Wednesday, 7 November 2018

இந்து சம்பரதாயங்களை அழிக்காதீர்கள் - மறைக்காதீர்கள். அதனை பாதுகாப்பீர்.*

ஆரூரா.. தொண்டீசா..

*இந்து சம்பரதாயங்களை அழிக்காதீர்கள் - மறைக்காதீர்கள். அதனை பாதுகாப்பீர்.*

ஆன்மீக பக்த கோடிகளுக்கு வணக்கம்..

சைவ நெறியில் மற்றும் ஆன்மீகத்தில் இருக்கும் சம்பரதாயங்கள் , அறங்கள் , ஒழுக்கவிதிமுறைகள், வரலாறுகள் , புராணங்கள் , விஞ்ஞானத்தையே மிஞ்சும் கோயில் சிற்ப சிலைகள் என

பல விசயத்தில் ஆன்மீகத்தில் புதைந்து உள்ளது.

பல நூல்களை நம் இந்து சமயம் இழந்துள்ளது.

*குறிப்பாக அதர்வண வேதத்தில் போர் கருவிகள் எப்படி தயாரிக்க வேண்டும்? எப்படி இலக்கை செலுத்த வேண்டும் ?  என்று ஒரு முறை உள்ளது என்று  எனது தாத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.*

*இந்த வேதத்தில்தான் பாஸ்வேர்டு (password) உள்ளதாம்.*

நாம் எதை நினைத்து அம்பு இடுகிறோமோ அதுவாக மாறி எதிரிகளை தாக்குமாம்..

*எ- கா நாம் விடும் அம்பு நெருப்பாக மாறி எதிரியை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு உண்டான மந்திரத்தை கூறி எய்தால் அவ்வம்பு நெருப்பாக மாறி எதிரிகளை வீழ்த்துமாம்.*

இதை *கருத்தாக வைத்துதான்  ஏவுகனை தயாரித்து தக்க சமயத்தில் எதிரிகளை தாக்க password கொடுத்து தாக்குவார்களாம்.*

ஆக வேதத்தில் இருந்து இவ்வளவு விசயங்கள் மறைந்திருக்கின்றன. அதனை வெகு விரைவில் இவ்வுலகிற்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

மேலும் வேதத்தில் மனு வம்சத்தையும் , சூட்சுமம் ரகசியம் , பல அறியப்பாடத தகவல்களை வேதத்தில்  உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வேதத்தில் இல்லாத செய்தி எதுவும் இல்லை.

*"வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே"* - திருமூலர் சித்தர்.

வேதத்தின்  மூலம் பிரதி நம்மிடத்தில் இல்லை என்று ஒர் தகவல் உள்ளது. இருப்பின் தகவல் தெரிவிக்கவும்.

பொதுவாக விசயம் உள்ள நூல்கள் நம்மிடத்தில் இல்லை மேலும் ஒரு சில நூல்களை   நெருப்பில் இட்டு எரித்து விட்டனர் என்று தகவல்.

மேலும் திருமுறையில் நிறைய விசயங்கள் குறிக்கப்படுகின்றன.

குறிப்பாக

*அப்பர் பெருமான் தேவாரத்தில் புராண வரலாறுகளையும்.*

*சம்பந்தர் பதிகத்தில் ஊரின் பெருமையும் இயற்கை சூழலும்*

*மணிவாசகரின் திருவாசகத்தில் அப்பர் பெருமான் குறிப்பிடாததும் நமக்கு அறியாத புராண வரலாறுகளையும்  பலதை  கூறுகிறார்.*

*திருமூலர் சித்தர் ஆகமம் எத்தனை ? அந்த ஆகமத்தில் என்ன குறிக்கப்பட்டிருக்கிறது? யோகாசனம்  என்பதை பலவற்றை குறிப்பிட்டு நம்மை வியக்க வைக்கிறார்..*

*சேக்கிழார் பெருமான் சைவநெறியில் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் மற்றும் இறைவனுக்கு என்னெல்லாம் தொண்டுகள் செய்து முக்தி அடையலாம் என்று மிக தெள்ளத்தெளிவாக உள்ளன.*

அன்பர்களே ஆன்மீகத்தில் நிறைய விசயங்கள் புதைந்து இருக்கின்றன.

*பழைய காலத்தின் சம்பரதாயங்கள் எல்லாம் விஞ்ஞானத்தை மிரள வைக்கிறது .*

*நாம் செய்யும் சடங்குகள் எல்லாம் உடலையும் மனதையும் வலிமைபடுத்துகிறது.*.

*ஆகவே இந்து பாரம்பரிய சம்பரதாயத்தை போற்றுவீர் - பாதுகாப்பீர்..*

என்றும் பண்ணிசை பணியில் தொண்டீசன் ஓதுவார் மூர்த்திகள்.

தொண்டீசன்.. ஈரோடு..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...