*குலதெய்வ வழிபாடு கர்ம வினைகள் கரையும்*
குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில்மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
எத்தனைதெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறுசெய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.
அவைஇஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.
மற்ற தெய்வங்களும் கூடகுலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரதுகுலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார்.
மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்தியதேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள்.
மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாதகுலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்டபுண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும்வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள்என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்ம வினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.
குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரியவழிபாட்டினை செய்து வரவேண்டும்.
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்டநாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவைசூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
No comments:
Post a Comment