Sunday, 23 December 2018

பிஜேபியின் தொண்டர்களுக்கும்,ஆதரவாளர்களுக்குமான பதிவு:-


https://m.facebook.com/story.php?story_fbid=1939965572782715&id=100003078734015

பிஜேபியின் தொண்டர்களுக்கும்,ஆதரவாளர்களுக்குமான பதிவு:-

முதலில் எதிராளிகளை தீர்க்கமாக கணியுங்கள்.வீழ்த்துவது எளிதாகும்.

1934 முதல் தேர்தல் அரசியலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி,தேர்தல் அரசியல் அனுபவத்தில் நம்மை காட்டிலும் கூடுதலான அனுபவம் பெற்றவர்கள் தான்.

காங்கிரஸ் கட்சி  தேர்தல் அரசியலில் பல யுக்திகளை முன்னெடுக்கும்.அந்த யுக்திகள் மக்கள் நலன் சார்ந்தது போல தோற்றமளிக்கும்.ஆனால் உள்ளே விஷமம் இருக்கத்தான் செய்யும்.

வாக்குறுதிகளை லாவகமாக மீறி செயல்படுவதில் வல்லவர்கள் காங்கிரஸார்,மக்களின் தேசிய வியாதியான ஞாபகமறதியை காங்கிரஸ்காரன் எவனுமே மறக்கமாட்டான்.

ஒரு இயக்கம் எப்போது தொடங்கப்பட்டதோ அப்போதிலிருந்தே அந்த இயக்கத்தின் அனுபவம் துவங்குகிறது.1885ல் காங்கிரஸ் இயக்கம் பிரிட்டீஷாரால் ஆரம்பிக்கப்பட்டு இந்தியர்களால் வழிநடத்தப்பட்டு பிரிட்டீஷாரின் பிரித்தாளும் கொள்கையை மையமாக கொண்டு செயல்பட்ட 133 ஆண்டுகள் அனுபவமுள்ள ஓர் இயக்கம்.

பிஜேபி,பி.ஜே.எஸ் ஆக 1952முதல் தேர்தல் அரசியல் அனுபவங்களை பெற தொடங்கிய கட்சி .

டாக்டர்.கேசவ பலிராம் ஹெட்கேவர் பல ஆண்டுகள் தொடர் உழைப்பால் நமது சமூகத்திலிருந்து பெற்ற  அனுபவத்தின் மூலம் நாட்டுமக்களை ஒன்றிணைக்க சரியான வழி என 1925ல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் ராஷ்ட்டிரிய சுவயம் சேவக் சங்.

காங்கிரஸின் தனி மனித துதிகளுக்காக பலியாகும் அப்பாவி தொண்டர்களை நினைத்து முதன் முதலில் வருந்திய ஒரே ஜீவன் டாக்டர்ஜி தான்.

காங்கிரஸில் மிகப்பெரிய பணம் படைத்த மனிதர்கள் வலம் வந்ததால் மிகச்சிறிய ஏழைத்தலைவன் கேசவராம் பற்றிய பல செய்திகள் வெளியுலகத்திற்கு கிடைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.

காந்தியின் கொலையில் ஆர்எஸ்எஸ் தொடர்பு உள்ளது என நேரு கதை கட்டிவிடாமல் இருந்திருந்திருந்தால் என்னை போன்றோர்க்கு இன்னும் ஆர்எஸ்எஸ் பற்றி தெரியாது போயிருக்க கூடும்.

தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அது ஒரு நிகழ்வு மட்டுமே.

பிஜேஎஸ் 1980ல் பிஜேபியாக உருமாறிய பின் தான் கட்சியின் வளர்ச்சியும் அசுர வேகமெடுத்தது.1984 ல் சந்தித்த முதல் தேர்தலில் 2 எம்பியாக கணக்கு துவங்கியது.1989ல் 80தொகுதியானது.1990களுக்கு பின் உத்ரபிரதேசத்தில் மாநில ஆட்சிக்குள் நுழைந்தது.பின் வடக்கே சில மாநிலங்களில் பிஜேபி வளர்ச்சியை எட்டிக்கொண்டே இருந்தது.1998ம்ஆண்டு முதன் முறையாக மத்தியில் ஆட்சிப்பொறுப்பை பெற்றது.போதிய பெரும்பாண்மை ஆதரவு கிட்டாததால் 13நாட்களில் ஆட்சியை பறிகொடுத்த போது வாஜ்பாய் ஆற்றிய உரை ஒவ்வொரு தேசபக்தனையும் திரும்பி பார்க்க வைத்தது.

1999 முதல் 2004வரை இந்திய வரலாற்றில் இந்தியாவிற்கு சலசலப்பற்ற 5 ஆண்டுகள் நிலையான ஓர்  கூட்டாச்சியை தந்த கட்சி பிஜேபி மட்டுமே.

2004 மற்றும் 2009 பொது தேர்தல் தோல்விக்கு பின் துவண்டு போன பல லட்சம் பிஜேபி தொண்டர்களில் நானும் ஒருவன் தான்.ஆனால் 2013ல் மோடிஜியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போதும் சரி அவர் தேர்தலுக்கான யுக்திகளை கையிலெடுத்த போதும் சரி பிஜேபியின் பொற்காலம் தொடங்கியது என உணர்ந்த பல லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவனே.

தற்போது அமீத்ஷா தேசிய தலைவராக மோடிஜியை புரிந்து செயல்படுகிறார்.கட்சி வளர்ச்சியடையாத பல இடங்களில் அவர் சிரத்தையோடு ஆற்றும் பணிகள் பலவற்றை காணும் போது இன்னும் அரை நூற்றாண்டுகள் ஆட்சிக்கட்டிலை விட்டு அகற்றவே முடியாத மற்றும் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக பிஜேபி இருக்கும் என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...