Sunday, 23 December 2018

மத்தியஅரசின் விவசாய கொள்கைகள்


https://m.facebook.com/groups/1779348205683859?view=permalink&id=2300443993574275

விவசாயம் மாநில உரிமையில் வரக்கூடியது.

விவசாயிகளுக்குக் கடனை கொடுப்பது, தள்ளுபடி செய்வது எல்லாம் மாநில அரசின் கடமை.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே சிறு,குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்து மீண்டும் கடன் கொடுத்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது.

இது பயிர்க் கடன்.
வறட்சியைக் காரணம் காட்டி தள்ளுபடி செய்தது.

அதேபோல் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலம்,BJP ஆளும் உத்தரபிரதேசம்,மஹாராஷ்ட்ரா,கம்யூனிஸ்ட் கேரளா போன்ற மாநில அரசுகளும் தங்கள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவில் எடியூரப்பா ஒருநாள் ஆட்சியில் முதல் கையெழுத்தே கடன் தள்ளுபடிதான்.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து விட்டால் அவர்களது பிரச்சனை தீர்ந்து விடுமென்றால் இதற்கு முன்பும் பலமுறை கடன் தள்ளுபடி செய்தும் ஏன் விவசாயிகள் இன்றும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்களே ஏன்???

இப்படி விவசாயிகள் சாவுக்குக் காரணம் 2014 க்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் அரசியல் கணக்கேக் காரணம்.

கடன் தள்ளுபடி என்பது நிரந்தரத் தீர்வல்ல!

விவசாய மேலாண்மை காங்கிரசிடம் சுத்தமாக இல்லாமல் போனதும் காரணம்.

கடன் தள்ளுபடிக்கு பதில்,விவசாய உட்கட்டமைப்பு, விவசாயம் சார்ந்த தொழில், ஆராய்ச்சி,போன்ற விசயத்தில் நிதி முதலீடும்,கவனமும் செய்திருந்தால் நிரந்தரத் தீர்வாக விவசாயிகளுக்கு எப்பொழுதோ கிடைத்திருக்கும்!!
தற்கொலை தடுக்கப்பட்டிருக்கும்!

அப்படியானால் பிரச்சனை கடனில் இல்லை!!

அதைத் தாண்டி பிரச்சனை உள்ளது.

கடன் தள்ளுபடி என்பது சுத்தமான அரசியல் விளையாட்டு.

ஏன் விவசாயி கடன் வாங்குகிறார்?

இடுபொருள் விலை ஏற்றம், பற்றாக்குறை, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதால் அதை சமாளிக்க கடன் வாங்கி மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.

ஒரு விவசாயி தக்காளி பயிரிட்டால் அனைவருமே தக்காளியை பயிர் செய்வதும், அதனால் உற்பத்தி அதிகமாகி DEMAND குறைந்து விலை வீழ்ச்சி அடையும்.
தக்காளியை சாலையில் கொட்டும் போக்கும்,விளைநிலத்திலேயே விட்டு அழிப்பதும் வாடிக்கையாக நடப்பது ஒன்று.

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு விளைய வைத்தோம்?

அப்படிப்பட்ட விளைபொருள்கள் விளைவிக்கும் பகுதியில் மாநில அரசு மத்திய அரசின் துணையுடன் சேமிப்புக் கிடங்கை உண்டாக்கி இருக்க வேண்டும்.

உற்பத்தி அதிகரிக்கும்போது சேமிப்பதும்,அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப் படுத்துதல் போன்றதை செய்தாலே உதவினால் விவசாயிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தேங்காய் உற்பத்தியில் நீரா தயாரிப்பது,அதன் மூலம் மதிப்பு கூட்டப்பட்டப் பொருள்களான சர்க்கரை,சாக்லேட் போன்ற 5 வகை பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது.

இப்படி என்ன என்ன செய்தது காங்கிரஸ் அரசு கடந்த 60 ஆண்டு காலத்தில்???

தள்ளுபடி ஆகும் என்ற மனநிலைக்கும் விவசாயியை தள்ளிவிட்டனர் அரசியல்வாதிகள்.

இது ஆபத்தானது மட்டுமில்லை.
அதுவே விவசாயத்தை அழித்து விடும்.

எழை விவசாயி கடன் வாங்கி நெருக்கடிக்குள்ளாகும் போது அந்த விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.

அதையே தனக்கு சாதகமாக்கி பணக்கார விவசாயிகள் பண்ணையார்கள்,மிராசுதார்கள்
(இப்படி எந்த ஒரு பணக்காரன் எவனாவது தற்கொலை செய்திருக்கின்றானா? அய்யாக்கண்ணு கடன் ட்ராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டும் ஒரு தவனை கூட கட்டாததால் 2005ல் வாங்கிய ₹5லட்சம் கடன் இன்று ₹20 லட்சமாகி உள்ளது.இதுபோல சிறு,குறு விவசாயிகளுக்கு கிடைக்காது,காரணம் நிலம் 5ஏக்கருக்கும் குறைவாகவே இருப்பதால் பொதுத்துறை வங்கிப் பக்கமே உண்மையான விவசாயி போக முடியாது)
கடன் தள்ளுபடி கோரிக்கை வைத்து போராட்டத்தைத் தூண்டி விட்டு தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பல லட்சம் கடனை தள்ளுபடி பெற்ற வரலாறுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறது.

விவசாயிக் கடன் தற்காலிகத் தீர்வே,
அது வலி மாத்திரை போடுவது போல!

வலி வந்த காரணம் அறிந்து அதற்கு தீர்வு காணாமல் வெறுமனே தேர்தல் கணக்குப் போட்டு கடன் தள்ளுபடி மட்டுமே செய்து வந்தால் எப்படி விவசாயிக்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கும்???

மோடி அரசு அதைத் தாண்டி தொலைநோக்கோடு உட்கட்டமைப்பு,காப்பீடு, விவசாயப் பொருளை மதிப்புக் கூட்டப்பட்டதாக்கி சந்தைப்படுத்துதல்  போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு இஸ்ரேல் நாட்டின் உதவியுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் agro-technology development centreஐ தொடங்கி உள்ளது.
அதேபோல ஆந்திராவின் குப்பம் பகுதியிலும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
மோடிஜி இஸ்ரேல் சென்றபொழுது விவசாய மேம்பாட்டுக்கு உதவும் IRRIGATION SYSTEMS ஐ,அதிக விளைபொருள் உற்பத்திக்கு உதவும் வண்ணம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு விட்டு வந்ததன் விளைவே,தளி,குப்பம் PROJECTS வரக் காரணம்.

இதற்கு முன்பாக முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில்  Israeli-agro technologies to boost vegetable production projectஐ  பலகோடி முதலீட்டில் தக்காளி, வெள்ளரிக்காய்,போன்ற காய்கறி உற்பத்தியில் இஸ்ரேல் தொழிநுட்பத்தை கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை, பயிற்சி கொடுக்க தொலைநோக்கோடு விவசாயத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.

திமுக,காங்கிரஸ் கூட்டணி அரசு இப்படி உருப்படியாக எதையும் செய்யாமல் கடன் கொடுப்பது, தள்ளுபடி செய்வதிலேயே கவனம் செலுத்துவது விவசாயிகளை ஓட்டு வங்கிக் கூட்டமாகவே எப்படி சிறுபான்மையினர்களை பராமரிக்கின்றார்களோ அப்படியே செய்து வருகின்றனர்.

பொறுப்பற்ற ஊடகங்களும் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன.சில ஊடகங்கள் பணமதிப்பிழப்பில் அரசை ஏமாற்றி வரி கட்டாத கருப்புப் பணத்தை பறிகொடுத்த விரக்தியில் குறிப்பாக புதியதலைமுறை, NEWS7,NEWS18 போன்ற ஒரு மதம் சார்ந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் மோடிக்கும்,BJPக்கும்,அதிமுகவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்,
அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

மத்திய அரசை தொலை நோக்கத்தோடு திட்டங்களை செய்யவிடாமல் கடன் தள்ளுபடி என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தள்ளி விடுகிறதது காங்கிரஸ்.

இப்படி பழைய அரசியல் கணக்குப் பக்கமே தள்ளி விடும் போக்கு தொலைநோக்காக நோக்கும்போது எப்பொழுதுமே விவசாயி இன்றைய நிலையிலிருந்து மாறவே வாய்ப்பே இல்லை.!!!

India, Israel to open centre for floriculture in Tamil Nadu

OUR BUREAU Updated on January 09, 2018
India and Israel are coming together to set up a centre for excellence in floriculture at Thally in Krishnagiri district of Tamil Nadu.
The centre, the first agro-technology development centre to be set up with Israel’s assistance in the State, would be officially inaugurated on Thursday. Gil Haskel, head of Israel’s agency for international development cooperation Mashav; Union Minister of State Gajendra Singh Shekhawat and Tamil Nadu Agriculture Minister R Doraikannu are expected to attend the function.

The centre at Thally and a similar centre planned for vegetables to be established in Dindigul form the part of a three-year Indo-Israel agricultural partnership signed between Mashav and mission for integrated development of horticulture of the Agriculture Ministry. The Dindigul centre, specialising in vegetables such as capsicum, cucumber and tomatoes, is expected to be launched in January next year.

These centres would not only develop agricultural practices suitable for selected geographical regions, but would also transfer the best practices to farmers in and around.

“By the end of the project, we plan to have 30 such Indo-Israel centres of excellence in agriculture in India. Currently, we have 20 such centres in nine States,” Haskel said here.

More such centres of excellence are planned in Karnataka and Andhra Pradesh in near future, said Dan Alluf, an Israeli Embassy official. Centres in Karnataka would come up in Dharwar, Kolar and Bagalkot and would focus on vegetables, mangoes and pomegranate, respectively. The centre in Andhra Pradesh would come up in Kuppam and would work on both floriculture and vegetable research.

Published on December 05, 2017

About Us

Contacts Privacy Policy Archive Subscription

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...