Wednesday, 7 November 2018

2019 தேர்தல்.... நரேந்திர தமோதர்தாஸ் மோடி vs.

2019 தேர்தல்....

நரேந்திர தமோதர்தாஸ் மோடி
vs.
காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + பகுஜன் சமாஜ் + சாமாஜ்வாடி + TDP + RJD + Shiv Sena + TMC + DMK + AAP + JDU + NDTV + ABP NEWS + SCROLL + THE WIRE + SUN NETWORK + THANTHI TV + NEW 18 + புதிய தலைமுறை + பாக்கிஸ்தான் + சைனா + JNU + AMU + சர்ச்சுகள் + மதரசாக்கள் +  இன்னும் பல மீடியா மற்றும் புரட்சி பாய்ஸ் என பெரும் கூட்டம் கை கோர்த்து எதிர்க்க போகிறது.

பிரச்சனை எதிர்பக்கம் யார் யார் என்பதல்ல பிஜேபிக்கு எதிராக நிற்பவர்களில் யாரை நீங்கள் ஆதரிக்க போகிறிர்கள் என்பதே...

ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் மோடியை எதிர்க்கிறார்கள் ஆனால் யார் எப்படி எதிர்க்கிறோம் எதற்காக எதிர்க்கிறோம் என்பதே இங்கு பிரச்சனை.

ஹிந்துக்கள் பெட்ரோல் விலை பற்றி கவலைக்கொள்ளும் நேரத்தில் இஸ்லாமியர்கள்
ரோஹிங்கா இஸ்லாமியர்களை வெளியேற்றியதற்கு எதிர்கிறார்கள் இதில் எது மதவாதம் என்று நாம் யோசிக்க வேண்டும்.

ஜி எஸ் டி அதை நடைமுறைப்படுத்தும் விதம் போன்ற நாட்டின் முன்னேற்றம் பற்றிய சந்தேகப்பார்வை கொண்டு ஹிந்துக்கள் எதிர்த்தால்  அவர்கள் இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமியர்களுக்கு கொடுமை என்று மதம் சார்ந்தே முன்னெடுக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

ஜனாநாயக நாட்டில் மோடியை எதிர்ப்பது யாருக்கும் இருக்கும் உரிமை. ஆனால், அதற்கான மாற்று இருக்கிறதா என்று தயவு கூர்ந்து எதிர்ப்போர் சொன்னால் நானும் தெரிந்துக் கொள்வேன்...

மம்தா, முலாயம், அகிலேஷ், ஸ்டாலின் இன்னும் பலரும்  மோடியைவிட நல்ல நிர்வாகிகள் என்பதற்கு சான்று இருக்கிறதா? இவர்கள் எல்லாம் எதிர்கால இந்தியா என்ற நினைப்போடு செயல்படுத்திய திட்டங்கள் உண்டா? இன்று பலர் குறை சொல்லும் குஜராத்தை இவர்கள் மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து நீங்களே முடிவு செய்யலாம். கலவரத்திற்காக குற்றம் சுமந்தாலும் அதே மாநில மக்கள் ஏன் மோடியை ஆதரித்தார்கள் என்று தேடுங்கள் ஒருவேளை நீங்கள் நம்பும் உண்மைகள் புரியவரலாம்.

லல்லுவும் முலாயமும் அரசியலுக்கு வரும் பொழுது ஒரு சைக்கிள் வாங்க கூட காசில்லாமல் இருந்தவர்கள் இப்பொழுதோ நிலைமை என்ன? ராம்கோபால் யாதவ் சார்டட் விமானத்தில் பறக்கிறார், சிவபால் யாதவ் ஆடி காரில் ஊர்வலம் வருகிறார். இவையெல்லாம் நல்ல சம்பாத்தியம்தானா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

காங்கரஸின் இளவரசரை பற்றி சொல்லவே வேண்டாம் ஒருபுறம் போபர்ஸ் ஆரம்பித்து அனைத்து ஊழலுக்கும் முன் நிற்கும் இயக்கம். இன்று ராபர்ட் வதோரா சொத்தின் மதிப்பு சொல்லும் இவர்களின் லட்சணம். இதையெல்லாம் கூட ஆதாரமில்லை என்று ஒதுக்கலாம் ஆனால் ராகுல் பேசும் பேச்சையும் செயலையும் பார்த்தும் மோடிக்கு மாற்று இவர் என நினைத்தால் சிரிப்பதா அழுவதா தெரியவில்லை...

# மோடியை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான காரணம் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை, என்னை யாரும் வம்படியாக இவருக்காக பேசி என்னை மாற்றவில்லை. தீராத திராவிட கட்சி கூட்டில் வளர்ந்த என்னை இவர் எப்படி ஈர்த்தார் என தெரியவில்லை ஆனால் தெற்கே திராவிட கட்சிகள் ஆரம்பித்து காஷ்மீரின் பிடிபி வரை நான் எதிர்க்க ஒரே காரணம் என்னால் சொல்ல முடியும். அது "தேசியவாத எதிர்ப்பு அரசியல்" மட்டுமே. இதை ஒரு தேசம் என்று கூட ஒப்புக்கொள்ளாத இந்த கட்சிகளால் நாட்டிற்கு என்ன நன்மை விளைந்துவிடும் என அவர்களை மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள் என நான் அதிகம் யோசித்ததுண்டு.

# ஏழைகளை மோடி முன்னேற்றி நாளையே ஏழ்மையை ஒழித்துவிடுவார் என்று என்னால் சொல்ல முடியாது ஆனால் அதற்கான முயற்சியில் வேறு எந்த அரசியல்வாதியும் இவரை நெருங்க கூட முடியாது என்பதில் எனக்கு ஐயமில்லை.

# மேக் இன் இந்தியா, இந்து தேசம் இவையெல்லாம் மோடியால் முடியுமா தெரியவில்லை ஆனால், என் தேசத்தை உலகத்தின் முன் தலைநிமிர்ந்து வீறு நடை போட வைப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

# இந்தியாவின் பிரமிக்க வைக்கும் வரலாற்றை மோடி உணர்ந்தாரா என்பது தெரியவில்லை ஆனால் இந்த நாட்டின் எதிர்காலத்தை பற்றிய உண்மையான அக்கறையும் சிந்தனையும் அவருக்கு உண்மையில் இருப்பதாகவே நினைக்கிறேன் அதனால் தானோ தேர்தல் அரசியலை தவிர்த்து பல எதிர்ப்பை சமாளித்து திட்டங்களை வகுக்கிறார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

உங்கள் மனசாட்சியிடம் பல கேள்விகளை முன்வைத்து ஒரு தீர்க்கமான பதிலை தேடுங்கள். போட்டோசாப்களை ஒதுக்கி வைத்து ஆதாரங்களை தேடுங்கள் படியுங்கள் எதை யார் சொன்னாலும் ஒரு கணம் அதற்கான ஆதாரத்தை தேடுங்கள். தலைப்பை பார்த்து தாண்டவம் ஆடாமல் முழு விவரத்தையும் அலசி ஆராயுங்கள்...

நிச்சயம் உங்களுக்கான பதிலை உங்கள் தேடல் கொடுக்கும். நிச்சயம் இந்த நாட்டின் மீது காதல் கொண்ட யாருக்கும் இப்பொழுது நடக்கும் சீர்த்திருத்தங்கள் புரியும்.

#IamWithModi..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...