மறந்துவிடாதீர்கள்,இந்த வருடம் திருவண்ணாமலை குபேர கிரிவலம் செல்ல வேண்டிய நாள்!
5-12-2018
குபேர கிரிவலம்!
நீங்களும் செல்வந்தராக வேண்டுமா?
நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம்.நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.
சரி.பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும்,அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம்.
அதென்ன குபேர கிரிவலம்!
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அவர் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.நாம்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழும்.
இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.கி.பி.2007 ஆம் ஆண்டில் ஜோதிடபூமி என்ற புத்தகத்தில் சென்னையில் வாழும் எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.அய்யா அவர்கள் எழுதினார். எனவே, எனது நட்புவட்டம் அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராகலாம் என்பது நம்பிக்கை.
*இந்த ஆண்டின் குபேர கிரிவலம் 5.12.2018 புதன் அன்று.
*ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.
*
*(போன வருடமே ரொம்ப கூட்டமாக இருந்தது)*
*இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்;மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.
இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
*கிரிவலம் செல்லும் போதே,அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்
*ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை.
*கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.
ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!
குபேரன் குறிப்புகள்....
அலைமகளுடன் ஆந்தை.....
தென் நாட்டில் ஆந்தையைக் கண்டால் அலறி ஒடுகிறோம். ஆனால் வடநாட்டவர் தீபாவளி அன்று மகாலட்சுமியின் வாகனமாக அருகில் வைத்து வழிபடுகின்றனர். அன்று யார் வீட்டிலாவது ஆந்தை வந்து அமர்ந்து குரல் எழுப்பினால் லட்சுமி குபேரன் அருள் வரப்போகிறது என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆந்தை கண்ணில் பட்டால் யோகம் அடிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
குபேரன் பெயரில் தீர்த்தம்......
கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 20 தீர்த்தங்கள் மட்டுமே வெளியில் தெரிபவை. அவற்றில் ஒன்றுதான் குபேர தீர்த்தம். ஒவ்வொரு வருடமும் மாசி மக தீர்த்த உற்சவத்தின்போது குபேரன் இந்த தீர்த்தத்தில் தங்கி அனைவருக்கும் அருள்வதாக ஐதீகம். இந்திர தீர்த்தத்திலிருந்து சுற்றில் 6வதாக உள்ளது.
குபேரனுக்கு மருத்துவரான பிள்ளையார்.......
பணத்திற்கு அதிபதியாக நாம் குபேரனைப் குறிப்பிடுகிறாம். அவர் திருப்பதி வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்தவர். ஒரு காலத்தில் குபேரன் எவருக்கும் பணத்தைத் தராமல் மூட்டை கட்டி வைத்திருந்தார். இதனால் பாவம் சேர்ந்து தொழு நோய் வந்து விட்டது. தன் நோய் குணமாக விநாயகரை வணங்கினார். அவருக்குப் பிள்ளையார் அருகம்பில்லை அரைத்து மருந்தாக கொடுத்து நோயை குணமாக்கினார். அதன் பிறகே குபேரன் மக்களுக்குப் பணத்தை வாரி இறைந்தார். எனவே விநாயகப்பெருமானை லட்சுமி குபேர கணபதியாக வழிபட்டால் குபேரனுடைய திருவருள் கிடைக்கும்.
கடன் அடைய மைத்ர முகூர்த்தம்......
உங்களுக்குப் பெரிய கடன் அடைபடாமல் இருக்கிறதாப கடன் அடைப்பட்டு நிம்மதி அடைவதும் குபேர யோகம் தான். மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் வாங்கிய தொகையில் சிறிதளவு அடைத்து விட்டால் ஒரு ஆண்டிற்குள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது உண்மை.
*குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!*
https://m.dailyhunt.in/news/india/tamil/shakthi+online-epaper-sakonle/kubera+kirivalam-newsid-76090394
No comments:
Post a Comment