Sunday, 23 December 2018

அந்திரத்தில் மிதந்த கருவறை விக்கிரகம்!

அந்திரத்தில் மிதந்த கருவறை விக்கிரகம்!


காந்தத்தாலேயே ஆன கோவில் சுவர்களும் கோபுரமும்! சூரிய மண்டலத்தையே பூலோகத்திற்கு கொண்டு வந்த அதிசயம்! கப்பல் போக்குவரத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணி தகர்த்தெரிந்த போர்த்திகீஷியர்! கணிதவியலின் உச்சம்!
-----------------------------------------------------------------------------------
13ஆம் நூற்றாண்டில் நரசிம்மதேவ மன்னால் ஒடிசாவில் கொனார்க் என்னும் இடத்தில் கட்டப்பட்ட சூரிய தேவனின் கோவிலில் உள்ள அதிசயங்களைக் கண்டு வியப்போமாக!

கொனார்க் சூரியக் கோயில்:
-------------------------------------------
இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில். அவ்வாறு கட்டப்பட்ட போது இருப் பாறைகளுக்கு இடையில் 54 டன் எடையிலான காந்தக்கற்களை வைத்துக் கட்டப்பட்டது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

அர்த்தமுள்ள இந்து தர்மம்:
------------------------------------------
சூரியனின் ஒளி அமைப்பை உதயம், நண்பகல், மாலை என்று மூன்றாகக் கொண்டு மூன்று இடங்களில் சூரியனுக்கு ஆலயங்கள் அமைக்கப் பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த வரிசையில் உதயகால சூரியனுக்கான கோவில்தான் முதலில் அமைந்தது. அந்தக் கோவிலே இன்றைய ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள கோனார்க் சூரியனார் கோவில்.

உலகில் எங்கும் காண முடியாத அதிசயம்:
-------------------------------------------------------------------
இக்கோவில் கட்டபட்ட போது தியல் என்னும் கோபுரம்தான் பிரதானக் கருவறையாக இருந்தது இந்தக் கோபுரமும் அதன் சுவர்களும் தான் 54 டன் காந்தப் பாறைகளால் கட்டப்பட்டது. இங்குள்ள கருவறை விக்கிரகமானது இரும்பு கலந்த பாறைகளால் வடிவமைக்கப்பட்டது. அதன் காரணத்தினால் இங்கிருந்த சூரியபகவானின் விக்கிரகமானது அந்திரத்தில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் மிதந்த வண்ணம் இருந்திருக்கிறது. எப்பேர்பட்ட கட்டடக்கலை கானுங்கள் மக்களே! சூரியமண்டலத்தில் எவ்வாறு சூரியபகவானைச் சுற்றி கிரகங்கள் சுழன்று வருகிறதோ அதை மனதில் வைத்தே இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிசயங்கள் இன்னும் முடியவில்லை:
-------------------------------------------------------------
கோயிலுக்குள் தூண்கள் காணப்படவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்பு தூண்களைக் கொடுத்து இணைத்துக் கட்டியுள்ளனர். ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருவது போல் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் என்பது ஏழு நாட்களும், 24 சக்கரம் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோயிலின் அமைப்பு உள்ளது.

கொணார்க் பெயர் காரணம்:
-------------------------------------------
கோணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட சூரியக் கோவில் என்பதாலேயே இந்த ஊர் கொணார்க் என்று பெயர் பெற்றது. கொண் - கோணங்கள்; ஆர்க் - சூரியன். இதைத்தான் ஆங்கில வழியில் கணிதத்தில் Trigonometry எனக் கூறுகிறோம். என்ன அதிசயம் கானுங்கள் மக்களே Trigonometry பெயரில் ஒரு தனி ஊரையே அமைத்து கோணங்களுக்கு செய்முறைச் சான்றாக  சூரியக் கோவில் அமைத்துள்ளனர்...

போர்த்திகீஷிய படையெடுப்பை தகர்த்த கோயில்:
------------------------------------------------------------------------------
இக்கோயிலானது ஆரம்ப காலகட்டத்தில் கடற்கறையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கடற்கரையை விட்டு 15 கிலோ மீட்டர் தாண்டி அமைந்துள்ளது. கடற்கறை அருகாமையில் அமைந்திருந்த போது கப்பலில் பயணிக்கும் மாலுமிகளின் ரேடார் மற்றும் திசை காட்டும்  கருவிகள் வேலை செய்யவில்லை. அது இக்கோயிலில் இருந்து வெளியான அதிக அளவிளான காந்த கதிவீச்சால் செயல் படாததை போர்த்தீகீஷியர்கள் கண்டறிந்தனர். தனது ஊடுருவலுக்குத் தடையாக நின்ற இந்தக் கோவிலை சிதைத்து காந்தப்பாறைகளை களவாடினர்.

சிந்தித்து அதிசயுங்கள்:
-----------------------------------
ஒரு கணமாக இருப்புத் துகலகள் நிறைந்த விக்கிரகத்தை நான்கு புறங்களில் அமைக்கப்பட்ட காந்தக் கற்களைக் கொண்டு மிதக்க வைக்க வேண்டுமெனில் காந்த பாறைகளை எந்த அளவிற்கு துள்ளியமாக சம அளவில் அமைக்கப்பட வேண்டும். அதற்கு கணிதம் எந்த அளவிற்கு துள்ளியமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் மக்களே!

கோல்கள் நட்சத்திரங்கள் எவ்வாறு மிதக்கின்றது:
-----------------------------------------------------------------------------
அண்ட வெளியில் சூரியனும் அதனைச் சுற்றி கோல்கள் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அந்திரத்தில் மிதக்கிறது என்பதை செயல் விளக்கம் மூலம் பூமியிலேயே நிரூபித்திருக்கிறார்களெனில் ந்ம் முன்னோர்களின் அறிவார்றல் எத்தகையது?

காமுகர்களுக்குக் காமம் மட்டுமே தெரியும்:
--------------------------------------------------------------------
இங்கே சூரிய பகவான் ஸ்ரீஷ்ட்டிக் கடவுள் என்பதால் கோவிலைச் சுற்றி பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றனர். ஆனால் காமமும் வாழ்வின் படிநிலை என்பதை உணர்ந்தவர்களுக்கு அது வக்கிரமாகத் தெரியாது....
-----------------------------------------------------------------------------------
ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் கூட அண்டத்தில் இவ்வாறுதான் இருக்கும் என்று யூகத்தைத்தான் எழுதி வைத்தனர். ஆனால் நம்மவர்களோ அதற்கு கோவிலின் மூலம் செயலாக்கமே கொடுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...