தினம் ஒரு மத்திய பாஜக மோடிஜீ அரசின் நல திட்டம் #PMAY
பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) –
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022ல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (“பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா” : Pradhan Mantri Awas Yojana) ஒன்றை அறிவித்திருந்தார். அதன் படி நாட்டில் உள்ள பல ஏழை எளிய மக்கள் இன்று வரை இதில் பயன் பெற்றுள்ளார்கள்.
விண்ணப்பதாரர்களின் தகுதி
விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் இந்தியாவின் எந்த ஒரு பகுதியுலும் நிரந்தர வீடு வைத்து இருக்க கூடாது.
விண்ணப்பதாரர் அல்லது குடும்பத்தினர் பிரதான மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் இதற்கு முன்பு எந்த ஒரு சலுகையும் பெற்று இருக்க கூடாது.
திருமணமான தம்பதிகள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஒரே ஒரு வீடு மட்டுமே இந்த சலுகையின் கீழ் பெற முடியும்.
பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜானா திட்ட விபரம்
குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. நலிந்த பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோர் (LIG) ஆகியோருக்கு 6.5% மானியம் வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம். ஆரம்பத்திலேயே இந்த மானியத்தொகை உங்கள் வீட்டுக்கடன் கணக்கில் வழங்கப்படுவதால், உங்கள் மாதத்தவணை (EMI) வெகுவாகக்குறைகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் pmaymis.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் இணையதள விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டியது மட்டுமே.
தொகுதியில் உள்ள மக்கள் சொந்த வீடு கனவை நனவாக்க இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்தவும்.
No comments:
Post a Comment