ராகுல் காந்தி மோடியை 15 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் தனியாக விவாதம் நடத்த முடியுமா என்று அழைப்பு விடுகிறார்.
நாம் இப்போ ராகுலிடம் பத்து கேள்விகள் கேட்போம். சரியாகச் சொன்னால் அவர் பிரதமரிடம் பேசத் தயார் என்று முடிவு கட்டலாம்.இது ஒரு மாநிலம் சேர்ந்த விஷயம் மட்டுமே. அதுவும் அவர்கள் ஆளும் கர்நாடகா.
1.ஏன் கர்நாடகா அரசு விவசாயிகளுக்கு எதிராகவும் அங்கு நிறைய விவசாயிகள் தற்கொலை செய்தார்கள் என்று கூற முடியுமா. காரணம் என்ன?
2.கர்நாடகா அரசு விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பெங்களூரில் ஏன் தடியடி நடத்தினார்கள்.இதற்கு மன்னிப்பு கேட்பாரா? ஊழலை இதில் ஊக்குவித்தது எதனால்?
3. 2017 ம் ஆண்டு வறட்சியின்போது,மத்திய அரசு கொடுத்த 5456 கோடிகளை நீர்பாசனத்திற்குக் கொடுத்ததும் அதனை என்ன செய்தார்கள் என்பதுக்கு பதில் வருமா? கணக்குக் கொடுப்பார்களா?
4. ஹெப்பல் என்ற இடத்தில ஒரு மெகா மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை? இதனால் பெங்களூருக்கு வரும் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படவில்லை. ஊழல் என்ற ஒரே ஆயுதம் தான்.
5.ஏன் சகாலா என்ற மக்கள் குறை தீர்க்கும் திட்டத்திற்கும்,லோக்பால் என்ற சட்டம் வரவிடாமல் மல்லிகார்ஜுன கார்கே எந்த கூட்டத்திற்கும் வராமல் இழுத்தடிக்கிறார். லோக்பால் சட்டம் வரவிடாமல் செய்யும் நோக்கம் என்ன?
6. பெங்களூரில் கற்பழிப்பு குற்றங்களுக்கு என்று மெழுகுவர்த்தி ஊர்வலம் செய்யப் போகவில்லை ஏன்? அங்கு நடந்தது உங்கள் ஆட்சி என்பதால் என்று வைத்துக்கொள்ளலாமா?
7. ஏன் கர்நாடகாவில் PFI வேலை ஆட்களைவிடுவித்தனர்? இது ஒரு மதம் சார்ந்த விசயத்தை கையில் எடுக்கும் திட்டம் தானே. உங்கள் சல்மான் குர்ஷித் சொன்னது போல.
8.கர்நாடகாவில் ஏன் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை ஊழியர்கள் குறைவாக இருக்கிறார்கள்? மேலும் பள்ளிகளில், கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
9. நீங்கள் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறீர்கள்?
10. தேர்தல்கமிஷன்,மின்னணுவாக்கு பதியும் எந்திரம்,ஆதார்,உலகவங்கி,பிரதமர் அலுவலகம் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் சித்தராமையா அரசின் மேல் அவ்வளவு நம்பிக்கை என்றால் உங்கள் ஆட்சியில் இதற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளித்தீர்கள் என்பது தெரிகிறது.
முதலில் இந்த பரிட்சையில் பாஸ் பண்ணுங்கள். அப்புறம் மோடியிடம் பேசலாம்.
No comments:
Post a Comment