Sunday, 18 November 2018

25 நன்மைகள் மோடி அரசால்

R. Balu:
மோடி பதில் சொல்றது இருக்கட்டும் - இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்? புதியதலைமுறை முதல் நக்கீரன், ஆனந்த விகடன் வரை நான் கேட்கிறேன்.

1.)பால் உற்பத்தியில் 2013ல் மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது ஒரு நாளைக்கு 307 gm/day என்ற அளவில் இருந்தது கடந்த 3.5 வருட மதிப்பிடின் படி இது ஒருநாளைக்கு 351 gm/day. அதாவது 24% அளவிற்கு வளர்ச்சியை சாதித்துக் காட்டியுள்ளார் மோடி. இதன் மூலம் 132 Milion Tonnes என்று இருந்த மொத்த ஆண்டு உற்பத்தி இன்று 166Milion Tonnes என்று கூடியுள்ளது. காரணம் பால் உற்பத்தியிலும் முட்டை உற்பத்தியிலும் மோடி மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்த வேலைகள். {ஆதாரம் National Dairy Development Board கேட்டு வாங்கிப் பார்க்கவும்}

2)கடந்த 3ஆண்டுகளில் 7.25 கோடி soil health cards விவசாய மண் பரிசோதனை செய்து அதற்குத் தக்க விவசாயம் இயற்கை விவசாய முறை ஊக்குவிக்க - 7.2லட்சம் ஹெக்டர் நிலம் என்று இருந்த அளவை இவர் ஆட்சிக் காலத்தில் 20லட்சம் ஹெக்டேர்அளவிற்கு கூட்டி உள்ளார். (அதே நேரம் அறிவியல் சார்ந்த விசயங்களையும் தேவைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உண்டு}

3)மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பில் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகளை நீக்கியுள்ளார். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பினை சரி செய்துள்ளார். (வறட்சி பாதித்த மாவட்டங்கள் பகுதிகளில் 150நாள் வேலைத் திட்டமும் கூட்டியுள்ளனர்.) {ஒரு நிர்வாகி என்பவர் புது புதுத் திட்டங்கள் போடுவது அல்ல விஷயம். இருக்கும் திட்டத்தில் உள்ள வேட்டைகளை சரி செய்ய வேண்டும். அது தான் நல்ல நிர்வாகிக்கு அழகு. (அவர் அதை சரி செய்தார் ஆனால் மக்கள் 100நாள் வேலை திட்டம் என்று சும்மா பேசிவிட்டு வந்து காசு வாங்குகிறார்களே - அதை தவறு என்று கண்டித்து எந்த டீவி விவாதம் செய்தான்?)

4)World Health Organization கூறுகிறது உலகத்தில் சுமார் 30கோடி மக்கள் தூய்மை இல்லாத காற்றை சுவாசிக்கிறார்கள். இதுவே பெரும் நோய்களுக்கும் சுவாச பிரச்சனைகளுக்கும் கரணம் ஆகிறது. இந்தியாவில் 2016 கிராமப்புற மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கி 1வருடத்தில் 1.5 கோடி இணைப்புகள் வழங்க ஆணையிட்டார் மோடி. ஆனால் 2கோடி(2017) இணைப்புகளை வழங்கிச் சாதித்தார். இதன் மூலம் விறகு , மண்ணெண்ணெய் எரித்து சுவாச கோளாறு கொண்ட நிலை மாறியுள்ளது. இதை World Health Organization முன் வந்து பாரட்டயுள்ளது.

5)நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 2016-17 ஆம் ஆண்டு தகவல்படி 27.338 கோடி டன். இது மன்மோகன் விட்டுச் செல்லும் போது 25கோடி டன் தான். {நாடு சோமாலியா ஆகும் என்று எவனாது சொன்னா பிடிச்சு நாளு அப்பு அப்புங்க. சும்மா whatsapp facebook என்று வரும் எந்தச் செய்தியையும் நம்பாமல் முறையாக அறிக்கைகளைக் கொஞ்சம் தேடி படிங்க.} அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கேட்பது தவறு என்பது இதன் மூலம் புரியும். விவசாயம் பொய்த்து போகும் பொது என்ன அரசு உதவியது???

6)ஓய்வூதியம் ஆரம்பித்து கேஸ் மானியம் வரை அனைத்தையும் நேரடியாக மக்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறது அரசு. இல்லை நமது அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தே சாகவேண்டும்.

7)நரேந்திர மோடி வருவதற்கு முன் அனைவருக்கும் தெரியும் இங்கே மிம்சாரம் எந்த அளவிற்குப் போய் போய் வரும் என்று. ஆனால் இன்று??? காரணம் 2014ல் ஆட்சிக்கு வரும் வரை நாட்டின் 24க்கும் மேற்பட்ட thermal power plant தேவையான நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு தட்டுப்பாடு இருந்தது. காரணம் நிலக்கரி நேரத்திற்குச் சென்று சேராமல் சுரங்கங்களில் நிற்பது. ஆனால் இன்று???? அது 100% சரி செய்துள்ளனர். எந்த ஒரு power plant தேவையான நிலக்கரி தேவை முழுவதும் நேரத்திற்குக் கிடைக்கவும் கையிருப்பு வைத்துக் கொள்ளவும் தனிக் கவனம் கொடுத்துள்ளார் மோடி. அதனால் தான் இங்கே ஒழுங்கா மிம்சார உற்பத்தி நடக்கிறது. கொஞ்சம் தகவல் வேண்டும் என்றால் NTPC அலுவலகத்தை அணுகவும். நாட்டின் இன்றைய மிம்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.மன்மோகன் விட்டுச் செல்லும் போது அது வெறும் 199,877 மெகா வாட் தான். (இந்த லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000கோடி இழப்பையும் சரி செய்துள்ளார் மோடி.}

8)மின்சார உற்பத்தியில் மட்டும் சாதனை அல்ல. உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மிம்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் உலக வெப்பமயமாதல். எனவே மன்மோகன் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய நாட்டின் தேவையில் 75% மிம்பாரம் நிலக்கரி மூலம் தான் செய்தோம். ஆனால் இன்று Installed capacity பாருங்கள் 57.7% தான் நிலக்கரி மூலம் மேற்கொள்கிறோம் என்று புரிகிறது. ஆக மக்கள் மின்சார தேவையை பூர்த்தி செய்தது மட்டும் அல்ல அதைச் சுற்று சூழல் ஆபத்தைக் குறைக்கும் விதமாகவும் சாதித்து உள்ளனர். இதை எந்தச் சுற்று சூழல் ஆர்வலர் பாராட்டினான் இங்கே??? {இந்தியாவில் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன

் மிம்சார திருட்டு சர்வ சாதாரணம். இப்போது அதை எந்த அளவிற்குக் குறைத்துள்ளார் என்று கொஞ்சம் தேடிப் படியுங்கள்.}

9)இந்திய இன்று சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்யும் அளவு 25.90 billion units. மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது 1.6 billion unitsதான் சோலார் பயன்பாடு. அது தவற 50% சப்சிடி தருகிறார்கள் சோலார் மிம்சார பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்ல. கல்வி நிலையங்கள் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை சோலார் பயன்பாட்டை அதிகப்படுத்த மானியம் கொடுக்கிறது அரசு.

10)மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் உஜாலா திட்டம் மூலம் LED லைட்டுகள் விநியோகம் ஆரம்பித்து வைத்தது. மானிய விலையில் மிகக் குறைந்த விலையில். அன்று இது என்ன திட்டம் என்று கேலி கிண்டல் எல்லாம் வழக்கமாக வந்ததுவே. ஆனால் இன்றைய தேதியில் (24 MAR 2018) நாடு முழுவதும் சுமார் 29,30,45,393 லைட்டுகள் விநியோகம் செய்துள்ளது அரசு. அதன் மூலம் 3,08,26,110 டன் கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தி உள்ளது அரசு. யார் செய்த தவற்றை யார் சரி செய்தார்? மக்கள் எல்லோரும் சேர்ந்து செய்த தவற்றை பிரதமர் சரி செய்கிறார். தமிழகத்திலும் இந்த பல்புகள் கொடுத்தனர் என்ன சத்தம் இல்லாமல் மோடி பெயர் வெளியை வரவிடாமல் கொடுத்தனர். அதானே நமது அரசு ஊழியர்கள். 27கோடி மரங்கள் சேர்ந்து செய்யவேண்டிய ஒரு பணியை பிரதமர் தன திட்டம் மூலம் செய்துள்ளார் எவனது செய்தி வெளியிட்டான்????

11)தொழில் துறை வளர்ச்சி சார்ந்து உலகத்தின் மிக பெயரிய asset manager நிறுவனமான BlackRock Inc.& DSP இணைத்து வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் தற்போதைய மோடி அரசின் கீழ் முதலீடு செய்ய ஏதுவான சூழல் 81% திருத்தியாக இருப்பதாகவும் , வேலைத் திறன் மேம்பாடு 54% மேம்பட்டுள்ளதாகவும் சான்றிதழ் தருகிறது. இது உலக அளவில் முதலீட்டாளர்கள் தொழில் முனைவோர் மத்தியில் நம் நாட்டின் மீதான தற்போதைய பார்வையைப் பிரதிபலிக்கிறது. காரணம் ? மிக மிகக் குழப்பமான வரி வழூல் முறையை முழுமையாக ஒழித்து GST வரியின் மூலம் தொழில் நடத்தும் அனைவரையும் நிம்மதி மட்டும் அல்ல பெரும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் மோடி.

12) ஏறக்குறைய 24,000NGOகள் தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று நாட்டில் ஆபத்தான மதம் மாற்றுவது முதல் நாட்டின் பிரிவினைவாத விதைகளை விதைத்து வந்த கேடுகெட்ட உழைக்காமல் வாழ்ந்த பெரும்பாலான வழிகள் மூடப்பட்டன. இன்றைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது முற்றிலும் கண்காணிப்புக்குள் கொண்டுவதுள்ளது அரசு. 3,068 தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 22ஆயிரம் கோடி வருடம் வருடம் நன்கொடைகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்தனர். தமிழ் நாட்டில் ஒரு கிருஸ்தவ நிறுவனம் மட்டும் 2011-12ல் 233.38 கோடி நிதி பெற்றது. எதற்கு?? அதான் அணுவுலை உதய குமார முதல் அனைத்து கிருஷ்டவ மதம் மாற்றும் NGOகள் அதன் கூட்டத்தினர் கதறுகிறார்கள். இது உண்மை இல்லையா?

13)அனைவரும் கொஞ்சம் நாட்டின் வரலாற்றில் தீவிரவாதிகள் தாக்குதலை எடுத்துப் பாருங்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நிர்வாக திறமை. நம் நாட்டில் மிக ஆபத்தானது இடதுசாரி(கம்யூனிஸ்ட்) தீவிரவாத அமைப்புகளான நக்சல் மாவோஸ்ட் போன்றவை தான். மன்மோகன் ஆட்சிக் காலத்தில் சராசரியாக வருடம் 993காவல் படை வீரர்கள் இறந்தனர். ஆனால் இன்று 350வீரர்களாகக் குறைந்துள்ளது. UNLFW தீவிரவாதிகளை மட்டும் 2015ல் 158பேரை தீர்த்து கட்டினோம். ஒரு பத்திரிக்கையாளர் கொலைக்குக் கதறும் இந்த பிரகாஸ் ராஜ் என்ற கம்யூனிஸ்ட் நடிகன் வருடம் வருடம் 1000வீரர்கள் வரை இந்த இடதுசாரி தீவிரவாதிகளால் இறந்தார்களே அவர்களைப் பற்றி என்றாவது வாயை திருந்திப்பாரா???? மக்கள் பாதுகாப்பு ? 2000 களில் வெறும் 120நிகழ்வு கூட கிடையாது என்று இருந்த இந்தியாவில் வருடம் 700நிகழ்வுகள் என்ற அதிகரித்தது இதே மன்மோகன் காலத்தில் தான்.

14)2,09,032 shell நிறுவனங்கள் இழுத்து மூடியது மத்திய அரசு. 2.09 நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியது அரசு - காரணம் ? இவர்கள் இந்தவிதம் வரி எய்ப்பு செய்து வெளிநாடுகளுக்குக் கருப்பு பணத்தை அனுப்பி வந்தனர். அது முழுவதும் முடக்கியது. அதான் புதிய தலைமுறை முதல் மணல் மாபியா நியூஸ் 7வரை கதறுகிறார்கள். இன்றைய தேதியில் பணம் உள்ளே வெளியே செல்லும் வழிகள் பெரும்பாலும் கண்காணிப்புக்குக் கீழ் வந்ததால் மொத்த அரசியல் கட்சியும் ஒரு பக்கத்தில் திரள்கிறார்கள் மோடி என்ற ஒற்றை மனிதனை எதிர்க்க. {ஆயுத எழுத்து படத்தில் வரத்து போல சூரியா எல்லாம் வந்து இந்த நாட்டை மாற்று அரசியல் செய்ய முடியாது. இருக்கும் சட்டத்தில் இந்த மனிதர் வந்ததே தெய்வ புண்ணியம்.}

15)தனி நபர் வருமான கணக்கு காட்டுவோர் சதவீதம் கூடியுள்ளது. 2013-ல் 4,72,67,582 வருமான வரி கணக்கு தாக்கல் என்றால் 6,26,91,961 என்ற அளவில் கூடியுள்ளது. அதன் மூலம் நாட்டின் வருமானம் 8,49,818 கோடி வருமானம் என்ற அளவு கூடயுள்ளது. இது வெறும் 3வருடத்தில் அடுத்த இரண்டு வருடத் தகவல்.

16)Foreign direct in

vestment (FDI) வெறும் மோடி பதிவு ஏற்று மூன்று வருடங்களில் 38% அதிகரித்து 1.5லட்சம் கோடி என்ற அளவில் இருந்து 3,90,000கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதில் ஒரு வருடத்தில் மட்டும் Make in india திட்டம் மட்டும் 58,500கோடி வரை ஈர்த்துள்ளது. {உடனே எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கூறி கேலி தான் இங்கே பரவும். உற்பத்தித் துறை முன்னேற்றம் என்பது முதலீடுகள் அதனை சுற்று உருவாகும் வேலை வாய்ப்பைப் பொறுத்தது. இது நேற்று முதலீடு செய்து நாளைக்கே கிடைக்கும் பலன் அல்ல. இது மெல்லப் பலன் கொடுத்து 3வருடத்தில் மேல் எழும்ப மட்டுமே உணர முடியும். கேலி எவனும் பேசலாம். இன்று Mi போனில் ஆரம்பித்து சாம்பெங் நிறுவனம் முதல் ராணுவ தடவாளங்கள் வரை உள்நாட்டு உற்பத்தி பெருகியுள்ளது. தாக்கம் மெல்ல உணர முடியும்..}

17)கனிமங்கள் உள்நாட்டில் அதிகம் சுரங்கங்களில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அவை தான் மூலப் பொருட்கள் - அந்த வகையில் chromite 3.73 MMT இன்று - மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT (93% ஒருசாவில் இருந்து தான் கிடைக்கிறது.) , Copper 3.73 MMT இன்று - மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT

18) உலோகங்கள் : அலுமினியம் , காப்பர் , லீட் , ஜிங் அனைத்தும் இயற்கையாகச் சுரங்கங்களில் கிடைத்தாலும் அவை உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டும். அதன் படி Demand/ Supply தேவைக்கு ஏற்ப கூட்டியுள்ளது அரசு. மிக முக்கியம் காப்பர் இருப்பு 78% இருப்பது ராஜஸ்தான் , மத்திய பிரதேசத்தில் தான். உனக்குக் காப்பர் எனக்கு கேன்சர் என்று எந்த மத்திய பிரதேஷ் மற்றும் ராஜேஷ்தான் மக்களும் சொல்லவில்லை. எங்கள் காப்பர் மட்டும் உங்களுக்கா என்று கேட்கவும் இல்லை. இந்தியாவில் தனிமங்கள் , உலோகங்கள் பெரும்பாலும் கிடைக்கும் இடங்கள் ராஜஸ்தான் , ஓடிஸா , சட்டிஷ்கர் , கர்நாடகா ,மத்திய பிரதேஷ் தான் அதிகம். அந்த வகையில் தமிழகத்தில் மிக மிகக் குறைவு சுரங்கங்கள் தனிமங்கள் இருப்பு. இது இயற்கையாகவே.

19)பணவீக்கம்(money inflation) தான் முக்கிய காரணம் உணவுப் பொருட்கள் வேலை ஏற்றம் அடைய. அதைக் கட்டுக்குள் வைக்கக் வேண்டும். ஆனால் மன்மோகன் காலத்தில் அது சராசரியாக 11% இருந்து. உச்ச கட்டமாக 2010ல் அது 13.33% வரை சென்றது. அவர் விட்டுச் செல்லும் போது கூட பணவீக்கம் 10.22% இருந்தது. மோடி கடந்த 3.5 வருடத்தில் அதை 4% வரை கட்டுக்குள் வைத்துள்ளார். 2017 ஜீன் வரை கூட 2.2% என்ற அளவுக்குத் திறமையாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எங்கேயும் உணவுப் பொருட்களை பதிக்கி வைத்து செயற்கையாக விலை ஏற்றம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த நிலை என்றும் கூறலாம். கொஞ்சம் 4வருடம் முன் இருந்த நிலையோடு ஒப்பிடுங்கள் விளங்கும்.

20)மோடி வந்து காஷ்மீர் ஹிஸ்புல் முஜாகதீன் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அனைவரையும் தீர்த்து கட்டினர். வருடம் வருடம் சிவனடியார்களை கொலை செய்த போது எவன் வாயைத் திறந்தான் இங்கே? ஆனால் ஒரு கொலைக்கு கதறுகிறான் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள். (காஷ்மீரில் மட்டும் அதிகரித்துள்ளது - காரணம் நமது ராணுவம் முழுவதும் தீவிரவாதிகளை அழித்தொழிக்க வேகம் காட்டுவதால்)

21)சுற்றுலாத் துறையில் 2012ல் மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது 65ஆவது இடத்தில் இருந்த இந்தியா இன்று 2017ல் 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மன்மோகன் விட்டுச் செல்லும் போது 4.3% வளர்ச்சி, அது 2013ல் 5.9%. ஆனால் 2017ல் அறிக்கை படி 16.4% என்று கூடியுள்ளது. அது அடுத்த அடுத்த மாதங்களில் முறையே 20% வரை தாண்டியுள்ளது. ஏன்? இந்தியாவிற்கு இன்று சுற்றுலா விசா பெறுவது மிக மிக எளிது. இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வருகை கூடுகிறது. அத்துடன் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (அதிகம் மக்கள் தமிழகம் கேரளா தான் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தொடர் போராட்டங்களால் நிலை மாறுகிறது தமிகழத்தில்.}

22)இன்று நீங்கள் passport விண்ணப்பிக்கவும் , பாஸ்போர்ட் விரைந்து கிடைக்கவும் ஆவன செய்துள்ளனர். உலக அளவில் உள்ள இந்தியர்கள் மிக எளிதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரகத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. உலக இந்தியர்கள் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியாக ஒன்றிணைக்கப்பட்துள்ளார்கள். பெண்கள் கல்யாணம் ஆனா பின் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை தங்கள் தந்தை பெயரிலேயே தொடரலாம் என்று அறிவித்தனர். இன்று இந்தியர்கள் 58நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passportindex இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74(henleypassport ரேங்க் 81) என்று உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் வாக்கு அந்த அந்த நாடுகளில் இருந்து செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார் நரேந்திர மோடி.

23)மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இந்தக் காடுகளின் பரப்பளவு கடந்த 3.5வருடத்தில் Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) என்று தனித்திட்டம்

அமைத்து சுமார் 701673 என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. அதாவது 10ஆயிரம் சதுர கிலோ அளவிற்குக் காடுகள் பரப்பளவு கூடியுள்ளது. இதைக் கொஞ்சம் மன்மோகன் பத்து ஆண்டுகளில் என்ன கவனம் செலுத்தினார் என்று எடுத்துப் பார்க்கவும். அவர் விட்டுச் செல்ல 6,92,027என்ற அளவில் இருந்தது.

24)மிம்சார பற்றாக்குறை 3.5% என்ற அளவிற்கு குறைந்துள்ளது. மொத்த உற்பத்தித் திறனை 22,566MW கூட்டியுள்ளனர் , Trasmission line 22,100 என்று அதிகரித்துள்ளது. இது அனைத்துமே இந்தியாவில் இதுவரை நடந்த ஆட்சிகளிலேயே மிம்சார துறையில் நடந்த மிக அதிகம்பட்ச உச்சம்.

25)இந்திய விரைவு சாலைகள் அமைப்பதில் தினமும் 30கிமீ என்ற வேகத்தை இந்திய அடைந்துள்ளது. இது மன்மோகன் காலத்தில் 18கிமீ என்று இருந்தது. காரணம்? அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் விரைந்து பேமென்ட் முதல் திட்ட அனுமதிவரை வேகபடுத்தியுள்ளது மோடி நிர்வாகம். மன்மோகன் விட்டுச் செல்லும் போது ஆண்டுக்கு 4260கிமீ சாலை போடுவதும் , 3,625 திட்டங்கள் ஒப்புதலும் அடைந்து பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மோடி அரசு 2016-17ல் மட்டும் 8,231கிமீ வேலையை முடித்து 16,034கிமீ சாலை அமைக்கு மணியை விரைவு படுத்தியது. மன்மோகன் இறுதி 3ஆண்டுகளில் மொத்தம் அனுமதி கொடுக்கப்பட்டு நடைபெற்ற சாலை அமைக்கும் திட்டங்கள் 15,380கிமி தூரத்திற்கானது. ஆனால் கடந்த 3ஆண்டுகளில் மோடி அரசு நிர்வாகம் 34,112கிமி சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கி வேலைகள் விரைவு படுத்தியுள்ளனர் அதனால் தான் ஒரு நாளைக்கு 30கிமி சில நேரம் 41கிமி வரை கூட சாலைகள் தினமும் போடும் அந்த வேகம் உச்சத்தில் உள்ளது.

நான் இங்கே பத்திரிகை துறைகளைக் கேட்கிறேன்:

இரவு ஆனால் போதும் விவாதம் நடத்துகிறேன் பேர்வழி என்று அதிமுக ஆட்சி கலையுமா? நீடிக்குமா ? உடையுமா ??? பிஜேபி BTeam அவனா இவனா??? ரஜினி வருவாரா போவாரா ??? என்று எதையாது உருப்படாத தலைப்பை வைத்து - அதற்கு நாளு வேலை வெட்டி இல்லாதவர்களை பிடித்து வந்து விவாதம் செய்கிறேன் என்று கூறி காட்டு கத்து ஆளாளுக்கு கத்திவிட்ட்டு எவன் குரல் சத்தமாகக் கேட்கிறதோ அவனே பெரியவனாக நிகழ்ச்சி முடிய - முடிந்த வரை மோடி எதிர்ப்பைப் பதிவு செய்வது தானே இங்கே இந்த மீடியாக்கள் வேலை????எத்தனை ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தின புதிய தலைமுறை முதல் news7வரை???? எல்லாமே TRP ரேட்டிங் எப்படி வாங்குவது என்று திரிய நீங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள்????

நக்கீரன் , ஆனந்த விகடன் நீங்களெல்லாம் திருந்தவே மாடேங்களா??? எப்படியது முரண்பாடான ஏதாவது செய்தி போடவேண்டும் பத்திரிகை நல்ல விற்பனை ஆகவேண்டும் அது தானே நோக்கம்?? நக்கீரன் என்ன பத்தி கேள்வி மோடி அவர்களை கேட்பது நான் கேட்கிறேன் மேலே உள்ள 25 விசயங்களை என்றாவது பாராட்டி - அதில் மேம்படவேண்டியவை என்ன அதில் மக்கள் எந்த விதம் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று என்றாவது உங்கள் பத்திரிகை ஆரோக்கியமாகச் செய்திகள் வெளியிட்டது உண்டா?? நாட்டில் நல்ல செய்தி விவாதம் போட்டா எவன் வாங்குவான் என்பதால் பிரிவினைவாதி எவன்டா அவன வச்சு எப்படி காசு சம்பாரிகளாம் என்று தானே வியாபார திட்டம் போடுகிறீர்???? எனக்கு தெரிந்து தமிழகத்தில் பத்திர்ககையாளர்கள் தான் மிக மோசமான கொள்ளைக்கார கும்பல். மிரட்டல் உருட்டல் எல்லாம் இவர்கள் கைவந்த கலை. இத்துலாம் பத்திரிகை துறை?

தினமும் 500குழந்தைகள் டயேரியா மூலம் இந்தியாவில் இறந்து போகும் நிலை உள்ளது இந்திய மக்கள் சுற்றுப்புற தூய்மை. கிராமப்புறங்களில் இன்றும் 54% மேல் கழிப்பறைகள் கிடையாது. இத்துலாம் மக்களைச் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் யாருக்காது உண்டா???? ஆனால் கடந்த 40வருடங்களில் மொத்தமே அணு உலையால் 30உயிர் இழப்புகள் கூட இல்லாத, அதுவும் விபத்தாக நடக்க- அணுவுலை வந்தால் பல உயிர்கள் நாசம் என்று கற்பனை வாதத்திற்குக் கொடுத்த முக்கியத்தை - தினமும் 500 குழந்தைகள் இறந்து போகும் இந்தக் கொடூரத்திற்கு கொடுத்திருந்தால் மக்களைத் திருத்தி இருக்கலாமே? உங்களுக்கு எல்லாம் வெக்கமே இல்லையா பத்திரிகை நடத்த?

இதில் மீமிஸ் வரும் தகவல் எல்லாம் உண்மை என்று நம்பி திரியும் ஒரு கூட்டம் எதையாது கேள்வி கேட்பது. கொஞ்சமாது வரும் தகவல் உண்மையா என்று தேடினாலே போதும் பாதி நலம்.

(மொத்தம் 100ல் அடுத்த 25 விரைவில். நான்கு பகுதிகளாக வெளியிடுகிறேன்.)

-மாரிதாஸ்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...