கப்பட்டது.

பின்வந்த அரசுகள் சிறுபான்மையினர் நலன் என்ற கருத்தை முன்வைத்து அவர்களுக்கு  பல சலுகைகள் வழங்கப்பட்டது. கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த பெரும்பான்மையினரில்  பெரும்பான்மையினர் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தனர்.

கிருஸ்துவ அமைப்புகள் மதம் மாற்றும் முயற்சிக்கு ஏதுவாக அவர்கள் பள்ளிக்கூடம் கல்லூரிகள் மருத்துவமனைகள் தொடங்க இந்தியாவின் எல்லா மாநில அரசுகளும் இடம் ஒதுக்கி கொடுத்தது. கிருத்துவர்கள் என்றாலே சேவை மனப்பான்மை உள்ளவர்கள் என்ற தோற்றத்தை அரசே ஏற்படுத்திக்கொடுத்து அதை விளம்பரமும் செய்தது. அவர்களது இலக்கான ஏழை எளியவர்கள், பழங்குடிகள் , மலைவாழ் மக்கள் போன்றவர்களுக்கு அரசின் எந்தவித சலுகைகளும் நேரடியாக போய்சேராமல் , அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் அரசுகளே பார்த்துக்கொண்டது. கிருஸ்துவ மிஷினரிகள் அவர்களுக்கு உதவுகிறேன் என்ற போர்வையில் எல்லோரையும் மதம் மாற்றினர்.

இந்துக்களின் பண்டிகை விழாக்கள் தொடந்து அரசுகளின் நேரடி தாக்குதலில் இருந்துவந்துள்ளது. அரசு, நீதிமன்றம், காவல் துறை , மீடியா இப்படி எல்லா துறைகளும் சேர்ந்து இந்துக்களின் பண்டிகைகளை ஒடுக்குவதில் நேரடியாக களம்  இறங்கிக்கொண்டிருப்பது இன்று வரை நடந்துகொண்டுதானே இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த இந்த வழியாக தான் போகவேண்டும். இந்த நேரத்தில் தான் செல்லவேண்டும். இவ்வளவு விநாயகர்தான் இருக்கவேண்டும். இவ்வளவு உயரம் அகலம் தான் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வது யார்? அரசும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தானே? கடல் மாசுபடும் , நதி மாசுபடும் என்ற சப்பைக்கட்டுகள் இதற்கு. மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜையை ஒழுங்காக நடத்தமுடிகிறதா இந்துக்களால்?

ஒரு இடத்தில் காற்று மாசுபட்டதற்கு இந்தியா முழுவதும் தீபாவலாளியன்று வெடிவெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதே எதனால்?

இந்துக்கள் கொண்டாடும் தமிழ்வருடப்பிறப்பையே மாற்றி இந்துக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் தொலைக்காட்சியில்  விடுமுறை தினம் என்று பேசுவதெல்லாம் இந்துக்களை ஒடுக்குவதில்தானே வரும்.

முகலாய மன்னர்களால் இடிக்கப்பட்ட ராமர் கோவில் வேண்டும் என்ற இந்துக்களின் கனவு இவ்வளவு வருடங்கள் ஆகியும் நிறைவேறி இருக்கிறதா? இதையும் முடிவு செய்வது நீதிமன்றம்தானே. இந்த உணர்வு அதிகமாகி கோவில் கட்டவேண்டும் என்று சென்ற கரசேவகர்கள்  சென்ற ரயிலை எரித்து அவர்கள் கொல்லப்பட்டதால் நடந்த கலவரத்தில் அதிகமாக கொல்லப்பட்டது இந்துக்கள்தானே. ஆனால் இன்றளவும் அந்த கலவரத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் என்றல்லவா உலகெங்கும் பேசப்படுகிறது. இந்துக்களுக்கு எதிரான கலவரத்தில் இஸ்லாமியயர்களும் கொல்லப்பட்டனர் என்றல்லவா சொல்லப்பட்டு இருக்கவேண்டும்?

ராமர் கட்டிய பாலம் என்று இந்துக்களால் நம்பப்படும் சேது பாலத்தை இடித்தே தீருவோம் என்று இன்றும் பேசிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் ஒடுக்க முற்படுவது இந்துக்களையா இஸ்லாமியர்களையா?

சபரிமலையில் குறிப்பிட்ட வயது  பெண்கள் போகக்கூடாது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தகர்த்து எறிந்து இந்துக்களை ஒடுக்க முற்படுவது இப்பொழு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு.

தாலியை பற்றிய விவாதம், பூணுலை பற்றிய விவாதம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்துக்களின் நம்பிக்கையை பற்றிய விவாதம் இதையெல்லாம் தாண்டி இந்த இந்துக்களின்  நம்பிக்கைகளை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்?

இந்துக்களின் கோவில்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்துக்கள்  அவர்களுடைய  கடவுள்களை வணங்குவதற்கு பணம் வாங்கி அந்த பணத்தை வேறு மதத்தினருக்கு செலவழிபதும் அரசுதானே?

கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தது அதன் நிலங்களை இந்துக்கள் அல்லாத வேற்றுமதத்தினர் வாழ்வாதாரம் சிறக்க குத்தகைக்கு கொடுத்தது அரசுதானே.

இப்படி காலம் காலமாக உலகெங்கும் உள்ள  இந்துக்கள் மற்ற மதத்தினராலும் அரசுகளினாலும் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவை தங்கள் பசியை போக்கிக்கொள்ள கொன்றும்  அதை வியாபார நோக்கில் கொன்று ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கும் நிகழ்வில் நடக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறையை வைத்துக்கொண்டு சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர் என்பது மக்களை திசை திருப்பி தங்களது இந்து விரோத போக்கை தொடர்வதற்கு , இந்துக்களை ஒடுக்கும் அவர்களது நோக்கத்தை மறைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?

மனதை தொட்டு சொல்லுங்கள், இதுவரை இருந்த அரசுகள் இருக்கும் அரசுகள், மத்தியில் மாநிலத்தில் இருக்கும் பாஜக அரசையும் சேர்த்துதான் சொல்கிறேன் .. இந்துக்களுக்கு என்று என்ன செய்து இருக்கிறது? மீடியாக்கள் இந்துக்களுக்கு ஆதரவாக ஏதாவது பேசி இருக்கிறதா?

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இந்துக்கள்தான்  ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கினறனர் என்பதை ஒரு இந்துவாக மனதில் வலியுடன் ரத்த கசிவுடன் எழுதி இருக்கிறேன்.

இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பாஜக, ஆம் நான் இந்துக்களுக்கு ஆதரவான கட்சிதான் என்று இந்துக்களுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு நல்ல காரியத்தையாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பெருபான்மையான மதத்தினரை ஒடுக்குவதுதான் மதசார்பின்மை என்று தவறாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளும் மற்ற துறைகளும் மாறவேண்டும் என்று ஒரு இந்துவாக ஆசைபடுகிறேன்.

இந்து தேசம் என்று அறியப்பட்ட இந்தியாவிலாவது இந்துக்கள் ஒடுக்கப்படாமலும், இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைபடுத்தப்படாமலும், அவர்களது நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று ஒரு சக இந்தியனாக, இந்துவாக  ஆசைபடுகிறேன்.

இந்த உண்மையை ஒவ்வொரு இந்துவும் புரிந்துகொண்டு இனியாவது தன்னை ஒடுக்கப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக குரலெழுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

இந்துவாக பிறந்து இந்துவாக வளர்ந்து ஒரு உண்மையான இந்துவாக மடிய விரும்பும் SRK

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...